Mayura Akhilan- Oneindia Tamil
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடைசியாக
டிசம்பர் 4ஆம் தேதியன்று மாலை 4.20 மணியளவில் ஜெய் வீர ஹனுமான் சீரியல்
பார்த்தார் அப்போது திடீரென அவர் படுக்கையில் சாய்ந்தார் என சசிகலா தனது
வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ஆறுமுகமசாமி ஆணையத்தில் தனது வாக்குமூலத்தை பிரமாணப்பத்திரமாக தாக்கல்
செய்துள்ளார் சசிகலா. அதில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல்
டிசம்பர் 5ஆம் தேதிவரை நடந்த சம்பவங்களை 55 பக்கங்களில் வாக்குமூலமாக பதிவு
செய்துள்ளார்.
அதில் செப்டம்பர் 21ஆம் தேதி முதலே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் இருந்துள்ளது.
மெட்ரோ ரயில் விழாவில் மெதுவாக நடந்து வந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.
அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. வீட்டிற்கு வந்து
ஓய்வெடுத்த அவர், 22ஆம் தேதியன்று சோர்வாக காணப்பட்டார் அவர் தலைமை செயலகம்
செல்லவில்லை என்று கூறியுள்ளார் சசிகலா.
சசிகலா வாக்குமூலம்
சசிகலா வாக்குமூலம்
செப்டம்பர் 22ஆம் தேதியன்று வீட்டிலேயே பைல் பார்த்துள்ளார்.
இரவு 9
மணிக்கு மேல்தான் அவருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது பாத்ரூமில் மயங்கி
விழுந்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோவிற்கு எடுத்து சென்றோம்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவருக்கு நினைவு திரும்பியது.
நலமடைந்த ஜெயலலிதா
நலமடைந்த ஜெயலலிதா
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை சீரானது.
22ஆம் தேதியே சில பைல்களைப் பார்த்தார். 27ஆம் தேதி காவிரி விவாகாரம்
தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் மீண்டும் உடல்நிலை
மோசமானதால் எம்டிசிசியு அறைக்கு மருத்துவர்கள் மாற்றினர்.
யார் யார் பார்த்தது?
யார் யார் பார்த்தது?
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ்
கண்ணாடி வழியாக பார்த்துள்ளார். ஓபிஎஸ், தம்பித்துரை, அமைச்சர்
விஜயபாஸ்கர்,நிலோபர் கபில் ஆகியோர் பார்த்துள்ளனர்.
ஜெய் வீர ஹனுமான்
ஜெய் வீர ஹனுமான்
ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருந்தது. நலமாகவே ஓய்வெடுத்து வந்தார்.
டிசம்பர் 4ஆம் தேதியன்று மாலை 4.20 மணியளவில் அவர் ஜெயாடிவியில் ஜெய் வீர
ஹனுமான் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவருக்கு காபி கொடுக்கப்பட்டது.
சீரியல் முடிந்த பின்னர் குடிக்கிறேன் என்று படுக்கையில் படுத்த படியே
சொன்னார்.
வலிப்பு வந்தது
வலிப்பு வந்தது
சீரியல் முடிந்த பின்னர் காபி குடிப்பதற்காக கையில் வாங்கினார். அப்போது கை
நடுங்கியது. வலிப்பு ஏற்பட்டது போல உடல் வெட்டியது. அப்போது டாக்டர்கள்
சிகிச்சை செய்தனர். நான் அக்கா...அக்கா...என்று கத்தினேன். மருத்துவர்கள்
வேகமாக கத்த சொன்னார்கள். நான் கத்தி அழைத்தேன் ஜெயலலிதாவின் கண்கள்
திறந்தன, பின்னர் மூடிக்கொண்டன.
ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள் என சசிகலா
தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 5ஆம்
தேதியன்று ஜெயலலிதா மரணமடைந்தார் என நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக