tamilthehindu :பாஜக சுய பரிசோதனை செய்தால் கடந்த நான்கு ஆண்டுகளாக, வாக்காளர்களுக்கு
வெற்று வாக்குறுதிகளையும், வீண் முழக்கங்களையும் கொடுத்துத் தொடர்ந்து
திசைதிருப்பி வருவது அவர்கள் மன சாட்சிக்கே தெரியும் என பட்ஜெட் குறித்து
மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட
அறிக்கையில், ''மத அடிப்படைவாதம், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை,
அரசுக்கு நெருக்கமான ஒருசில அமைப்புகள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு
செயல்படுவது போன்ற காரணங்களால், ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகளின்
பட்டியலில் 32-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 42-வது இடத்திற்கு
சரிந்துவிட்டது.
இந்நிலையில், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தற்போது
சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழகத்திற்கு
பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநிலத்தில்
நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள், நதிநீர் இணைப்புத் திட்டங்கள்,
ஒக்கி புயல் பேரிடர் நிவாரண நிதி போன்றவை குறித்து நிதிநிலை அறிக்கையில்
எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
குறிப்பாக,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில்
கொடுத்த தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்களில், ஒரு
திட்டத்துக்கு கூட இந்த நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படவில்லை.
மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களின் நலன் ஒட்டுமொத்தமாகப்
புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு திமுக சார்பில் எனது கண்டனத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.