சனி, 3 பிப்ரவரி, 2018

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளில் பயங்கர தீ விபத்து!

மீனாட்சி அம்மன் கோவிலில் 3 வாசல்கள் வழியாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிமாலைமலர் : மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த கிழக்கு வாசல் மூடப்பட்டுள்ளது. மற்ற 3 வாசல்கள் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். #MeenakshiAmmanTemple மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலின் 4 கோபுரங்கள் வழியாகவும் பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதில் முக்கிய வாசல்களாக கருதப்படுபவை கிழக்கு மற்றும் தெற்குவாசல்கள்.
சுவாமி-அம்மன் சன்னதிகளுக்கு என தனித்தனி கிழக்கு வாசல்கள் உள்ளன. இந்த வாசல்களில் ஏராளமான கடைகள் உள்ளன. இதில் சுவாமி சன்னதி கிழக்குவாசல் கடைகளில் தான் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக கிழக்கு வாசல் மூடப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக இன்று கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் கூறுகையில், தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக் கப்படுவார்கள் என்றார்.
இந்த நிலையில் கலெக்டர் வீரராகவராவ் சம்பவ இடத்தை ஆய்வு செய் தார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கோவிலின் மற்றவாசல்கள் வழியாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
இதனை தொடர்ந்து கோவிலின் கிழக்குவாசலை தவிர மற்ற 3 வாசல்களின் வழியாக பக்தர்கள் இன்று காலை வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக