வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

TDP Vs BJP war? தெலுங்கு தேசம்- பாஜக போர் ஆரம்பம் .... பாஜகவின் இடைதேர்தல் தோல்வியின் தாக்கம்?


தினகரன் :புதுடெல்லி: ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சிகளை கலக்கமடைய செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு தோல்வி ஏற்பட்டது. இதேபோன்று மேற்குவங்கத்தில் ஒரு மக்களவை, ஒரு சட்டமன்ற தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனால் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அலை வீசுவதாக தெலுங்கு சேதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கருதுகின்றன. இடைத்தேர்தல் தோல்வியால் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதனிடையே வடகிழக்கு மாநிலங்களான மேகலாயா, நாகலாந்து, திரிபுராவில் சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் கை ஒங்கியுள்ளது. இதனால் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்த 3 மாநில தேர்தல் முடிவுகளும் பாஜகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக