சனி, 3 பிப்ரவரி, 2018

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து ... மதக்கலவரம் உண்டாக்க சதி? சிலைகள் புராதான சின்னங்களும் எரிந்தன ....

மீனாட்சி அம்மன் கோவிலில் சிலைகள்-தூண்கள் சேதம்: மேற்கூரை-புராதன சின்னங்களும் எரிந்தனமாலைமலர் :மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிலைகள், தூண்கள் மற்றும் புராதன சின்னங்களும் எரிந்து சேதமடைந்தன.
 மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் கிழக்குவாசலில் மட்டும் மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு தனித்தனி வாசல்கள் உள்ளன. இந்த வாசல்களில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அடுத்தடுத்து உள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளிநாட்டினரும், பல்வேறு மாநிலத்தவரும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வதால் கோவில் பிரகாரங்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இங்கு புராதன சிலைகள், படங்கள், வளையல்கள், பொம்மைகள் சிறுவர்களை கவரும் வகையில் பேட்டரி பொருத்திய பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
நேற்று இரவு கோவிலின் வழிபாடு முடிந்த பிறகு வழக்கமான நேரத்தில் நடை சாத்தப்பட்டது. அதன் பிறகு கோவில்வாசலில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. அனைவரும் வெளியேறிய பின்னர் பாதுகாப்பு போலீசார் மட்டும் கோவில் வாசலில் பணியில் இருந்தனர்.

இந்த நிலையில் சுமார் 10.30 மணி அளவில் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் இருந்து புகை வெளிவந்தது. இதனை கண்ட போலீசார் உடனடியாக கோவில் நிர்வாகத்தினருக்கும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அங்கு தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டது.


கிழக்கு வாசல் அருகே தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைக்க முயன்றபோது தண்ணீர் பைப்பின் நீளம் குறைவாக இருந்தது. இதனை தொடர்ந்து மற்ற தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் நின்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி வேகமாக நடைபெற்றது.

கடைகள் சிறிய அளவிலும், பொருட்கள் அதிகமாகவும் இருந்ததால் தீ வேகமாக பரவியது. இதனால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

ஆனாலும் தீயணைப்பு படையினர், கோவில் நிர்வாகத்தினர், போலீசார், வருவாய் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டதன் காரணமாக 3 மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டு மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்தின்போது கிழக்கு நுழைவு வாயிலில் இருந்து ஆயிரங்கால் மண்டபம் வரை இருந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. அந்த பிரகாரங்களில் உள்ள கோவில் தூண்கள் அதில் இருந்த புராதன சிலைகளில் ரசாயண கலவை பூசப்பட்டு இருந்ததால் கல்தூண்கள், சிலைகளிலும் தீ பற்றி எரிந்தது. இதனால் தூண்களில் இருந்த காரைகள் பெயர்ந்து விழுந்தன. மேலும் மேற்கூரைகளில் வரையப்பட்டிருந்த புராதன படங்களும் தீ பிடித்து எரிந்தது. இதனால் மேற்கூரையிலும் காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்தன. அதிக தீ ஜூவாலை காரணமாக 2 தூண்கள் சாய்ந்தன.

கடைகளில் பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பேட்டரி கார்கள் போன்றவை இருந்தது. இவையே தீ கொளுந்து விட்டு எரிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

தீ பிடித்த இடத்தின் அருகில்தான் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இதன் நுழைவு வாயில் வரை தீ பரவி உள்ளது. ஆனால் மண்டபத்திற்குள் தீ விபத்து எதுவும் ஏற்படாததால் அங்கிருந்த புராதன சின்னங்கள் மற்றும் கலைநயம் மிக்க தூண்கள், அழகு சிலைகள் தப்பின.

அதே நேரத்தில் வெளியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக உருவான புகை ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக அங்கு கலைபொக்கி‌ஷங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழைகள் புகைபடிந்து காணப்பட்டது.


தீ விபத்து பற்றி அறிந்ததும் நேரில் வந்து கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால், துணை கமி‌ஷனர் சசி மோகன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்துகண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய கலெக்டர் வீரராகவராவ், தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். கோவிலின் உட்பகுதியில் இனி எந்த கடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.

தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதிகள் விரைவில் புனரமைக்கப்படும். தற்போது கிழக்குவாசல் மட்டும் மூடப்பட்டு மற்ற வாசல்கள் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீனாட்சி அம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக