வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

பட்ஜெட் அம்பானி காட்டில் பணமழை ....

வெப்துனியா : 2018-19-ஆம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பஜெட்டால் பிரபல தொழில் அதிபர் அம்பனிக்கு லாபம் உள்ளதாக கூறப்படுகிறது.
அம்பானி ஜியோ சிம் அறிமுகம் செய்து, அதன் பின்னர் ஜியோ ஃபோனையும் அறிமுகம் செய்தார். இந்நிலையில் தற்போது மத்திய அரசு இதனை மறைமுகமாக ஊக்குவிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக இறக்குமதிக்கு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் விலையானது 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்துமே வெளிநாட்டு இறக்குமதியே.

இதனால் இந்த செல்போன்களின் விலைகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் உள்நாட்டு தயாரிப்புகளான அம்பானியின் ஜியோ போன் போன்றவற்றை மக்கள் நாடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த வகையில் இந்த அறிவிப்பு தொழில் அதிபர் அம்பானிக்கு சாதகமான பட்ஜெட்டாக உள்ளது. d

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக