வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

கூகிள் ஏழு லட்சம் செயலிகளை நீக்கி இருக்கிறது

ஏழு லட்சம் செயலிகளை களையெடுத்த கூகுள்: காரணம் இது தான்மாலைமலர் : கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஏழு லட்சம் செயலிகளை கடந்த ஆண்டு மட்டும் நீக்கி இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2017-ம் ஆண்டில் மட்டும் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டு இருந்ததாக ஏழு லட்சம் செயலிகளை நிக்கியதாக கூகுள் அறிவித்துள்ளது. மெஷின் லெர்னிங் (machnine learning)  தொழில்நுட்பத்துடன் கூகுள் ஏற்கனவே வரையறுத்து இருக்கும் விதிமுறைகளின் கீழ் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட செயலிகளை கண்டறிந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.
மெஷின் லெர்னிங் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் புரோகிராம் செய்யப்படாமல் தானாக செயல்களை புரிந்து கொண்டு, மேம்படுத்திக் கொள்ளும் வசதி பெற்று கொள்வது எனலாம்.

 கூகுள் சேவைகளில் மெஷின் லெர்னிங் பயன்பாடு சமீபத்தில் அதிகரித்து வரும் நிலையில், கூகுள் பிளே நடவடிக்கை புதிய உதாரணமாக பார்க்கப்படுகிறது. 2017-ம் ஆண்டில் மட்டும் 1,00,000 டெவலப்பர்களிடம் இருந்து 7,00,000 லட்சம் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியதாக கூகுள் தெரிவித்துள்ளது. இது 2016-ம் ஆண்டை விட 70% அதிகம் ஆகும். இதுமட்டுமின்றி 99% செயலிகள் பயனர்கள் இன்ஸ்டால் செய்யும் முன் அவற்றில் தவறான தரவுகள் இருப்பது கண்டறியப்பட்டு நீக்கப்பட்டிருப்பதாக ஆண்ட்ராய்டு டெவலப்ர்கள் வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.<

இம்பர்சோனேஷன் (Impersonation):
கடந்த ஆண்டு பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில் 2,50,000 செயலிகள் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் செயலிகளை தழுவி (அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்ட) உருவாக்கப்பட்டிருந்ததால் நீக்கப்பட்டதாக ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில் இவ்வகை செயலிகள் முதலிடம் பிடித்து இருப்பதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

 பொருத்தமற்ற தகவல்கள் (Inappropriate Content): கூகுள் பிளே ஸ்டோரில் பொருத்தமற்ற தகவல்கள் நிறைந்த செயலிகளுக்கு இடம் கிடையாது. கூகுள் அகராதியில் பொருத்தமற்றவை - ஆபாசம், அதீத வன்முறை, சட்ட விரோத நடவடிக்கை மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் தரவுகள் அடங்கும். அந்த வகையில் பொருத்தமற்ற தரவுகளை கண்டறிய மேம்படுத்தப்பட்ட மெஷின் லெர்னிங் வழிமுறை செயல்பட்டு தரவுகளை நீக்க உதவும் என கூகுள் தெரிவித்துள்ளது.

மால்வேர் (Malware):< இறுதியில் செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சாதனங்களை பாதிக்கும் தன்மை கொண்ட செயலிகளை கூகுள் தனது பிளே ஸ்டோரில் அனுமதிப்பதில்லை. இவ்வாறான செயலிகளை கூகுள் (Potentially Harmful Applications - PHAs) என வகைப்படுத்துகிறது.

 ஃபிஷிங் எனப்படும் கடவுச்சொல் போன்ற முக்கிய தகவல்களை திருடுவது, ஊழல் அல்லது ட்ரோஜன்கள் கூகுள் மால்வேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கூகுள் பிளே புரோடெக்ட் அம்சம் சேர்க்கப்பட்டது முதல் பிளே ஸ்டோரில் இருந்து மால்வேர் நிறைந்த செயலிகளின் டவுன்லோடு அளவு 50% குறைந்திருக்கிறது.

கூகுள் பிளே புரோடெக்ட் அம்சம் மால்வேர் ஸ்கேன் செய்யும் வசதி கொண்தாகும். இதனை 2017 ஆண்டின் டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் அறிமுகம் செய்திருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக