சனி, 15 ஆகஸ்ட், 2015

பிரகாஷ் ராஜ் மீது பெண்கள் அவமதிப்பு வழக்கு ! பெண் உரிமையாளர் Safiath.....

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளதாக கூறி, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்காக, நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த விளம்பரம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாகவும், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சஃபியா என்ற பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில், நடிகர் பிரகாஷ்ராஜ் திருமண வயதில் உள்ள பெண்களினால் பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக கூறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இளையராஜா மருத்துவமைனையில் அனுமதி.. இதயநோய்க்காக....angioplasty!

உடல்நலக் குறைவு காரணமாக, இளையராஜா, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவருக்கு ஆன்ஜியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 73 வயதான பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, நேற்று, (வெள்ளிக் கிழமை) தனக்காக, பிரத்யேக இணையதளம் ஒன்றை துவக்கினார். அன்று இரவு, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளையராஜா சேர்க்கப்பட்டார். ilayaraja அவருக்கு, இதய நோய் பாதிப்பு உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து இன்று காலை, ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஈவ்-டீசிங்'கில் இருந்து சிறுமியை காப்பாற்றிய ராணுவ வீரர் அடித்துக் கொலை


உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஈவ் டீசிங்கில் இருந்து சிறுமியை காப்பாற்றிய ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார். மீரட் மாவட்டம் ஹார்தேவ் நகரில் கடந்த வியாழன்கிழமை மாலை, சிறுமியை வாலிபர்கள் ஈவ்டீசிங் செய்து உள்ளனர். அப்போது ஈவ்டீசிங் செய்த வாலிபர்களிடம் இருந்து வாத்மித்ரா சவுதாரி என்ற ராணுவ வீரர் மீட்டுஉள்ளார். பின்னர் வாலிபர்கள்  தங்களுடைய நண்பர்களுடன் வந்து ராணுவ வீரரிடம் சண்டையிட்டு உள்ளனர். கும்பலாக வந்த வாலிபர்கள் ராணுவ வீரரை கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு பலமாக தாக்கிஉள்ளனர். இதனால் காயம் அடைந்த ராணுவ வீரர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுதந்திர தினம்...ராணுவ வீரர் அடித்த கொலை? வெளங்கிடும்,  

கடலில் தவித்த 40 அகதிகள் மரணம்! மத்திய தரைக்கடலில்....இத்தாலி கடற்படை தகவல்

மத்திய தரைக்கடல் பகுதியில் படகில் வந்த 40 அகதிகள் மரணம் அடைந்ததாக இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக வரும் அகதிகள், சில சமயங்களில் கடலில் தத்தளித்து உயிரையும் விடுகின்றனர். உயிர்பிழைத்தவர்களை மீட்டு சொந்த நாடுகளுக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், சுமார் 400 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த படகு லிபியாவில் இருந்து 21 மைல்கள் தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் தத்தளிப்பதாக இத்தாலி கடற்படைக்கு தகவல் கிடைத்தது.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ராஜித செனரத்னே: மஹிந்தவின் குடியுரிமை பறிபோகும்! புலிகளுக்கு பணம் கொடுத்தமை...?

புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தது நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­தமர் கனவு மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு ­ரி­மையும் பறி­போகும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இன்று மஹிந்த ராஜபக் ஷவின் காற்று தடைப்­பட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் காற்று வீச ஆரம்­பித்­துள்­ளது என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.
கொழும்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மகா­நாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு தெரி­வித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் மஹிந்த ராஜபக் ஷவின் காற்று வீசு­வ­தாக கூறி கடந்த காலங்­களில் அவர் பெயர் அர­சி­யலில் வியா­பாரம் செய்­யப்­பட்­டது.
ஆனால் இன்று மஹிந்த காற்று செய­லி­ழந்து விட்­ட­தோடு அந்தப் பெயரை வியா­பாரம் செய்ய முடி­யாத வங்­கு­ரோத்து நிலை­மைக்கு முன்­னணி தள்­ளப்­பட்­டுள்­ளது.  – என்னவோ மர்மம் நடக்கிறது திடீரென்று சுசில், அனுரவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் பெரிய விவகாரம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது, அங்கு  ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக பெரிய சதி ஒன்று  முறியடிக்க பட்டதாக இருக்குமோ?  

சுந்தர் பிச்சைகளை பார்த்து ஆச்சரியப்படும் பரம பிச்சைகள்!

Sundar Pichaiசுந்தர் பிச்சைகளையும், சத்யா நாதெல்லாக்களையும், இந்திரா நூயிகளையும் மனசுவிட்டு பாராட்டும் கருத்துக்கள் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் என்பதையும் அவர்களின் அடிப்பொடிகளின் கருத்துக்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கான வழி காட்டிகளாக இவர்கள் ஒரு போதும் ஆகமுடியாது. அப்படி சொல்பவர்களும் நேர்மையான மனிதர்களாக இருக்கமுடியாது அம்பானியையும், அதானியையும், டாட்டாவையும், பிர்லாவையும் பார்த்துப் பார்த்து பிரமிக்கும் நடுத்தர வர்க்கம் தன்னுடைய இயலாமையையும், ஆற்றாமையும் ஆற்றுப்படுத்திக் கொள்ள யார் மூலமாகவாவது முயற்சிக்கின்றது. தன்னால் முடியாத ஒன்றை மற்றவர்கள் செய்யும் போது ஒருபக்கம் புழுவாக துடித்தாலும், மறுபக்கம் அதை தனதாக மாற்றிக்கொள்ள எல்லா வகையிலும் முயலுகின்றது. நடுத்தர வர்க்கத்தைப் பொருத்தவரை அமெரிக்கா, ஐரோப்பா போன்றவை அவர்களின் சொர்க்க பூமி. அங்கு செல்வதும், ஓர் ஐந்திலக்க சம்பளம் பெறுவதும், அங்கேயே குடியுரிமை பெற்று தன்னுடைய மீதிவாழ்நாளை கழிப்பதும் வாழ்வின் மிக உயர்ந்த விழுமியங்களில் ஒன்று.

தூக்கில் தொங்கியதால்தான் சசிபெருமாள் மரணமடைந்தார்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தூக்கில் தொங்கியதால்தான் சசிபெருமாள் மரணமடைந்தார் என்று அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சசிபெருமாளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது மூத்த மகன் விவேக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவுக்குப் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது.

சபலத்தால் சிலை திருட்டு கும்பலிடம் சிக்கிய இயக்குனர் வி.,சேகர் !

சினிமா டைரக்டர் வி.சேகர், சிலை கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றிருப்பது தமிழ் திரை உலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது படத்தில் வரும் கதையின் நாயகர்கள் குறுக்கு வழியில் செல்ல ஆசைப்பட மாட்டார்கள். உழைத்து... போராடி முன்னுக்கு வருவார்கள். எந்தவித ஆபாச காட்சிகளும் இன்றி குடும்ப உறவுகளையும், உணர்வுகளையும் அற்புதமாக படம் பிடிப்பதில் கைதேர்ந்தவர் வி.சேகர். இப்படிப்பட்ட ஒரு டைரக்டர் ரூ.80 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருப்பது, அவரது படத்தை ரசித்து பார்த்த பெண்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘குடும்ப இயக்குனர்’ என்று பெயரெடுத்த வி.சேகர், கடத்தல் கும்பலிடம் சிக்கியது எப்படி? என்பது பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

டாஸ்மாக் வருமானம் 30 ஆயிரம் கோடியை என்ன செய்கிறீர்கள்? குஷ்பு கேள்வி? மக்கள் சாராயம கேக்கல ....

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும்,
நடிகையுமான குஷ்பூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,டாஸ்மாக் மூலம் வரக் கூடிய ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ள வருமானத்தை இந்த அதிமுக அரசு என்ன செய்கிறது. நீங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறீர்களா. அதுவும் கிடையாது. நல்ல ரோடு கிடையாது. இலவசமாக யாருக்கு கொடுக்கிறீர்கள். இன்று பேப்பரில் பார்த்தால் ஆர்.கே.நகரில் ஓட்டு போட்டார்கள் என அவர்களுக்கு இலவசமாக பொருட்கள் போய்க்கிட்டிருக்கு. அதுவும் அந்த பொருள் மிகவும் தரம் குறைவானதாக இருக்கு. அந்த பொருளை ஒரு வாரம் கூட வீட்டில் வைத்து ஓட்ட முடியாது.டாஸ்மாக் மூலம் வரக் கூடிய ரூபாய் 30 ஆயிரம் கோடியை என்ன செய்கிறீர்கள். அதற்கான விவரங்களை வெளியிட வேண்டும்.

உணவு நிறுவனங்களின் தரம் எப்படி ? கோலாவில் பூச்சி மருந்து, நெஸ்லே மேகி நூடுல்சில் காரீயம்

US fraud (2)_1கோக் கோலாவில் பூச்சி மருந்து, நெஸ்லே மேகி நூடுல்சில் காரீயம் என்று நஞ்சு கலந்து விற்கும் கார்ப்பரேட் லீலைகள் இந்தியாவில் அத்திபூத்தாற் போலத்தான் வெளிருகின்றன.
அது போன்ற சமயங்களில் “இது போன்ற சட்ட விதி மீறல்கள் இந்தியாவில் தான் நடக்கும், நம்ம ஊருல தான் சட்டத்த மதிக்கறது இல்லை. அமெரிக்காவுல பாருங்க எல்லாரும் சட்டத்தை மதிப்பாங்க மக்கள் எல்லாம் படிச்சவங்க விவரமானவங்க” என்று முதலாளித்துவத்தை விதந்தோதும் அறிஞர்கள் பல உண்டு.
உண்மையில் அமெரிக்க ‘சொர்க்க’த்தில் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை எப்படி மதிக்கின்றன?

பணத்தாசையால் சிலைதிருட்டில் ஈடுபட்டேன்! இயக்குனர் சேகர் வாக்கு மூலம்

பிரபல சினிமா பட இயக்குனர் வி.சேகர் பஞ்சலோக சாமி சிலைகள் கடத்தல் தொழிலில் இறங்கியது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு விவேக் உள்ளிட்டோர் நடித்த 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் வி.சேகர். 'திருவள்ளுவர் கலைக்கூடம்' என்ற பெயரில் குடும்ப பாங்கான படங்களை இயக்கி 'குடும்ப இயக்குனர்' என்ற தகுதியை பெற்றிருந்தார்.அவர் பஞ்சலோக சாமி சிலைகளை கடத்தியாக போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவருடன் சிலை கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாலதி என்பவர் போலீசாரிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம்:  விபூதி குங்கும வேஷத்தில ஒன்னும் குறைச்சலில்லை.. கலாசாரம் பேணும் படங்களை எடுப்பவர்கள் திருடர்களாக இருப்பது அதிசயமா?..ம்ம்ஹூம் 

மத்திய அரசின் நேரடி மான்யதிட்டம் நிச்சயம் நல்ல திட்டம்தான்

நேரடி மானிய திட்டம் மேலும் 35 பொருட்களுக்கு விரிவு படுத்த போகுகிறது மத்திய அரசு என்று அறிவிப்பு வந்தது .அப்படி வந்து அமுல் படுத்தினால் அதுவும் உலகிலே அதிக பொருட்கள் மானியத்தில் அதிக மக்களக்கு அதுவும் நேரடி மானியம் என்று கின்னஸ் சாதனையில் இடம் பெற அதிக வாய்ப்பு .......இந்த நேரடி மானியத்தால் முறை கேடுகள் ஒழிந்து உள்ளது வரவேற்க்க பட வேண்டிய ஒன்று ....அதுவும் அரசுக்கு 90 ஆயிரம் கோடி மிச்சம் என்பது சாதாரண விசயம் இல்லை போலிகள் இல்லாமல் செய்வதால் அரசுக்கு லாபம் 
புதுடில்லி:சமையல் எரிவாயு மானியத்தை, நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும், மத்திய அரசின், 'பாஹல்' திட்டம், 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

பாகிஸ்தான் மரணதண்டனை! 125 பள்ளிக் குழந்தைகளை சுட்டுக்கொன்ற கொன்ற 6 தீவிரவாதிகளுக்கு பாக். ராணுவ கோர்ட் அதிரடி

கடந்த டிசம்பர் 16-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இயங்கிய ராணுவ பள்ளிக்குள் புகுந்த ஏழு தீவிரவாதிகள் 125 பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் என 151 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியது. இதன் ஒரு கட்டமாக தீவிரவாதிகள் மீதான வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவதற்கு ராணுவ கோர்ட்டுகளை அமைக்க நவாஸ் ஷெரீப் அரசு முடிவு எடுத்தது. ராணுவ கோர்ட்டு அமைக்க வகை செய்யும் மசோதாவும், அதற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்கத்தக்க விதத்தில் அரசியல் சட்ட திருத்தம் (21-வது திருத்த மசோதா) செய்வதற்கான மசோதாவும் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால், மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் அந்த மசோதா நிறைவேறியது. உச்சநீதிமன்றமும் ராணுவ கோர்ட்டு அமைக்க உத்தரவிட்டது.

இசை நோய்களை குணமாக்கும் என்பது நிருபிக்க பட்டுள்ளது


இனிமையான இசைக்கு நம்மை மயக்கும் சக்தி மட்டுமல்ல பல்வேறு நோய்களை குணமாக்கி காக்கும் சக்தியும் உள்ளது என்பது நம்மில் பலர் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இந்தவகை ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக, உங்களுக்கு பிடித்த இசையை தினந்தோறும் அரைமணிநேரம் ரசித்து கேட்டாலே போதும், உங்களுக்கு மாரடைப்பு வராமல் இருக்கும் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதே வரிசையில், அறுவை சிகிச்சைக்கு முன் கேட்கும் உங்களுடைய விருப்பமான இசை, சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை வேகமாக சீரடைய உதவும் என சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று நிரூபித்துள்ளது. இங்கிலாந்து மருத்துவமனைகளில் சுமார் 7000 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், நோயாளிகளின் தலையணையில் பதிக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் அவர்களுக்கு பிடித்த இசையை ஒலிபரப்பினர்.

டாஸ்மாக்கிற்கு எதிராக மக்களின் மனநிலை ஆட்சியாளருக்கு நிச்சயமான சவால்தான்!


மூடு டாஸ்மாக் கடையை என்று சாணி எறிந்து வலியுறுத்திய ஓசூர் ஆர்ப்பாட்டம் 11-08-2015 அன்று நடந்தது. உடன் கைது செய்யப்பட்டாலும் இரவு 9 மணிக்கு கைக்குழந்தையுடன் இருந்த தோழர்.தமிழ்ச்செல்வி மட்டும் விடுவிக்கப்பட்டார். மற்ற தோழர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். தோழர்களை கைது செய்து கொண்டு சென்ற போலீசு எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருக்கிறது என்பதை தோழர் தமிழ்ச்செல்வி தெரிவித்த வாக்குமூலத்தை இங்கே வெளியிடுகிறோம்.
“போராட்டத்தை முடித்துக் கொண்டு நானும் தோழர்களும் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தோம். அங்கே, உளவுப் பிரிவு போலீசார் என்னையும் மற்ற தோழர்களையும் போட்டோ எடுத்தனர்.

இருபதில் அந்தமான் – அறுபதில் சமையலறை....1981-ல் தனது 20 வயதில் கப்பல் ஏறினார் செல்வராசு.

Aberdeen Bazarசெல்வராசு, சென்னை தி. நகரிலுள்ள ஒரு கட்டுமான நிறுவன ஊழியர் குடியிருப்பில் சமையல் மாஸ்டர்.
“சீதைய தேடி கடல் தாண்டி இலங்கைக்கு போலாமா, வேண்டாமான்னு ஒரு வாரமா கரைல நின்னு பேசிகிட்டே இருக்காய்ங்க தம்பி. டக்குன்னு அடுத்த சீனு போறானுக இல்ல, ஒன்னும் நமக்கு புரிய மாட்டேங்குது” என்றார் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே.
தனது இருபதாவது வயதிலிருந்து வறுமையை விரட்டியடிக்க, வயிற்றுப் பிழைப்புக்கென யோசிக்காமல் கடல்தாண்டியவர் அவர். தொலைக்காட்சி தொடரின் இழுவை கணக்குகள் அவருக்கு புரிவதில்லை.
70, 80-களில் ராமனாதபுரம் மாவட்டம் பரமகுடி விவசாயிகள் பலர் வயிற்று பிழைப்புக்காக அந்தமான் தீவுகளுக்கு கப்பல் ஏறினர். அப்படிச் சென்ற சில தொடர்புகளை நம்பி 1981-ல் தனது 20 வயதில் கப்பல் ஏறினார் செல்வராசு.

கோபிசெட்டிபாளையம்! சிறுமியை சிதைத்தவருக்கு ராஜ உபசாரம்! சிறுமிக்கு டார்ச்சர்.., போலீசின் அட்டுழியம்

கோபிசெட்டிபாளையம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர், போலீசார் துணையுடன், காரில் வலம் வந்தார்; இவரால் கர்ப்பமாகி பாதிக்கப்பட்ட சிறுமியை, போலீசார் நடக்க வைத்து, கொடுமை செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே சிலேட்டர் அவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் தன்சீர், 30. இவருக்கு திருமணமாகி, மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். வீட்டுக்கு அருகே வசித்த, 15 வயது சிறுமியை, தன்சீர், அடிக்கடி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது; இதனால், சிறுமிக்கு கர்ப்பமானார்.சிறுமி மீது தாக்குதல்:கடந்த, 7ம் தேதி இரவு, தன்சீர் மனைவி ரசீதா பானு, தன் கணவர் மீது வீண் பழி சுமத்துவதாக கூறி, சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், கோபி போலீசில் புகார் செய்தனர்.கட்சி பிரமுகர்கள் சிலர் தலையிட்டு, வழக்கு பதிவு செய்யவிடாமல் தடுத்தனர். ஆனால், சிறுமியை, நேற்று முன்தினம் இரவு முழுக்க, விசாரணை என்ற பெயரில் போலீசார்

மரத்தை வெட்டு எனும் முழக்கம் ஏன்? சீமைக் கருவேல மரங்களும், பார்த்தீனியம் செடிகளும், படர் தாமரையும் (ஆகாய தாமரை), தைலமரம் எனப்படும் யூக்கப்லிடக்ஸ்....

karuvela maramஎழுத்தாளர்: முகிலன்  keetru.com
 மரம் வளர்ப்போம் எனும் முழக்கங்கள் நாடு முழுக்க எழும் போது, மரத்தை வெட்டு எனும் முழக்கம் நம்மைப் போன்ற இயற்கை ஆர்வலர்களால் தீவிரமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஏன் தமிழகத்தில் இந்த நிலை என எண்ணிப் பார்க்க வேண்டும்.
சீமைக் கருவேல மரம் என்று அழைக்கப்படும் மரங்களும், பார்த்தீனியம் செடிகளும், படர் தாமரையும் (ஆகாய தாமரை), தைலமரம் எனப்படும் யூக்கப்லிடக்ஸ் மரங்களும் இன்று மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் மொத்த காடுகளையும் அழித்து அட்டுழியம் செய்பவைகளாக இவை உள்ளது.
உயர்ந்த மலைகள் முதற்கொண்டு, பாதுகாக்கப்பட்ட வன சரணாலயங்கள், நெல் விளையும் நிலங்கள், கடற்கரை பகுதிவரை பரவியுள்ளது. எல்லா வகையான மண்ணிலும், எவ்வகையான வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளர்ந்து நிற்பதால் நமது மண்ணிற்கே உரிய அனைத்து வகையான தாவரங்களும், பறவை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் அழிவை நோக்கியுள்ளன.

IIT என்ன நடக்கிறது ‘அய்.அய்.டி.’களில்? சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம்

சூத்திரர்’ கல்வி உரிமையைப் பறித்தது ‘மனுசாஸ்திரம்’. எனவே, அம்பேத்கரும் பெரியாரும் அதை எதிர்த்தனர். மக்கள் வரிப் பணத்தில் இயங்கும்- அய்.அய்.டி.கள். இந்தத் தலைவர்களின் சிந்தனைகளுக்கே அய்.அய்.டி. வளாகத்துக்குள் தடைபோட்டன. ‘மனுதர்மமே’ அய்.அய்.டி. ஏற்றுக்கொண்ட தத்துவம் என்பதே இதற்கான அர்த்தம்.இதுகூட ஒரு கண்ணோட்டத்தில் வரவேற்கவேண்டியது தான். இல்லையேல் தமிழ்நாட்டில் அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் ஒரே களத்தில் கரம்கோர்க்க நல்ல வாய்ப்பை உருவாக்கியிருக்குமா?
 ‘அய்.அய்.டி.’ என்பதற்கு மற்றொரு பெயர் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் - “அய்யர், அய்யங்கார், உயர்கல்வி நிறுவனம்”. வசிஷ்டர் படிப்புவட்டம், வந்தே மாதரம் படிப்பு வட்டம், இராமாயணபடிப்பு வட்டம், விவேகானந்தர் படிப்பு வட்டம், துர்வாசர் படிப்பு வட்டம் என்று வளாகத்தை வேதமயமாக்குவதற்கு அனுமதித்தவர்கள் - அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டத்தை மட்டும் அனுமதிக்கமறுத்தது.

புதன், 12 ஆகஸ்ட், 2015

காதல் ஜோடியை சித்ரவதை செய்த 6 பேர் கும்பல்: சில்மிஷம் செய்து பணம் பறிப்பு

கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 27). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே மருத்துவமனையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் நர்சாக பணிபுரிந்து வருகிறார். ஒரே மருத்துவமனையில் இருவரும் பணி புரிந்ததால், அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் இருவரும் காதல் வசப்பட்டனர். உண்மை காதலர்களாக இருவரும் அடிக்கடி வலம் வந்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். சம்பவத்தன்று காலை சாமுவேல், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் கோவை நீலாம்பூர் எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் பட்டணம் பிரிவை கடந்து, நாகமநாயக்கன்பாளையம் ரோட்டில் இரவு 7.30 மணிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது, சாமுவேலுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதனால் அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்போனில் பேசினார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென்று சாமுவேலின் மோட்டார் சைக்கிள் சாவியை பிடுங்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடினார்.

மீண்டும் மீண்டும் MSV யின் மெட்டுக்கள்தான் இன்றைய இசை அமைப்பாளர்களின் தங்க சுரங்கம்!

musicshaji.blogspot.in : எம் எஸ் விஸ்வநாதனின் பாடல்களின் சற்றே மாறுபட்ட வடிவங்களில்தான் மீண்டும் மீண்டும் இங்கு திரைப்பாடல்கள் உருவாக்கப்படுகின்றன. இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், ஷ்யாம், ஷங்கர் கணேஷ், கே ஜே ஜாய், ராஜன் நாகேந்திரா, விஜயபாஸ்கர், ஹம்ஸலேகா, சக்ரவர்த்தி, சத்யம், கீரவாணி என பெரும்பாலான தென்னிந்திய இசையமைபாளர்களில் எம் எஸ் விஸ்வநாதனின் ஆழமான தாக்கத்தை நாம் கேட்கலாம்.
ஸாந்தோம் ஒலிப்பதிவுக் கூடத்தின் நுழைவாயில் கடந்து அந்த கறுப்பு அம்பாசடர் கார் உள்ளே வந்துகொண்டிருக்கிறது. எனக்குள்ளே இனம்புரியாத ஒரு பதற்றம்! நினைவில் பாடல்கள் தங்கத் தொடங்கிய காலத்திலிருந்தே என்னை முற்றிலுமாகக் கவர்ந்த எண்ணற்ற பாடல்களை உருவாக்கிய இசை மாமேதைதான் அந்த வாகனத்திற்குள்ளே. நாற்பதாண்டுகாலமாக இந்திய இசையில் நிறைந்து நிற்கும் அதிசயம் அவர். முதன்முதலில் அவரை முகத்தோடுமுகம் சந்திக்கப் போகிறேன். என்ன பேசுவது? எப்படி மரியாதை செலுத்துவது? அவர் என்னை கவனிப்பாரா? என்னிடம் எதாவது பேசுவாரா? வணக்கத்திற்குறிய இசைஞர்களை கடவுளர்களாகவே மனதில் நினைத்துவந்த காலம் அது. எம் எஸ் விஸ்வநாதன் வாகனத்திலிருந்து வெளியே இறங்கினார்.

பீகார்: லாலு ,நிதிஷ் கட்சிகள் தலா 100 தொகுதிகள் , காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது!

பிகாரில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் தலா 100 இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் ஆகியோர் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து பாட்னாவில் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இருகட்சிகளும் தலா 100 இடங்களில் போட்டியிடுவது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களை ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த இரு தலைவர்களும் இதனை கூட்டாக அறிவித்தனர். 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவை தேர்தல், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடைபெறலாம் என தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. dinamani.com 

மக்கள் மோடியின் மாயையில் இருந்து விடுபட்டு கேலியாய்ச் சிரிக்க ஆரம்பித்து ....

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் சவடாலேந்திர மோடியாக நாட்டை வலம் வந்து வாயில் சுட்ட வடையை மக்களுக்குப் பரிமாரிய 56 இன்சு அப்பர் பாடி, தற்போது மௌனேந்திர மோடியாக மாறி மன்மோகன் சிங்கையே வெட்கப்பட வைத்துள்ளது. எனினும், சிரங்கு பிடித்தவன் கை அடங்காதல்லவா? எனவே அவ்வப்போது தனது செப்டிக் டேன்க் மூடியைத் திறந்து நாட்டை நாற வைத்து மகிழும் பழக்கத்தை தொடர்கிறார் திருவாளர் மோடி. பீகார் மாநில சட்ட மன்ற தேர்தல் தான் பாரதிய ஜனதாவின் சமீபத்திய குறி. இந்த தேர்தலில் எப்படியாவது வென்று தில்லியில் கிடைத்த செருப்படியின் வலியை மறக்க தனது ரத கஜ துரக பதாதிகளைக் களமிறக்கி விட்டுள்ளது பா.ஜ.க. அதில் மோடிதான் முதலில் நிற்கிறார்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

நடிகை பூமிகா படம் தயாரித்து பரிதாபமான நிலைக்கு வந்துவிட்டார்!

தமிழ் சினிமாவின் பத்ரி, ரோஜாகூட்டம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பூமிகா. இவர் சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகு யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். இதை தொடர்ந்து பல படங்களை தயாரித்து கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால், மனமுடைந்த அவர் துபாயில் தன் கணவருடன் ஒரு யோகா வகுப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறாராம். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது எல்லோரும் அருகில் இருந்தது போல் உணர்ந்தேன், தற்போது யாருமே கண்டுக்கொள்ளவில்லை மிகவும் மனமுடைந்து போய் விட்டாராம் பூமிகா cineulagam,com

மோடி ஜெயாவிடம் பிரதமராக செல்லவில்லை கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாக சென்றிருக்கிறார்!

13319PAug---07---E-bigsavukkuonline.com :தமிழகத்தைப் போல அவலச்சூழல் வேறு எங்காவது நிலவுமா என்பது சந்தேகமே.   அத்தனை அவலங்களும் தங்கு தடையின்றி தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு நிலுவையில் உள்ளது.  இந்த சூழலில் ஒரு தவறான தீர்ப்பின் மூலம் முதல்வராயிருக்கும் ஒருவரை, சந்திப்பது எத்தகைய ஒரு செய்தியை சமூகத்துக்கு சொல்லும் என்று எவ்விதமான தயக்கமும் இன்றி, ஜெயலலிதாவை நேரில் வந்து சந்தித்து சென்றிருக்கிறார் மோடி.   பிரதமர் பதவி எத்தகைய மதிப்பு வாய்ந்தது, ஒரு முன்னாள் கைதியின் வீட்டுக்கு சென்று அவரை பார்க்கலாமா கூடாதா என்பதெல்லாம் மோடிக்கு நன்றாகவே தெரியும்.   ஆனால் இதையெல்லாம் மீறி ஜெயலலிதாவை பார்க்க மோடி சென்றதன் முக்கிய காரணம், அவர் அங்கே பிரதமராக செல்லவில்லை, கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாக சென்றிருக்கிறார் என்பதே.

தமிழ்நாட்டின் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைவரானார்

கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட  பிராமணர் இவர் , கரக்பூரிலுள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காகச் சென்றார். அங்கு எம்.எஸ் பட்டம் பெற்ற பின்னர், உலகப் புகழ்பெற்ற வார்ட்டன் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப்பள்ளியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். கூகுள் குரோம் உருவாக்கத்தில் சுந்தர் பிச்சை முக்கிய பங்காற்றியதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது இதையடுத்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். இணையத் தேடல் செயலியான கூகுள் குரோம், கூகுள் டிரை ஆகியவற்றை உருவாக்கியதில் அவருக்கு முக்கியப் பங்கு இருந்தது என கூகுள் நிறுவனம் கூறுகிறது. தமது நிறுவனத்தில் அவரது செயலாற்றலைக் கண்டு தான் மிகவும் வியந்துள்ளதாகவும், அவரைத் தலைமை செயல் அதிகாரியாக நியமிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூகுள் நிறுவனத்தை இணைந்து உருவாக்கிய லாரி பேஜ் தெரிவித்துள்ளார். bbc.com/tamil

மியான்மார் 159 பங்களாதேஷ் அகதிகளை பங்களாதேச அதிகாரிகளிடம் ஒப்படைத்தது


வங்கக்கடல் வழியே கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டைச் சேர்ந்த எண்ணூறுக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த மே மாதத்தின்போது நடுக்கடலிலேயே தத்தளிக்க விடப்பட்டிருந்தனர். அவர்களை மியான்மர் அரசு மீட்டு, சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணியை மேற்கொண்டுவருகிறது.சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது. வெகுநாட்களுக்கு பிறகு, நேற்று 159 பேரை துப்பாக்கி ஏந்திய ராணுவ அதிகாரிகள் வங்காளதேச அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக மியான்மர் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவைக்கு பதிலாக சென்னைக்கு வழித்தவறி வந்த ஏழை மாணவி; உதவிய மனிதர்கள்

வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கோவை வருவதற்குப் பதிலாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்ற முசிறியைச் சேர்ந்த மாணவி, அங்கிருந்த சில மனித நேயம் மிக்கவர்களின் உதவியால் அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்து கலந்தாய்வில் பங்கேற்றார். திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த தங்கப்பொண்ணுவின் மகள் சுவாதி. பிளஸ்2-வில் அறிவியல் பாடம் படித்த சுவாதி, பொதுத் தேர்வில் 1,017 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில், கால்நடைகளை வளர்த்து அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு சுவாதியை, தாய் தங்கப்பொண்ணு படிக்க வைத்துள்ளார். நாட்டில் Feel good சம்பவங்கள் இன்னும் இருக்கிறது ...

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் உத்தேச வரைபடம் அம்பலம்

லண்டன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய துணைக் கண்டம் உட்பட, உலகின் பெரும்பகுதியை கைப்பற்ற திட்டமிட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அதற்கான வரைபடத்தை தயாரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பி.பி.சி., செய்தியாளர் ஆண்ட்ரூ ஹோஸ்கின், 'எம்பயர் ஆப் பியர்: இன்சைடு தி இஸ்லாமிக் ஸ்டேட்' என்ற நுாலை எழுதியுள்ளார். அதில், ஐ.எஸ்., கைப்பற்ற திட்டமிட்டுள்ள நாடுகளும், அவற்றுள் நுழையும் வழிகளைக் கூறும் வரைபடங்களையும் இணைத்துள்ளார்.

மாநிலத் தகவல் ஆணையமா? அண்ணா தி.மு.க. அறக்கட்டளையா? வைகோ கேள்வி!

மத்திய, மாநில அரசுத் துறைகளில் வெளிப்படையான செயல்பாட்டை வளர்க்கவும், அரசுப் பணியாளர்களின் பொறுப்புடைமையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற சமூக அமைப்பு உருவாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (2005) கொண்டு வரப்பட்டது.பொதுமக்களுக்குத் தகவல் வழங்கும் பணிகளைக் கவனிக்க, தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியத் தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களாகப் பொறுப்பு வகிப்பவர்களுக்கான தகுதிகளையும், தகவல் பெறும் உரிமைச்சட்டம் வரையறுத்து இருக்கின்றது.

பிரசவ விடுமுறை 24 வாரமாக அதிகரிப்பு! மத்திய மந்திரி அறிவிப்பு!!

பெண் தொழிலாளிகளுக்கு தற்போது 12 வார பிரசவ விடுமுறை வழங்கப்படுகிறது. இதை 24 வாரமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய மந்திரி தெரிவித்தார். 1961- ம் ஆண்டின் பிரசவ கால நன்மைகள் சட்டத்தின் படி வேலை பார்க்கும் பெண் கர்ப்பமடைந்தால் அவருக்கு 12 வார பிரசவ விடுமுரை அனுமதிக்கப்படுகிறது. இதை 2 மடங்காக உயர்த்த மத்திய அரசு பரீசீலிப்பதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணையமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா பாரளுமன்றத்தில் அறிவித்தார். அவர், மக்களவையில் இதை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். பிரசவ விடுமுறையாக தற்போது அனுமதிக்கப்படும் 12 வாரத்தில் 6 வாரங்களை பிரசவத்திற்கு முன்பு பயன்படுத்த்லாம் என்பது குறிப்பிடத்தக்கது nakkheeran,in

மாணவர் தற்கொலை! Amet பல்கலை கழக முதல்வரை தேடி போலீஸ். ..இறந்த மாணவனின் கடிதம் விலாவாரியாக....

சென்னை : கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் அமைந்துள்ள அமெட் கடல் சார் பல்கலைகழகத்தில் சீக்கிய மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்யும் முன் எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி இருக்கிறது. அதில், தனது மரணத்துக்கு கல்லூரி முதல்வர்தான் காரணம் என்று கூறப்பட்டு இருப்பதால், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஜே.டி சிங் என்ற மாணவர், சென்னை அமெட் பல்கலைக்கழகத்தில் கடந்த நான்கு வருடங்களாகப் படித்து வந்தார். தனது கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்னரே, ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரியத் தேர்வாகி இருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் தனது கல்லூரிப் படிப்பை முடித்த அவருக்கு, இதுவரை மாற்றுச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

அன்புமணி ராமதாஸ் வீட்டில் பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை?

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீட்டில் வேலை செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தியாகராயநகர் திலக் தெருவில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீடு உள்ளது. இவர் வீட்டில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பாடிநாகவேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்ற கோதண்டன் மகள் மாலினி (19) வேலை செய்து வந்தார். இவர் தந்தை கண்ணன் இறந்துவிட்டார். தாய் பட்டு இருக்கிறார்.

ஆபாசப்படம் பார்ப்பதை தடுக்க முடியாது... உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

ஆபாச படம் பார்ப்பதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆபாசப்படங்களை பார்ப்பதும், அதை பகிர்ந்துகொள்வதும் ஜாமீனில் விட முடியாத கடும் குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறி இருந்தார். அந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விஷயத்தில், மத்திய அரசுதான் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா விரைவில் திருமணம்! Micromax co-founder....,

நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை மணக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சத்தியன் அந்திக்காடு இயக்கிய நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளபடம் மூலம் 2001 ஆம் ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். நடிகை அசின்  ஜெயம் ரவியின் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு  தமிழில் அறிமுகமானார்.  தொடர்ந்து தமிழில் கஜினி,மஜா, சிவகாசி,வரலாறு,ஆழ்வார்,போக்கிரி,வேல், தசாவதாரம்,காவலன், ஆகிய படங்களில்  முன்னணி நடிர்களின் ஜோடியாக நடித்தார்.
மலையாளம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். கஜினி இந்தியில் எடுக்கபட்டபோது அமீர்கான் ஜோடியாக இந்தியில் நடித்தார் தொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

கடலுக்குள் மூழ்கிய மகளை காப்பாற்ற வந்தவரை தடுத்த தந்தை.ஆண் கைபட்டால் களங்கம் என..துபாய்!

அந்நிய  கடலுக்குள் மூழ்கிகொண்டிருந்த மகளை காப்பாற்ற வந்தவரை தடுத்த தந்தை  அவரிடம் மல்லுக்கடி, கீழே தள்ளிவிட்டு கடலுக்குள் பாய்ந்த பாதுகாப்புப் படையினர் அந்த இளம்பெண்ணை பிணமாகத்தான் மீட்க முடிந்தது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நடிப்பில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘மதுரை வீரன்’ படத்தின் ஆரம்பக் காட்சியில் கதாநாயகிகளில் ஒருவரான பானுமதி ஆற்றில் குளிக்கும்போது பெரும்சுழல் ஒன்றில் சிக்கிக் கொள்வார். மன்னரின் மகளான இளவரசி, பானுமதிக்கு பாதுகாப்பாக உடன்சென்ற தோழிகளும், மதுரை மண்டலத்தின் படைத்தளபதியான பாலையாவும் செய்வதறியாது கைகளை பிசைந்தபடி நின்றிருக்க, ஆற்றுக்குள் பாயும் எம்.ஜி.ஆர், ஆற்றுச்சுழலுக்குள் நீந்தி, பானுமதியை காப்பாற்றி, கரை சேர்ப்பார்.

ரக்பி வீரர் தாஜுதீனின்' சடலம் தோண்டியெடுப்பு! கொலைக்கு மஹிந்தவின் மகன் யோஷிதவே காரணம் எனக் குற்றச்சாட்டு!

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் இன்று விசாரணைக்காக தோண்டியெடுக்கப்பட்டது. தாஜுதீன் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது தெஹிவளை ஜும்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தாஜூதீனின் சடலம், கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்ற உத்தரவுக்கமையவே தோண்டியெடுக்கப்பட்டது.
அவரது சகோதரர்கள் அங்கு வந்து சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
வசீம் தாஜூதீனின் சடலம் பொலித்தீன் உறையொன்றில் வைத்து புதைக்கப்பட்டிருந்தமையினால், அதனை தோண்டியெடுப்பதற்கு இலகுவாக இருந்ததாக அங்கு சென்ற கொழும்பு பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரி பிரதீப் தென்னக்கோன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து ! விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையாம்!

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தால் தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த முன் ஜாமீனை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மாறன் சகோதரர்கள். சகோதரருக்கு உதவினார் என தயாநிதி(இடது) மீது குற்றச்சாட்டு அவர் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது சட்டத்துக்கு விரோதமாக தனது இல்லத்தில் தொலைபேசி இணைப்பகத்தை வைத்திருந்தார் என அவர் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ குற்றஞ்சாட்டியது. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் இணைப்புகளை அவர் முறைகேடாகப் பயன்படுத்தி அவரது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உதவினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

எம்.எஸ்.வியின் 20 பாடல்களை இளையராஜா குழுவினர் பாடும் நிகழ்ச்சி! என்னுள்ளே எம் எஸ் வி !

எம்.எஸ்.வி அவர்கள் இசையமைத்த பாடல்களைக் கேட்பதே அலாதியான இன்பம் தான். அதிலும் அவரது பாடல்களை இளையராஜாவின் ஆர்மோனியப் பெட்டியிலிருந்து புறப்படும் இசையிலும், அவரது குரலிலும் கேட்பதென்பது எவ்வளவு இன்பம். இப்படி ஒரு விழாவைத்தான் ‘என்னுள்ளே எம்எஸ்வி’ என்ற தலைப்பில் இசை அஞ்சலி நிகழ்ச்சியாக நடத்தவிருக்கிறார் இளையராஜா. வரும் ஜூலை 27 திங்கட்கிழமை காமராஜர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.மறைந்த எம்எஸ் விஸ்வநாதன் மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டவர்

தகவல் ஆணையர் நியமனங்களில் எத்தனை முறைகேடுகள்? கலைஞர் அறிக்கை

10-8-2015 தேதிய  தமிழக நாளேடுகள் அனைத்திலும், மாநில தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராக, முன்னாள் டி.ஜி.பி.யும், தமிழக அரசின் ஆலோசகராகத் தற்போது பணியாற்றி வருபவருமான கே. ராமானுஜமும், தகவல் ஆணையர்களாக மேலும் இருவரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட செய்தி வந்துள்ளது. இந்தப் பதவியினை ஏற்றவர்களின் பின்னணி என்ன என்பது பற்றித் தமிழ் நாளேடுகள் முக்கியமான செய்திகளை மறைத்த போதிலும், ஆங்கில நாளேடுகள் விரிவாக எழுதியுள்ளன. 

குறிப்பாக “தி. இந்து”“ ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியில், “After serving as DGP, Mr. Ramanujam served as an advisor  to the Government,  Mr. Dakshinamurthy had served  as the Additional Chief Metropolitan Magistrate (Economic  Offences-I) at the time of retirement, say  official sources.   He heard Income Tax cases against Chief  Minister Jayalalithaa and her close associate Sasikala for non-filing of returns.   After accepting the compounding fee and other charges totally  nearly Rs. 2 crore by the accused, the IT department filed a petition withdrawing the criminal proceedings in January 2015.  It was Mr. Dakshinamurthy who dismissed the cases as withdrawn   Mr. Murugan, a lawyer by profession, is a functionary of the AIADMK’s SC/ST wing.  He contested unsucessfully in the 2004 Lok Sabha elections, party sources said” என்று தெரிவித்துள்ளது.

குஷ்பூ: தி.மு.க.வில் இருந்து ராஜினமா செய்த காரணம் எனக்கும் கலைஞருக்கும் மட்டும் தெரியும்

திடீரென விலகிய மர்மம் குஷ்பு தி.மு.க.வை விட்டு ஏன் விலகினார் என்ற விவகாரம் ஊடகங்களால் பல முறை யூகங்களாக எழுதப்பட்ட போதும், இதுதான் காரணம் என திட்டவட்டமாக திமுக தரப்பும் குஷ்பு தரப்பும் வெளிப்படுத்தவில்லை.
இருப்பினும் தி.மு.க.வில் இருந்து அவர் விலகியதற்கான 'காரண'த்தை பல முறை செய்தியாளர்கள் கேட்ட போதும் தொடர்ந்து குஷ்பு அதை வெளிப்படுத்த மறுத்து வருகிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பேட்டியளித்த குஷ்புவிடம் இது தொடர்பாக மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் குஷ்பு தாம் தி.மு.க.வில் இருந்து வெளியேறதற்கு காரணம் இருக்கிறது; அதை நான் வெளிப்படுத்த மாட்டேன்;

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ராதிகா ஆப்தே...சோனம் கபூர்...ஆபாச இணையதளங்களை முடக்குவது முட்டாள்தனம்!

ஆபாச இணையதளங்களை முடக்க நினைப்பது முட்டாள்தனம் என்று இந்தி நடிகைகள் கண்டித்துள்ளனர். ஆபாச இணையதளங்கள் ஆபாச இணையதளங்களை மத்திய அரசு திடீரென்று முடக்கியது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் குழந்தைகளை ஆபாசப்படுத்தும் இணையங்களை மட்டும் முடக்கிவிட்டு மற்ற தளங்களுக்கு விதித்த தடை நீக்கப்பட்டது. மத்திய அரசு நடவடிக்கைக்கு நாடு முழுவதும் ஆதரவும் இருந்தது, எதிர்ப்பும் ஏற்பட்டது. குறிப்பாக, திரையுலகில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. டைரக்டர் ராம்கோபால் வர்மா முதல் ஆளாக கண்டன குரல் எழுப்பினார். முன்னணி நடிகர்-நடிகைகள் பலருக்கு இந்த முடக்கத்தில் உடன்பாடு இல்லை. வெளிப்படையாக எதிர்ப்பு காட்டாவிட்டாலும் மனதுக்குள் குமுறினார்கள்.

மலேசிய விமானப் பகுதி ரியூனியன் தீவில் ஒதுங்கியது எப்படி?

ரியூனியன் தீவில் கரை ஒதுங்கிய விமான இறக்கைப் பகுதி
ariviyal.in :கடந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய ஒரு விமானம் நடுவானில் மர்மமான முறையில் மறைந்து போயிற்று.  இந்த நிலையில் இப்போது இந்துமாக் கடலில் உள்ள ரியூனியன்(Reunion) தீவில் கரை ஒதுங்கிய விமானப் பகுதியானது காணாமல் போன அந்த விமானத்தின் ஒரு பகுதியே என அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடுவானில் காணாமல் போன  MH 370 என்னும் அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 239 பேர் பயணித்தனர். அவர்களில் 152 பேர் சீனப் பயணிகள். ஐந்து பேர் இந்தியப் பயணிகள்.

பிடிவாதம் பிடித்தால் மதுவிலக்குக்காக எதிர்கட்சிகள் அனைத்தும் இணையும்! இளங்கோவன் அதிரடி!

 மதுவிலக்கை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந் தால், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றி ணைந்து, மக்களுடன் சேர்ந்து போராடும் நிலை ஏற்படலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர் களிடம் மேலும் கூறியதாவது:
அதிமுக- பாஐக இடையே திரைமறைவில் நட்பு இருப்பதாகக் கூறி வந்தேன். பிரதமர் மோடி- தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பின் மூலம் அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. பல் வேறு திட்டங்கள் குறித்து இருவரும் பேசியதாக அரசுத் தரப்பில் கூறினாலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாகவே எனக்குத் தகவல் கிடைத்தது.
வெளிநாட்டு துணியில் பல லட்சம் செலவில் தயாரிக்கப்படும் ஆடைகளை அணியும் பிரதமர் மோடி, சென்னை நிகழ்ச்சியில் பேசும்போது, இளைஞர்கள், திரைத்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் கதர் ஆடை அணிய வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்துள்ளார். முதலில் அவர் கதர் ஆடை அணிய வேண்டும்.

பங்களாதேஷ் எழுத்தாளர் கொலை! மற்றுமொரு சுதந்திர நடுநிலையாளர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் .....


வங்கதேசத்தில் மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர் நிலோய் நீல் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது அந்த நாட்டுப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, அந்த நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். வீடு வாடகைக்குக் கேட்பது போல் நடித்து, அந்த நால்வரும் நிலோய் நீல் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து, அவரை வெட்டிக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

குரங்கின் கையிலிருந்து தவறி குளத்தில் விழுந்த குழந்தை! வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 வயது குழந்தை....ராஜஸ்தான்

குரங்கு தொல்லைக்கு பெயர்போன ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத பெண் குழந்தையை தூக்கிச் சென்ற ஒரு குரங்கு, கைதவறி தண்ணீர் தொட்டிக்குள் அதை நழுவவிட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் நீருக்குள் மூழ்கிய அந்த குழந்தை மூச்சுத்திணறி, பரிதாபமாக உயிரிழந்தது. இங்குள்ள டவுசா மாவட்டத்தில் உள்ள ரசீத்புரா கிராமத்தில் உள்ள வீட்டின் உள்ளே நேற்று நுழைந்த ஒரு குரங்கு, கட்டிலின் மீது தூங்கிக் கொண்டிருந்த யோகேஸ்வரி என்ற இரண்டு மாத கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடியது.

நடிகர் சங்கம் ஊழல்! புட்டு புட்டு வைக்கும் விஷால் கோஷ்டி



மகா கலைஞன் கமல்ஹாசன் நடிப்புலகில் தமிழரின் பெருமை . அவரை தரக்குறைவாகப் பேசும் அளவிற்கு ராதாரவிக்கு தகுதியில்லை. விஷால் அணி வெற்றி பெற வேண்டும் என்று பெரிய அளவில் இந்த முறை கலைஞர்கள் வேலை செய்வதாக தெரிகிறது