சனி, 15 ஆகஸ்ட், 2015

இளையராஜா மருத்துவமைனையில் அனுமதி.. இதயநோய்க்காக....angioplasty!

உடல்நலக் குறைவு காரணமாக, இளையராஜா, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவருக்கு ஆன்ஜியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 73 வயதான பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, நேற்று, (வெள்ளிக் கிழமை) தனக்காக, பிரத்யேக இணையதளம் ஒன்றை துவக்கினார். அன்று இரவு, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளையராஜா சேர்க்கப்பட்டார். ilayaraja அவருக்கு, இதய நோய் பாதிப்பு உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து இன்று காலை, ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், இளையராஜா உடல் நலம் தேறி வருவதாகவும், சில நாட்களில், வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறினர்.இதேபோன்று இந்து முன்னணி, மாநில அமைப்பாளர் ராமகோபாலன், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்த போது, நேற்று இரவு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சர்க்கரை அளவு அதிகரித்து இருப்பதால், அதைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் செய்து வருவதாக, மருத்துவர்கள் கூறினர்

Read more at: tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக