சென்னை
வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மதுவிலக்கை
வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் செய்தி
தொடர்பாளரும்,
நடிகையுமான குஷ்பூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,டாஸ்மாக் மூலம் வரக் கூடிய ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ள வருமானத்தை இந்த அதிமுக அரசு என்ன செய்கிறது. நீங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறீர்களா. அதுவும் கிடையாது. நல்ல ரோடு கிடையாது. இலவசமாக யாருக்கு கொடுக்கிறீர்கள். இன்று பேப்பரில் பார்த்தால் ஆர்.கே.நகரில் ஓட்டு போட்டார்கள் என அவர்களுக்கு இலவசமாக பொருட்கள் போய்க்கிட்டிருக்கு. அதுவும் அந்த பொருள் மிகவும் தரம் குறைவானதாக இருக்கு. அந்த பொருளை ஒரு வாரம் கூட வீட்டில் வைத்து ஓட்ட முடியாது.டாஸ்மாக் மூலம் வரக் கூடிய ரூபாய் 30 ஆயிரம் கோடியை என்ன செய்கிறீர்கள். அதற்கான விவரங்களை வெளியிட வேண்டும்.
டாஸ்மாக் மூலம் வருமானம் வரும்போது ஏன் பல்வேறு துறைகளில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக கொண்டுவர வேண்டும் என்றார்.தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் வருமானம் வருகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் அதற்கு ஈடாக வேறு வழியில் வருமானம் வர வாய்ப்பு உண்டா?

ஏன்
கிடையாது. மனதில் நினைத்தால் கொண்டு வரமுடியும். அது அரசாங்கத்திற்கு
தெரியும். மது மூலமாகத்தான் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால்
அதுபோன்ற நன்மையை மக்கள் கேட்கவில்லை. சோறு போடு சாப்பிடுறோம். தண்ணி கொடு
குடிக்கிறோம். ஆனால் அந்த தண்ணில சாராயத்தை மிக்ஸ் பண்ணிக் கொடுன்னு
நாங்கள் கேட்கவில்லை. பொதுமக்கள் எதிர்பார்ப்பது ஒரு அமைதியான
வாழ்வைத்தான்.
திமுக, அதிமுகவுன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. அப்போது ஏன் மதுவிலக்கு பற்றி காங்கிரஸ் வலியுறுத்தவில்லை?
இப்போது
நிலைமை மோசமாக உள்ளது. தாம்பரம் அருகே ஒரு டாஸ்மாக் கடையில் 4 பள்ளி
மாணவர்கள் மதுபானம் வாங்கிச் செல்கிறார்கள். தள்ளாடி செல்கிறார்கள். கோவை
அருகே ஒரு பள்ளி மாணவி சீருடையில் சென்று மதுபானம் வாங்கிக் சென்றார்.
அரசாங்கத்தின் பின்னால் இருக்கிறவர்கள் டாஸ்மாக் மூலம் வருமானம் பார்க்க
நினைக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் மதுவிலக்கை கையில் எடுத்துள்ளதாக கருத்து நிலவுறதே?
இரண்டு
சதவிகிதம் பேர் அப்படி கூறுகிறார்கள். அவர்கள் ஏசி ரூமில் உட்கார்ந்து
கொண்டு சொல்கிறார்கள். சசிபெருமாள் வீட்டிற்கு சென்று கேளுங்கள்.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்களை கேளுங்கள். இவ்வாறு
பதில் அளித்தார்.
படங்கள்: ஸ்டாலின் nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக