கடந்த
டிசம்பர் 16-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இயங்கிய ராணுவ
பள்ளிக்குள் புகுந்த ஏழு தீவிரவாதிகள் 125 பள்ளிக் குழந்தைகள் மற்றும்
ஆசிரியர்கள் என 151 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை
தொடர்ந்து, தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
இதன் ஒரு கட்டமாக தீவிரவாதிகள் மீதான வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்தி
தீர்ப்பு வழங்குவதற்கு ராணுவ கோர்ட்டுகளை அமைக்க நவாஸ் ஷெரீப் அரசு முடிவு
எடுத்தது. ராணுவ கோர்ட்டு அமைக்க வகை செய்யும் மசோதாவும், அதற்கு அரசியல்
சட்ட அந்தஸ்து அளிக்கத்தக்க விதத்தில் அரசியல் சட்ட திருத்தம் (21-வது
திருத்த மசோதா) செய்வதற்கான மசோதாவும் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டன. சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக
வாக்களித்ததால், மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் அந்த மசோதா
நிறைவேறியது. உச்சநீதிமன்றமும் ராணுவ கோர்ட்டு அமைக்க உத்தரவிட்டது.
ராணுவப் பள்ளி தாக்குதலில் 7 தீவிரவாதிகள் தீவிரவாத செயலலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை ராணுவ கோர்ட் விரைவாக விசாரித்து வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு அளித்தது. அப்போது தோஹீத்வால் ஜிகாத் அமைப்பைச் (TWJ) சேர்ந்த 6 பேருக்கு தூக்குத் தண்டனையும், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், கடந்த 2011-ம் ஆண்டு கராச்சி சபூரா சவுக் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு தீவிரவாதிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக