திங்கள், 10 ஆகஸ்ட், 2015

நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா விரைவில் திருமணம்! Micromax co-founder....,

நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை மணக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சத்தியன் அந்திக்காடு இயக்கிய நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளபடம் மூலம் 2001 ஆம் ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். நடிகை அசின்  ஜெயம் ரவியின் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு  தமிழில் அறிமுகமானார்.  தொடர்ந்து தமிழில் கஜினி,மஜா, சிவகாசி,வரலாறு,ஆழ்வார்,போக்கிரி,வேல், தசாவதாரம்,காவலன், ஆகிய படங்களில்  முன்னணி நடிர்களின் ஜோடியாக நடித்தார்.
மலையாளம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். கஜினி இந்தியில் எடுக்கபட்டபோது அமீர்கான் ஜோடியாக இந்தியில் நடித்தார் தொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இந்தி படங்களில் நடிக்கும் போது  மைக்ரோ மேக்ஸ் மொபைல்  கம்பெனி நிறுவனர் ராகுல் சர்மாவுடன் ( வயது 39)  காதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.இதை அந்த பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ள நடிகை அசினும்  உறுதி படுத்தி உள்ளார்.
மைக்ரோமேக்ஸ், இந்தியாவில் பிரபலமான செல்போன் சாதன தயாரிப்பு நிறுவனமாகும். ராகுல் சர்மா, விகாஸ் ஜெயின், சுமீத் அரோரா, ராஜேஷ் அகர்வால் ஆகியோர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் இது. 2000-ம் ஆண்டில் இது உதயமானது dailythanthi.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக