வங்கக்கடல் வழியே கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டைச் சேர்ந்த எண்ணூறுக்கும்
மேற்பட்ட மக்கள் கடந்த மே மாதத்தின்போது நடுக்கடலிலேயே தத்தளிக்க
விடப்பட்டிருந்தனர். அவர்களை மியான்மர் அரசு மீட்டு, சொந்த நாட்டிற்கு
திருப்பி அனுப்பும் பணியை மேற்கொண்டுவருகிறது.சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால்
இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது. வெகுநாட்களுக்கு பிறகு, நேற்று 159
பேரை துப்பாக்கி ஏந்திய ராணுவ அதிகாரிகள் வங்காளதேச அதிகாரிகளிடம்
ஒப்படைத்ததாக மியான்மர் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மியான்மர் மற்றும் வங்காளதேசத்தில் நிலவி வரும் தொடர் வன்முறை மற்றும் வறுமை காரணமாக பலர் சட்டவிரோதமாக வழியாக படகு மூலம் மலேசியா, தாய்லாந்து நாடுகளில் குடிபெயர்ந்து வருகிறார்கள். இவ்வாறு மியான்மரில் இருந்து ரோகின்கியா என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து அகதிகளாக சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த 230 பேர் இன்னும் மியான்மரில் வாழ்ந்து வருகின்றனர். விரைவில் அவர்களையும் திருப்பி அனுப்ப உள்ளதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. இதுபோல பிழைப்பிற்காக செல்பவர்களில் அதிகபட்சமானோர் இளம் வயது ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக