வியாழன், 13 ஆகஸ்ட், 2015

IIT என்ன நடக்கிறது ‘அய்.அய்.டி.’களில்? சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம்

சூத்திரர்’ கல்வி உரிமையைப் பறித்தது ‘மனுசாஸ்திரம்’. எனவே, அம்பேத்கரும் பெரியாரும் அதை எதிர்த்தனர். மக்கள் வரிப் பணத்தில் இயங்கும்- அய்.அய்.டி.கள். இந்தத் தலைவர்களின் சிந்தனைகளுக்கே அய்.அய்.டி. வளாகத்துக்குள் தடைபோட்டன. ‘மனுதர்மமே’ அய்.அய்.டி. ஏற்றுக்கொண்ட தத்துவம் என்பதே இதற்கான அர்த்தம்.இதுகூட ஒரு கண்ணோட்டத்தில் வரவேற்கவேண்டியது தான். இல்லையேல் தமிழ்நாட்டில் அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் ஒரே களத்தில் கரம்கோர்க்க நல்ல வாய்ப்பை உருவாக்கியிருக்குமா?
 ‘அய்.அய்.டி.’ என்பதற்கு மற்றொரு பெயர் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் - “அய்யர், அய்யங்கார், உயர்கல்வி நிறுவனம்”. வசிஷ்டர் படிப்புவட்டம், வந்தே மாதரம் படிப்பு வட்டம், இராமாயணபடிப்பு வட்டம், விவேகானந்தர் படிப்பு வட்டம், துர்வாசர் படிப்பு வட்டம் என்று வளாகத்தை வேதமயமாக்குவதற்கு அனுமதித்தவர்கள் - அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டத்தை மட்டும் அனுமதிக்கமறுத்தது.

 சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது திணிக்கப்படும் பாகுபாடுகளை எதிர்த்து 1998இல் தொடங்கி, 2000 ஆண்டுவரை மூன்று ஆண்டு காலம் தொடர் போராட்டங்களை பெரியார் திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது. தலித் அமைப்புகளை இணைத்து, ‘சமூகநீதி மீட்பு இயக்கம்’ ஒன்றை உருவாக்கி போராடியது.
 பொதுக் கூட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் ஆளுநரிடம் மனு என்ற வடிவில் தொடர்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.‘அய்.அய்.டி. வளாகத்துக்குள் விடுதலைப்புலிகள்ஊடுருவுகிறார்கள்’ என்று புதுடில்லியிலிருந்துசுப்ரமணியசாமியைப் பிடித்து அறிக்கை வெளியிடவைத்தது அய்.அய்.டி. நிர்வாகம். அப்போது இங்கேபணியாற்றிய 420 பேராசிரியர்களில் தலித் இரண்டுபேர்; பிற்படுத்தப்பட்டோர் 20 பேர்; ஒரு முஸ்லீம்கூடஇல்லை. இவர்கள்கூட இடஒதுக்கீட்டின் கீழ்நிரப்பப்படவில்லை. திறந்த போட்டியில் போட்டியிட்டு வந்தவர்கள்தான். 15 ஆண்டுகளுக்குப் பிறகும்இந்த நிலையில் எந்த மாற்றமும் நிகழ்ந்திடவில்லை. 2008-லிருந்து 2015ஆம் ஆண்டு வரை சென்னைஅய்.அய்.டி.யின் பேராசிரியர், மாணவர்களின்ஜாதிவாரி எண்ணிக்கை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ளன. அதேநிறுவனத்தில் மனித வளம் மற்றும் சமூக விஞ்ஞானத்துறையில் பணியாற்றும் அருண்சுதர்சன் என்ற இளம்பேராசிரியர் விவரங்களைப் பெற்றிருக்கிறார். இதன்படி 86.57 சதவீத பேராசிரியர்கள் (மொத்தம் 464 பேர்) பார்ப்பனர்கள். இதில் மிகச் சிலர் உயர் ஜாதிப்பிரிவினர் பிற்படுத்தப்பட்டவர்கள் 11.01 சதவீதம்மட்டுமே (59 பேர்) தாழ்த்தப்பட்டோர் 2.05 சதவீதம்மட்டுமே (11 பேர்). பழங்குடிப் பிரிவினர் ஒருசதவீதம்கூட இல்லை 0.31 சதவீதம் (2 பேர்).மொத்தமுள்ள 536 பேராசிரியர், துணைப்பேராசிரியர், இணைப் பேராசிரியர்களில் 90 சதவீதம்பேர் பார்ப்பனர் உயர்ஜாதியினர்.
 1998-2000 ஆண்டுகளில் வசந்தா கந்தசாமி என்றகணிதப் பேராசிரியர், பார்ப்பன ஆதிக்கத்துக்குஎதிராகக் குரல் கொடுத்ததால், துறை ரீதியாகவும்தனிப்பட்ட முறையிலும் விவரிக்க முடியாத அளவில்பழி வாங்கப்பட்டார். பல சர்வதேச ஆய்வு இதழ்களில்மிக அதிக எண்ணிக்கையில் ஆய்வுக் கட்டுரைகளைஎழுதிய பெருமை இவருக்கு உண்டு. இதற்குஇணையாக எந்த ஒரு அய்.அய்.டி. பேராசிரியரும்ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதில்லை.
 நோபல் பரிசுக்கு இணையாக மதிப்பிடப்படும்‘பட்நாகர் விருது’, 1996இல் இவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதுவரை சென்னை அய்.அய்.டி.யிலிருந்துஇந்த விருதை எவரும் பெற்றிடவில்லை என்ற நிலையிலும் அய்.அய்.டி.யின் முன்னாள் இயக்குனராகஇருந்த ஒரு பார்ப்பன இயக்குனர் வெளிநாட்டுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவசரமாக திரும்பிவந்து, அவ்விருது கிடைத்துவிடாமல் தடுத்துநிறுத்தினார். இதை எதிர்த்து, வசந்தா கந்தசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குமனுவில் இந்த விவரங்கள் சுட்டிக் காட்டப்பட்டன.
 அய்.அய்.டி.யின் ஜாதி வெறிக்கு எதிராகஉயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்ஏராளம். அத்தனையும் விசாரணைக்கு வராமல்கிடப்பில்தான் போடப்பட்டுள்ளன. ஒரே ஒருமுறைதான் அய்.அய்.டி. ஜாதியத்துக்கு எதிரான ஒருதீர்ப்பு உயர்நீதிமன்றத்திலிருந்து வந்தது. வழக்குஇதுதான். அய்.அய்.டி. இயக்குனராக பலஆண்டுகாலம் வேதகால ஆட்சி நடத்திய நடராஜன்என்பவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப்பதவிக்கு ஆனந்த் என்ற பார்ப்பனர் கொல்லைப்புறவழியாக வந்துவிட்டார்.
 அவரது நியமனம் முறையாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் இரகசியமாக அரங்கேற்றமானது.அதற்கான ஆவண சான்றுகளும் இருந்தன. வழக்கைவிசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்த நியமனத்தின்முறைகேடுகளை எடுத்துக்காட்டி, இயக்குநர்நியமனத்தை செல்லாது என்று அறிவித்தார். இந்தவரலாற்றுப் புகழ்மிக்க தீர்ப்பை வழங்கியது நீதிபதிசந்துரு. இதுவும் நிலைத்திடவில்லை. அடுத்த சிலவாரங்களிலேயே மேல்முறையீட்டில் நிர்வாகம்தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுவிட்டது.
 இதே அய்.அய்.டி.யில் படித்து, சிறந்தமாணவருக்கான விருதையும் பெற்று, அமெரிக்கா-ஜப்பான் போன்ற நாடுகளில் கவுரப் பேராசிரியராகப்பணியாற்றிவிட்டு சொந்த நாட்டுக்கு சேவை செய்யும்விருப்பத்தோடு திரும்பினார் ஒரு பேராசிரியர்.அய்.அய்.டி.யில் அவர் மனு செய்திருந்தார். அவர்பெயர் முனைவர் முரளிதரன். 50க்கும் மேற்பட்டஇவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள், சர்வதேச அளவில்பாராட்டுகளைப் பெற்றவை. அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகளுக்கான தகவல் களஞ்சியத்தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், அவரிடம் இல்லாமல் போன தகுதி-உயர் குடிப்பிறப்புதான். ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட’ சமுதாயத்தில் பிறந்து விட்டார். இந்த உயிரியல் மருத்துவப்பொறியாளரான முனைவர் முரளிதரன், அய்.அய்.டி.யில், சிறந்த மாணவருக்கான விருது கிடைத்தும், பணிவாய்ப்புக்கான உரிய வாய்ப்பு, தகுதி இருந்தும்நிர்வாகம் மறுத்தது. நீதிமன்றம் போனார் முரளிதரன்.
 ஆனால், அய்.அய்.டி. இயக்குனராக இருந்தநடராசன், இவரை அய்.அய்.டி. வளாகத்துக்குள்ளேயே நுழைவதற்கு தடை விதிக்கும் ஆணையைப்பிறப்பித்து, தனது ஆணவத்தை அதிகாரத் திமிரைவெளிப்படுத்தினார். எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும்இப்படி ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்குமாஎன்று தெரியவில்லை. கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இந்தப் பேராசிரியர் புகார் கொடுக்கப்போனார். காவல் நிலையம் புகாரை பதிவு செய்யவேமறுத்து விட்டது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் அவமதிப்புக்கும் நீதி கேட்டு நீதிமன்றங்களின்படியேறி வழக்குகளைத் தொடர்ந்தார். அவருக்குநீதியின் கதவு திறக்கப்படவேயில்லை.
 நாட்டில் தொழில்நுட்ப உயர்கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த 1959ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் பம்பாய், சென்னை, டெல்லி, கான்பூர், கோரக்பூர் மற்றும் கவுகாத்தியில்தொடங்கப்பட்டன. தேசிய முக்கியத்துவம் பெற்றஇந்த நிறுவனங்களின் வேந்தர் (Chancellor) -குடியரசுத் தலைவர். 1961ஆம் ஆண்டு நாடாளுமன்றச்சட்டத்தின் கீழ், இந்த நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டன. 1963இல் சட்டத்தில் திருத்தம்செய்யப்பட்டு, வெகு மக்களின் மேம்பாடே இதன்நோக்கம் என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மக்கள் வரிப்பணத்தில் வெகு மக்கள்மேம்பாட்டுக்காக நடத்தப்படும் இந்த நிறுவனம், “பூணூல்”களுக்குள் முடக்கப்பட்டு விட்டது.நிறுவனம் தொடங்கப்பட்டு, 20 ஆண்டுகள் வரைஅரசியல் சட்டம் உறுதி செய்திருந்த தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டையே பின்பற்ற மறுத்துவிட்டனர். 1978ஆம்ஆண்டுதான் அதுவும் நீதிமன்றத் தலையீட்டுக்குப்பிறகே தலித் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைப்பின்பற்ற ஒப்புக் கொண்டனர். அதுவும்கூட கண்துடைப்புதான். அய்.அய்.டி. வரலாற்றில், இதுவரைஇந்த இடஒதுக்கீட்டுக்கான இடங்கள் பூர்த்திசெய்யப்பட்டதே இல்லை. இப்போதும் என்ன நிலை? அய்.அய்.டி. மனிதவளம் மற்றும் சமூக விஞ்ஞானத்துறை, இளம் பேராசிரியர் அருள் சுதர்சன், தகவல்பெறும் உரிமை சட்டத்தில் பெற்றுள்ள தகவல்களேஇதை உறுதி செய்கின்றன.
 2008-லிருந்து 2015 வரை ஆய்வுப் பட்டப்படிப்புக்கு (பிஎச்.டி.) அனுமதிக்கப்பட்ட தலித்மாணவர் எண்ணிக்கை 142. பழங்குடி மாணவர்எண்ணிக்கை 9. திறந்த போட்டி வழியாக நுழைந்தபார்ப்பனர்கள் - 1592 பேர். மேல் பட்டப் படிப்புக்கு(எம்.எஸ்.) பொது போட்டி வழியாக நுழைந்தபார்ப்பனர் - 1194 பேர். இதில் வெகு சிலர் மட்டுமேமுன்னேறிய ஜாதிப் பிரிவினர்) இதில் பிற்படுத்தப்பட்டோர் 740. தலித் மாணவர்கள் 29 பேர் பழங்குடிப்பிரிவு மாணவர் 3 பேர். இது தவிர, ஏனைய துறைகளில் பொதுப் போட்டி வழியாக நுழைந்தவர்கள்1,194 பார்ப்பன/உயர்ஜாதியினர். 429 பேர்பிற்படுத்தப்பட்டவர்கள். 650 பேராசிரியர், துணைப்பேராசிரியர்களும், 8000 மாணவர்களும், 3000 ஊழியர்களும் பணியாற்றும் மிகப் பெரும் கல்விநிறுவனத்தில் இடஒதுக்கீடு கொள்கைகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதை இந்த புள்ளி விவரங்கள்உறுதிப்படுத்துகின்றன. (தகவல்: ‘பிரன்ட்லைன்’, ஜூன் 26, 2015)
 இவ்வளவுக்குப் பிறகு, 2008ஆம் ஆண்டு மத்தியமனித வளத்துறை அமைச்சகம், இடஒதுக்கீட்டைஉறுதி செய்யக் கோரி குறிப்பாணை ஒன்றைஅய்.அய்.டி.க்கு அனுப்பியது. தலித் பிரிவினருக்கு15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம். ஆசிரியர்-மாணவர் தேர்வுகளில் உறுதி செய்ய வேண்டும் என்றுஅந்த குறிப்பாணை வலியுறுத்தியது. அய்.அய்.டி.நிறுவனம், அந்த ஆணையை அமுல்படுத்தமறுத்ததோடு, அதை எதிர்க்கவும் முடிவெடுத்தது.அய்.அய்.டி., தனது ‘செனட்’ கூட்டத்தைக் கூட்டி, இடஒதுக்கீட்டு ஆணையை நிறைவேற்ற முடியாதுஎன்று தீர்மானமே நிறைவேற்றியது. மத்திய மனிதவளத் துறை தனது குறிப்பாணையை திரும்பப் பெறவேண்டும் என்றும் ஆட்சிக்கே அறிவுறுத்தியது. வெகுமக்கள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டநிறுவனம், தலித், பிற்படுத்தப்பட்டவர்களுக்குஅவர்களுக்கான சட்டப்படியான உரிமைக்கதவுகளை இழுத்து மூடியது.
 இந்த நிறுவனங்களில் மக்கள் வரிப் பணத்தில்படித்த ‘அறிவாளிகள்’ இறுதியாண்டு படிக்கும்போதே வெளிநாடுகளில் வேலை நியமன ஆணைகளையும் விசாவையும் பெற்றுக் கொண்டு பட்டம்பெற்ற உடனேயே விமானம் ஏறி விடுகிறார்கள்.இந்தியாவில் குறைந்தது சில பல ஆண்டுகளாவதுபணியாற்றுவதை கட்டாயப்படுத்தும்நிபந்தனைகளைக்கூட எதையும் இந்த ‘தேசபக்த’ நிர்வாகங்கள் விதிக்கத் தயாராக இல்லை. keetru.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக