பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளதாக கூறி,
நடிகர் பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை
உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்திற்காக, நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரம் ஒன்றில்
நடித்துள்ளார். அந்த விளம்பரம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாகவும்,
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சஃபியா என்ற பெண் உயர்நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நடிகர் பிரகாஷ்ராஜ் திருமண வயதில் உள்ள பெண்களினால்
பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக கூறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரகாஷ்ராஜின் இந்த விளம்பரம், பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் சஃபியா வலியுறுத்தியுள்ளார். இந்த மனு, வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது
Read more at: h /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக