ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

ராதிகா ஆப்தே...சோனம் கபூர்...ஆபாச இணையதளங்களை முடக்குவது முட்டாள்தனம்!

ஆபாச இணையதளங்களை முடக்க நினைப்பது முட்டாள்தனம் என்று இந்தி நடிகைகள் கண்டித்துள்ளனர். ஆபாச இணையதளங்கள் ஆபாச இணையதளங்களை மத்திய அரசு திடீரென்று முடக்கியது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் குழந்தைகளை ஆபாசப்படுத்தும் இணையங்களை மட்டும் முடக்கிவிட்டு மற்ற தளங்களுக்கு விதித்த தடை நீக்கப்பட்டது. மத்திய அரசு நடவடிக்கைக்கு நாடு முழுவதும் ஆதரவும் இருந்தது, எதிர்ப்பும் ஏற்பட்டது. குறிப்பாக, திரையுலகில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. டைரக்டர் ராம்கோபால் வர்மா முதல் ஆளாக கண்டன குரல் எழுப்பினார். முன்னணி நடிகர்-நடிகைகள் பலருக்கு இந்த முடக்கத்தில் உடன்பாடு இல்லை. வெளிப்படையாக எதிர்ப்பு காட்டாவிட்டாலும் மனதுக்குள் குமுறினார்கள்.


ராதிகா ஆப்தே

திரையுலகில் ஆபாசம் தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது. முத்தக்காட்சிகள், ஆடை குறைப்புகள் சகஜமாகிவிட்டன. இந்தி நடிகைகள் நிர்வாணமாக நடிக்கவும் தயாராகி விட்டார்கள். ராதிகா ஆப்தே புதுப்படமொன்றில் நிர்வாணமாக நடித்த காட்சியொன்று இணையதளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இந்தி படவுலகினருக்கு ஆபாச இணையதள முடக்கம் எரிச்சலூட்டுவதாக அமைந்தது.

சர்ச்சை விஷயங்களில் அதிரடி கருத்து சொல்லும் குஷ்புவிடம் ஆபாச இணைய தளமுடக்கம் பற்றி கேட்டபோது, ’இது சம்பந்தமாக எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை’ என்று கூறிவிட்டு நழுவினார்.

சோனம் கபூர்

தனுஷ் ஜோடியாக ‘அம்பிகாபதி’ படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான சோனம் கபூர், வெளிப்படையாக சீறினார். அவர் கூறும்போது, ‘ஆபாச இணையதளங்களை முடக்குவது என்பது முட்டாள்தனமான சிந்தனை’ என்றார்.

இந்தி நடிகை ஷோபியா ஹயத் கூறும்போது, ‘ஆபாச இணையதளங்களை முடக்குவது வருத்தம் அளிக்கிறது. உணர்ச்சிகளை தூண்டுவதற்கும், ஆபாசத்துக்கும் வித்தியாசம் உண்டு. உணர்ச்சிகளை தூண்டும் சக்தியை பெண்மையின் பலமாக நான் கருதுகிறேன்’ என்றார். அத்துடன் தனது நிர்வாண படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக