ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

பிடிவாதம் பிடித்தால் மதுவிலக்குக்காக எதிர்கட்சிகள் அனைத்தும் இணையும்! இளங்கோவன் அதிரடி!

 மதுவிலக்கை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந் தால், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றி ணைந்து, மக்களுடன் சேர்ந்து போராடும் நிலை ஏற்படலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர் களிடம் மேலும் கூறியதாவது:
அதிமுக- பாஐக இடையே திரைமறைவில் நட்பு இருப்பதாகக் கூறி வந்தேன். பிரதமர் மோடி- தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பின் மூலம் அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. பல் வேறு திட்டங்கள் குறித்து இருவரும் பேசியதாக அரசுத் தரப்பில் கூறினாலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாகவே எனக்குத் தகவல் கிடைத்தது.
வெளிநாட்டு துணியில் பல லட்சம் செலவில் தயாரிக்கப்படும் ஆடைகளை அணியும் பிரதமர் மோடி, சென்னை நிகழ்ச்சியில் பேசும்போது, இளைஞர்கள், திரைத்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் கதர் ஆடை அணிய வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்துள்ளார். முதலில் அவர் கதர் ஆடை அணிய வேண்டும்.

தமிழகத்துக்கு வந்த மோடி, மது விலக்குக்காக போராடி மறைந்த காந்திய வாதி சசிபெருமாளுக்கு அனுதாபம் தெரிவிக்காதது மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், உடல் நலன் குன்றியிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், விமான நிலையத் துக்குச் சென்று பிரதமரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற முதல்வர் ஜெயலலிதாவும், சசிபெருமாள் மறைவு குறித்து எதுவும் கூறாதது வேதனைக்குரியது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி தமிழக காங் கிரஸ் நடத்தவுள்ள போராட்டம் குறித்து இரண்டொரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றார் இளங்கோவன்  /tamil.thehindu.com/tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக