புதன், 12 ஆகஸ்ட், 2015

பீகார்: லாலு ,நிதிஷ் கட்சிகள் தலா 100 தொகுதிகள் , காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது!

பிகாரில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் தலா 100 இடங்களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் ஆகியோர் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து பாட்னாவில் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இருகட்சிகளும் தலா 100 இடங்களில் போட்டியிடுவது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களை ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த இரு தலைவர்களும் இதனை கூட்டாக அறிவித்தனர். 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவை தேர்தல், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடைபெறலாம் என தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. dinamani.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக