சனி, 19 ஏப்ரல், 2014

மோடியை விமர்சிப்பவர்களுக்கு இங்கு இடம் இல்லை;பாகிஸ்தானுக்கு போகலாம்: பீகார் பாஜக தலைவர் பேச்சு

மோடியைப்பற்றி விமர்சிப்பவர்களுக்கு  இந்தியாவில் இடம் இல்லை, அவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம் என்று பீகார் மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய கிரிராஜ் சிங், பாஜக பிரமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு தடையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம். வருங்காலத்தில் அவர்களுக்கு இந்தியாவில் இடம் இருக்காது. பாகிஸ்தானில் மட்டுமே இடம் இருக்கும். என்றார். சர்சைக்குரிய வகையில் பேசிய கிரிராஜ்க்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆட்சிக்கு வருவோமா என்பது தெரிய முதலே பயங்கர வாதத்தை பாஜக பரப்புகிறது ! மோடி பிரதமர் ஆகிவிட்டால் இவ்வளவு காலமும் கட்டி காத்த ஜனநாயக பாரம்பரியம் எல்லாமே வீணாகிவிடும் நாடு குட்டி சுவராகி விடும் 

முதல் திரையரங்க நிறுவனர்' சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த தினம்.. ஒரு வித்தியாச விழா!


சின்ன வயதில் டூரிங் கொட்டகைகளில் படம் பார்த்த நினைவுகளைக் கிளறிவிட்டது நேற்று நடந்த ஒன்பது குழு சம்பத் படத்தின் இசை வெளியீட்டு விழா. இது வெறும் இசை வெளியீட்டு விழா அல்ல... சினிமா தியேட்டர்களை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த நாளைக் கொண்டாடும் விழாவாக அமைந்தது. அவர் பிறந்த நாளை திரையரங்கு தினமாக நேற்று அறிவித்தனர்.  இதற்காக திறந்த வெளியில் ஒரு பெரிய திரை அமைத்து, டூரிங் டாக்கீஸ் செட்டப்பை போட்டிருந்தார்கள். டீ ஸ்டால் எல்லாம் அமைத்து, காளி மார்க் குளிர்பானங்களை வழங்கி, அந்த பழைய நினைவுகளுக்கே அழைத்துப் போய்விட்டார்கள். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் நாசர், அப்புக்குட்டி, வேதிகா, இயக்குனர்கள் நவீன், கமலக் கண்ணன், குழந்தை வேலப்பன், தயாரிப்பாளர் தனஞ்செயன் கலந்துகொண்டனர். நாசர் பேசுகையில், "சாமிக்கண்ணு அய்யாவுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், எந்த அளவுக்கு சினிமாவின் மேல் காதல் இருந்திருந்தால் அந்தக் காலத்திலேயே திரையரங்கைக் கட்டியிருக்க வேண்டும்," என்றார். ‘மூடர்கூடம்' நவீன் பேசும்போது, "தியேட்டர்கள் தேவையா?'' என்று என்னிடம் கேட்டால் ‘நான் தேவைதான்' என்றே கூறுவேன். காரணம் மக்களிடையே சமத்துவத்தை உண்டுபண்ணுவதே தியேட்டர்கள்தான்.

தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் சமந்தா

விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா.‘கோலி சோடா‘ படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது பற்றி விஜய்மில்டன் கூறும்போது, ‘விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். வரும் வாரத்தில் சமந்தாவை சந்தித்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் சொல்ல உள்ளேன். அதன்பிறகு அவர் கால்ஷீட் பற்றி முடிவாகும் என்றார். சமந்தா ஏற்கனவே ‘கோலி சோடா படம் பற்றி தனது இணையதள பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் சமந்தா தற்போது ‘கத்தி படத்தில் விஜய் ஜோடியாகவும், ‘அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாகவும் நடித்து வருகிறார். - See more at: tamilmurasu.org

அறிக்கை மூலம் மட்டுமே ராமதாஸ் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு

சென்னை: தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, தேமுதிக மற்றும் பாஜக தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமல்லாது, பாமக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி உள்ளிட்ட தங்கள் கட்சி போட்டியிடும் இடங்களில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இது கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ, விஜயகாந்த் மற்றும் பாஜக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.  அய்யா ரொம்பதான் கெட்டிகாரர் நிலவரம் புரிஞ்சிடுச்சு !இந்த தேர்தல் எக்கேடாவது கேட்டு தொலையட்டும் சட்டசபை தெர்தல்லை ஆவது மாம்பழ சின்னத்தை காப்பாத்த முடிவு எடுத்துட்டார்!இனி சமுதாய கூட்டணியா? திமுக கூட்டணியா ? 

மோடியை தாக்குவது ஜெயலலிதாவுக்கு பலன் தருமா? Too Too late too too little

தமிழக முதல்வரும், அதிமுக, தலைவருமான ஜெயலலிதாவின் தொடர் நிலைப்பாடு மாற்றங்கள், அந்த கட்சியினர் மத்தியில் பெரும் சோர்வை ஏற்படுத்தி உள்ளதாக, அதிமுக,வில் பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்
கடந்த மார்ச் 3ம் தேதி, ஜெயலலிதா, தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கிய போது, கள நிலவரம் அதிமுக,விற்கு சாதகமாக இருந்தது. பின், அவர் கம்யூ, கட்சிகளை கழற்றிவிட்டார் அப்போது, பாஜ,வுடன் கூட்டணி வைப்பதற்காக தான் இத்தகைய முடிவை, ஜெயலலிதா எடுத்து உள்ளார் என்ற பேச்சு நிலவியது. அதற்கு ஏற்ப, அந்த நேரத்தில் பாஜ,வின் தற்போதைய கூட்டணி முடிவாகவில்லை; ஜெயலலிதாவும், பிரசார மேடைகளில் பாஜ,வை விமர்சிப்பதை தவிர்த்தார்பாஜ, கூட்டணி முடிவான பின்பும், விஜயகாந்தை விமர்சிப்பதில் தான் அதிமுக, ஆர்வம் காட்டியது .இதனால், தேர்தலுக்கு பின் கூட, அதிமுக, - பாஜ, கூட்டணி உருவாகலாம் என்ற, தோற்றம் உருவாக்கப்பட்டு வந்தது.  அம்மா எப்படியாவது கஷ்டப்பட்டு ஜெயிச்சு வந்து மத்திய அரசோடு ஒட்டிகிட்டா தான் பெங்களூர் வழக்கை ஒழித்து கட்ட முடியும் ஆனா அம்மாதான் பேருந்தை மிஸ் பண்ணிட்டாங்களே ? எவ்வளவுதான் லக் அடிச்சாலும் அதை மட்டும் நம்பாமல் கொஞ்சம் அறிவையும் தர்மத்தையும் நம்பினால் இந்த நிலைமை வந்திருக்குமா ?

பஞ்சாயத்து தீர்ப்பின் படி13 பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை


மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து உத்தரவுப்படி 13 பேர் கொண்ட கும்பலால் பழங்குடியின பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜனவரி 21 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து உத்தரவின்படி 13 பேர் ஒரு பழங்குடியின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள சபல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பழங்குடியின பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்தார். இதை அறிந்த பஞ்சாயத்தினர் மாற்று ஜாதி இளைஞரை காதலித்த குற்றத்திற்காக ரூ.50,000 அபராதம் விதித்தனர். அந்த பெண் அபராதத்தை செலுத்தாததால் பஞ்சாயத்து கூடி அந்த பெண்ணையும், அவரது காதலரையும் நாள் முழுவதும் சிறை பிடித்து வைத்தனர். தங்களால் அவ்வளவு பெரிய தொகையை அபராதமாக செலுத்த முடியாது என்று அந்த பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்தில் தெரிவித்ததை அடுத்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு பஞ்சாயத்து உத்தரவிட்டது.

கெஜ்ரிவால் : என் மீதான தாக்குதல்களுக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளது

என் மீதான தாக்குதல்களுக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளது: கெஜ்ரிவால்மக்களவை தேர்தலில் வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபகாலமாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து வாரணாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசுகையில், 'கன்னத்தில் அறை, முகத்தில் குத்து என ஆரம்பித்து நேற்று முன்தினம் கற்களால் தாக்கப்பட்டது வரை அனைத்து தாக்குதல்களுக்கும் பின்னால் காரணமாக இருப்பது பா.ஜ.க. தான்' என்றார்.

ராஜ்நாத் சிங் : பாஜக ஆட்சியமைக்க அதிமுக தயவு தேவைப்படாது

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் | படம்: ஆர்.எம்.ராஜரத்தினம்
தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், மத்தியில் ஆட்சியமைக்க அதிமுகவின் தயவு தேவைப்படாது என்றும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள திருச்சி வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
"மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. மோடி நிச்சயம் பிரதமர் ஆவார். மத்தியில் பாஜக ஆட்சியமைக்க, அதிமுக உள்ளிட்ட வேறு எந்தக் கட்சிகளின் தயவும் தேவைப்படாது. வேறோன்னுமில்லைங்க பாஜக ஆட்சி அமைக்க திமுக தயவுதான் தேவைப்படும் என்ற நிலைமைதான் தற்போது உள்ளதாக பாஜக நம்புகிறது ! அதாகப்பட்டது பாஜக அதிமுகவுடன் சுமுக உறவு இல்லைன்னு  காட்டுறாங்களாம் ! 

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

மகனை கொலை செய்த வாலிபரின் மரண தண்டனையை தடுத்த தாய்

டெஹ்ரான் : ஈரானில் மகனை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரின் தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் தாய் மன்னித்து விடுவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரானில் உள்ள நவுஷரார் என்ற நகரத்தை சேர்ந்தவர் அப்துல்கனி ஹுசைன் ஷெடாக். இவர் முன்னாள் கால்பந்து வீரர். இவரது மனைவி சமீரா அலிநிஜாத். இவர்களுக்கு 2 மகன்கள். ஒருவர் ஏற்கனவே பைக் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மற்றொரு மகனை, பலால் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு தெருவில் ஏற்பட்ட சண்டையின் போது கத்தியால் குத்தி கொலை செய்தார். போலீசார் பலாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பலாலுக்கு பொது இடத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

நக்கீரன் சர்வே: 15 தொகுதிகளில் திமுக- 10; அதிமுக-3 ; பாஜக -1 வெல்லும்!! வைகோ, சுதீஷுக்கு படுதோல்வி!!

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக நக்கீரன் வாரமிருறை இதழ் கருத்து கணிப்பு நடத்தி 15 தொகுதிகள் முடிவுகளை அறிவித்துள்ளது. இதில் திமுக 10 தொகுதிகளிலும் அதிமுக 3 தொகுதிகளிலும் பாஜக 1 தொகுதியிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் அதிமுக- திமுக சமபலத்தில் இருக்கிறதாம். விருதுநகர் தொகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, சேலம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் தோல்வியை சந்திப்பர் என்கிறது நக்கீரன் கருத்து கணிப்பு. லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் நக்கீரன் வாரம் இருமுறை கருத்து கணிப்புகளை நடத்தியது. ஒரு தொகுதிக்கு 600 பேர் (ஆண்கள் 300, பெண்கள் 300) என்ற அடிப்படையில் இக்கருத்து கணிப்பை நடத்தியதாக நக்கீரன் தெரிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட கருத்து கணிப்பில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் தோல்வியைத் தழுவுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.  

திமுக வெல்லும் தொகுதிகள் விருதுநகர், விழுப்புரம், ராமநாதபுரம், வடசென்னை, நாகை, வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருச்சி 

அதிமுக வெல்லும் தொகுதிகள் சேலம், பொள்ளாச்சி, கரூர் 

பாஜக வெல்லும் தொகுதி கன்னியாகுமரி

இந்தியா இதுவரை சந்தித்திராத மோசமான பிரதமர் வேட்பாளர்

யசோதாபென் - மோடினைவியை மறைத்த மோடி விவகாரத்தில், பாஜக ‘ஒழுக்க சிகாமணிகள்’ முன்வைக்கும் கருத்து என்ன?  ஒருவருடைய தனிப்பட்ட விவகாரங்களில் மூக்கை நுழைக்கக் கூடாதாம், அது அநாகரீகமாம். இது வரை மோடி போட்டியிட்ட தேர்தல்களுக்கு தாக்கல் செய்த வேட்புமனுக்களில் திருமணம் குறித்த விபரத்தை குறிப்பிடாமல் வெற்றிடமாக விட்டு விட்டது, அவரது தனிப்பட்ட விருப்பமாம். அப்போதைய விதி முறைகளின் படி அது தவறில்லை என்பவர்கள், இப்போதுதான் உச்சநீதிமன்றம் அனைத்து விபரங்களையும் குறிப்பிடா விட்டால், வேட்பு மனு செல்லுபடியாகாது என்று கூறி விட்டது என்கிறார்கள். அதனால், சட்டத்துக்கு அடிபணிந்து தன்னுடைய திருமண உறவு பற்றிய விபரத்தை மோடி வேட்பு மனுவில் குறிப்பிட்டிருப்பதாக பாஜக சமாளிக்கிறது.
யசோதாபென் – மோடி
இது பாஜகவோடு மோடியை ‘வளர்ச்சி’க்காக ஆதரிக்கும் அறிவு ஜீவிகளின் விளக்கமும் கூட. ஒரு தலைவனின் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருந்தாலும் அதில் சில இருட்டு பக்கங்கள் வைத்திருக்க உரிமை உண்டு என்கிறார்கள். எனில் மோனிகா லிவின்ஸ்கி விவகாரத்தில் அந்த உரிமை கிளிண்டனுக்கு தரப்படவில்லையே, ஏன்? தனி நபர் உரிமையின் ‘தாயகமானா’ அமெரிக்காவிலேயே இது பிரச்சினைக்குள்ளானது எங்ஙனம்?
மோடி ஏன் மறைத்தார்?

நந்திதா தாஸ் : மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்க முயலும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

மும்பை:இந்தி படவுலகில் பா.ஜ. பிரதம வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு அலை கிளம்பி உள்ளது. இதையடுத்து பாலிவுட்  2 அணியாக உடைந்தது.நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில் பல மாநிலங்களில் வாக்கு பதிவும் நடந்து வருகிறது. இன்று 5ம் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்கு பதிவு நடக்கிறது. தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு சினிமா நடிகர், நடிகைகள் களத்தில் இறங்கி உள்ளனர். காங்கிரசுக்கு ஆதரவாக நக்மா, ராஜ் பப்பர், கோவிந்தா உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்கின்றனர். பா.ஜ. சார்பில் நடிகை ஹேமமாலினி, வினோத் கன்னா, இசை அமைப்பாளர் பப்பி லஹரி, டிவி நடிகை ஸ்மிருதி ராணி போன்றவர்கள் போட்டியிடுகின்றனர். இதையடுத்து பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜ பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் சல்மான் கானை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். ஆனால், மோடிக்கு ஆதரவு, எதிர்ப்பு என 2 அணிகளாக இந்தி படவுலகம் பிளவுபட்டு நிற்கிறது. நடிகை நந்திதா தாஸ், பாலிவுட் இயக்குனர்கள் இம்தியாஸ் அலி, விஷால் பரத்வாஜ், கோவிந்த் நிஹலானி, சயீத் மிஸ்ரா, சோயா அக்தர், கபிர் கான், மகேஷ் பட், சுபா முத்கல், அதிதி ராவ் ஹைத்ரி உள்ளிட்டோர் இணைந்து வாக்காளர்களுக்கு பகிரங்க கடிதம் எழுதி உள்ளனர்.

முலாயம் சிங் அதிரடி : முக்கிய பாஜக தலைவர்கள் மோடி பிரதமர் ஆவதை தடுக்க வேண்டுகோள் ! முலாயம் எழுப்பியுள்ள புதிய சர்ச்சை

"நரேந்திர மோடிக்கு பிரதமர் பதவி கிடைப்பதைத் தடுக்க வேண்டும் என பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்துள்ளனர்'' என சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், "பாஜகவின் மூத்த தலைவர்களுள் பலர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இல்லை என்பதால் அவரால் நிச்சயம் பிரதமர் பதவியை அடைய முடியாது. அவர் பிரதமர் ஆவதைத் தடுக்க என்னால் மட்டுமே முடியும் எனக் கருதி அக்கட்சியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர்.
மோடி பிரதமர் ஆவதைத் தடுப்போம் என அவர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்' என்றார்.
முன்னதாக மெயின்புரியில் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங், "மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும். அந்த அணியில் சமாஜவாதிதான் பெரிய கட்சியாக இருக்கும் என்பதால் நான் பிரதமர் பதவிக்கு உரிமை கோருவேன்' என்றார்.dinamani.com


தள்ளுபடி செய்த விவசாய கடனில் எச்.ராஜா 30 லட்சம் பலனடைந்தார்: திருச்சி வேலுச்சாமி பேச்சு

திருச்சி வேலுச்சாமி பேச்சு;காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடனில் ரூ.30 லட்சம் பலனடைந்தவர் சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா. என்று கீரமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுசாமி பேசினார்.
எச். ராஜா பலனடைந்தார் :
 சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு கீரமங்கலம் பகுதியில் வாக்குகள் சேகரிக்க பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுச்சாமி பேசினார். அவர் பேசியதாவது.. யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்ற கனவில் மிதக்கிறார் மோடி. காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை சொன்னால் பா.ஜ.க பின்னால் போய்விடும். காங்கிரஸ் அரசாங்கம் தள்ளுபடி செய்த விவசாய கடனில் இப்போது கார்த்திக் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிடும் பபா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா 15 ஏக்கர் நிலத்தை பல வங்கிகளில் காட்டி ரூ. 30 லட்சம் கடன் வாங்கி தள்ளுபடி செய்யப்பட்டது. அதிகம் பலனடைந்தவர் என்ற பட்டியலில் எச்.ராஜாவும் இருக்கிறார். அண்மையில் தமிழ்நாடு உற்பத்தி செய்த மிக கேவலமான அரசியல்வாதிகளில் இந்த ராஜா கூஜாவுக்கு தான் முதல் இடம் 

வீரமணி: நடிகர்களை தேடி பிரதமர் வேட்பாளர் அலைவது வெட்க கேடு !

கும்பகோணத்தில் நேற்று இரவு தி.மு.க. கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலியை ஆதரித்து பிரச்சார கூட்டம் நடைபெற்றது.  முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., நகர பொறுப்பாளர் தமிழழகன் மற்றும் திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியபோது,   ‘’நடைபெறவுள்ள தேர்தலுக்கும் இதுவரை நடந்த தேர்தலுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. தி.மு.க. தலைமையில் அமைந்துள்ளது மகத்தான, மக்கள் கூட்டணியாகும். ஆனால் எதிரணியினர் அமைத்துள்ள கூட்டணி குறித்து நாங்கள் பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டிய கவலையில் உள்ளோம்.  வேறொன்னும் இல்லைங்க அவருக்கு தமில் படம்னா ரொம்ப இஷ்டம் ! குஜராத் கலவர டிம்ல கூட தமில் படம்தான் பாதாங்கோ அதுவும் ரசனி விசைன்னா உசிருங்கோ ! விகடன் குமுதம் மாமாக்கள் இப்படிதைன் சொல்லுவாங்கோ!

சவுதியில் பெண்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்தவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை

சவுதி அரபியாவில் அரசாட்சிக்கு எதிராக பெண்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை மேற்கொண்டவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சவுதி அரேபியாவை அல் சவ்த் குடும்பம் ஆட்சி செய்து வருகிறது. இதனால், அங்கு அரசியல் கட்சிகள் செயல்பட மறுக்கப்பட்டு வருகிறது. மன்னர் ஆட்சியை எதிர்த்து போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசாட்சிக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டங்களை மேற்கொண்டவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், பெண்களை போராட்டதிற்காக ஒருங்கிணைத்த அபு அல் காதிர் என்றவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சவுதி அரேபியாவின் ரியாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டுள்ள அபு அல் காதிர், அரசாட்சிக்கு எதிராக சர்வதே மனித உரிமை ஆணையத்தை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

தெனாலிராமன்..இந்தியாவில் வடிவேலுக்கு இணையான நடிகர்கள் இல்லை.


Vadivelu
இன்று வடிவேலுவின் தெனாலிராமன் வெளியாகிறது. அவர் காமெடியில் வசனத்திற்கு முக்கிய பங்களிப்பு இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு வசனம், நகைச்சுவை உணர்வே இல்லாமல் செயற்கையான சென்டிமெண்ட் வசனங்களை எழுதி குவித்த ஆரூர் தாஸ். (பாசமலர்)
அவர் எந்த அளவிற்கு காமெடி வசனங்களை எழுதியிருப்பார்?
இருந்தாலும் வடிவேலு பேசுகிற ‘பாவனை’ க்கு எந்த வசனத்தையும் தூக்கி நிறுத்தி விடும் ஆற்றல் இருக்கிறது.
மிக அதிகமாக தனக்கு தானே பேசிக் கொள்வதிலும், mind voice க்கு ஏற்ப முக பாவனைகளோடு வசன உச்சரிப்புகளை அவர் மாற்றுகிற முறையும் அலாதியானது.
சோகமோ, மகிழ்ச்சியோ வசனம் பேசுகிறபோது, அந்த வசனத்திற்குள்ளேயே உணர்வும் பாவமும் இருக்கும். அந்த இரண்டுமே பாதி நடிப்பை கொண்டு வந்து விடும்.
ஆனால், ஒருவர் வசனம் பேசும்போது உடன் நடிக்கிறவர் அதற்கேற்ப reaction செய்வது தான் கடினம். அதை விட கடினம் mind voice க்கு ஏற்ப உதடு அசையாமல் முகபாவனைகளால் உணர்வுகளை சொல்வது. அதிலும் காமெடி செய்வது மிகக் கடினம்.
இவை இரண்டிலும் கில்லாடி வடிவேல். அவரின் சிறப்பே இதுதான். இந்தியாவில் இந்த பாணியில் நடிப்பதற்கு வடிவேலுக்கு இணையான நடிகர்கள் இல்லை.

மோடி வலை, ரஜினி / விஜய் அலை வரலாறு காறித் துப்பப் போகின்ற புகழ்மிக்க இந்த சந்திப்புகள்! (குமுதம் மாமாவா இருக்குமோ)

காலம் கெட்டுப் போச்சே என்று எல்லாரும் சோர்வடையலாம். இருப்பினும் கலிகாலத்தை கலியுகமென்று ஒன்றுக்கு இரண்டாய் ஜபித்து சாபமிடுவார்கள் அக்ரகாரத்து இந்துக்கள். மற்ற மக்களுக்கு திரேதா யுகமும் தெரியாது, துவாபர யுகமும் புரியாது. யுகம் குறித்த அறிவிலேயே அக்ரகாரத்தை தாண்டிய ‘இந்துக்கள்’ இவ்வளவு வீக்காக இருப்பது ஒரு பிரச்சினை ஆனால் யுக அறிவில் மட்டுமல்ல, ‘யுக புருஷர்’களையும் உற்பத்தி செய்யக் கூடிய அக்ரகாரத்தின் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்-ஸே, இனி கலியுகத்தைப் பழிக்க முடியாது. ஷாகாவில் முனிபுங்கரர்களையும், ரிஷி பத்தினிகளையும் நினைவு கூர்ந்த ஸ்வயம் சேவகர்கள் இனி சூப்பர் ஸ்டார் ரஜினி, இளைய தளபதி விஜய், கவர்ச்சி புயல் மேக்னா நாயுடு போன்ற நவீன கலை முனிக்களையும், கவர்ச்சி கன்னிகளையும் போற்றி பாட வேண்டும் இதனால் அந்தக் கால முனிவர் கூட்டம் யோக்கியமென்று நாம் சொல்லவில்லை. எது எப்படியோ, விஜய் ரசிகர்களும், ஸ்வயம் சேவக ‘ஜீ’க்களும் சகோதரர்களாக மாறிவிட்ட பிறகு, குத்தாட்டம் சிறுமை, பரதம் பெருமை என்று சங்கு ஊத முடியாதல்லவா? இதனால் இளைய தளபதியின் ரசிகர்கள் மட்டமானவர்கள் என்று பொருளல்ல. ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை விட விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினி ரசிகர்களும் மேலானவர்களே!

அன்பழகன்:அதிமுகவும் பாஜகவும் இருவேறு கட்சிகள் போல காட்டிக் கொள்ள சண்டை போடுகின்றனர்

இருவரும் வேறு என்பதை காட்டிக் கொள்ள அதிமுகவும், பாஜகவும்
ஒருவருக்கு ஒருவர் கண்டித்துக் கொள்கிறார்கள் : அன்பழகன் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் பொங்கலூர் பழனிச்சாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பிரச்சார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பேசினார் அப்போது அவர்,   ‘’தமிழ்நாட்டில் நான் பிரச்சாரம் செய்ய சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கடந்த தேர்தலில் ஏமாந்து விட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிறைவேற்றாத திட்டத்தை தி.மு.க. தலைவர் கலைஞர் தமிழகத்தில் நிறைவேற்றி உள்ளார். உதாரணமாக விவசாய கடன் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் என பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். தி.மு.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேரை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒட்டு மொத்தமாக நீக்கி விட்டார்.

ஜெ. வருமான வரி வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மாற்றம் திடீர் ரத்து! நீதிதேவன் மயக்கம் ?


தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வழி வழக்கை விசாரித்த மாஸ்திரேட் தட்சிணாமூர்த்தி மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் 1993-94 ஆண்டுக்குரிய வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதுபோல அவர்கள் இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைஸஸ் நிறுவனம் 1991-92, 1992-93, 1993-94 ஆகிய நிதியாண்டுக்களுக்கான வருமான வரி கணக்கையும் தாக்கல் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை சென்னை எழும்பூர் தலைமை பெருநகர கூடுதல் மாஜிஸ்திரேட் தட்சிணாமூர்த்தி விசாரித்து வந்தார். கடந்த 10ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தட்சிணாமூர்த்தி வரும் 28ந் தேதி ஜெயலலிதா, சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தட்சிணாமூர்த்தியை இடம் மாற்றம் செய்து நேற்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் கலையரசன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த இடத்துக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மாலதி நியமிக்கப்படுவதாகவும் அவர் தமது உத்தரவில் தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றம் புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில் தட்சிணாமூர்த்தி இடத்துக்கு மாற்றப்பட்ட 9வது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி (சிபிஐ நீதிமன்றம்) எஸ்.மாலதி முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற (தடா வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்) நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
tamil.oneindia.in 

வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட ஜெயந்தி நடராஜன் இந்த நாட்டை விற்றார் ! மோடி


ஈரோடு : மஞ்சளுக்கு பெயர்போன ஈரோடு மக்களுக்கு இந்த நாடு நன்றி செய்ய கடமைப்பட்டுள்ளது என்றும், பா.ஜ., ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஈரோடு ஒரு உற்பத்தி மையமாக மாற்றப்படும் என்றும், இங்குள்ள மக்களின் பொருளாதாரம் மேம்பட்ட நிலைக்கு கொண்டு வரப்படும் என்றும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது இன்றைய பிரசாரத்தில குறிப்பிட்டார்.  ..மோடி சொல்லிட்டாருல்ல..இன்னிக்கு அந்தம்மா எல்லா தொலைக் காட்சியிலும் வந்து காட்டுக் கூச்சல் கத்தும்..... அந்தம்மா ஏதோ தவறு செய்யப்போகதான் பதவியிலிருந்து தூக்கி இருக்காங்க... இப்போ, தேர்தல் பரபரப்பிலும் காணவில்லை...இவிங்க பழைய முதலமைச்சர் பக்தவத்சலம் பொண்ணுங்க .

தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜிக்கு ரூ.4 லட்சம் ! அட்மிசன் கட்டணத்தோடு டொனேசனும் ?பெற்றோர்கள் புலம்புகின்றனர்.

சென்னை: தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி அட்மிசனுக்கு ரூ.4 லட்சம் வரை கட்டணம் வசூலிக் கப்படுவதாக கூறப்படுகிறது. சில பள்ளிகளில் அட்மிசன் கட்டணத்தோடு டொனேசனும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்து ஆதாரத்தோடு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு கமிட்டி அறிவித்துள்ளது. சிங்கார வேலு கமிட்டி தனியார் சுயநிதி பள்ளிகளில் அதிகப்படியான கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதை கட்டுப் படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஏ.சிங் காரவேலு தலைமையில் தனியார் பள்ளி கல்விக்கட்டண நிர்ணயக்குழுவை தமிழக அரசு அமைத்தது.

அதிமுக-திமுக அமைத்த திடீர் கூட்டணி.. மோடி மீது கூட்டாக தாக்குதல்! ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்

சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்க்கும் விஷயத்தில் அதிமுகவும், திமுகவும் திடீர் கூட்டணி அமைத்துள்ளன. 1967ம் ஆண்டு அண்ணா தலைமையில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு திமுக தமிழக ஆட்சி அரியணையில் ஏறியது. அதன்பிறகு திமுகவிலிருந்து எம்ஜிஆர் தலைமையில் அதிமுக உருவானது. அப்போது முதலே, திராவிட கொள்கையை பேசியே கடந்த 47 ஆண்டுகளாக இவ்விரு கட்சிகளும்தான் தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகின்றன.
தேர்தல் நேரத்தில் மட்டும் பழைய சோற்றுக்கு சேர்த்துக்கொள்ளும் ஊறுகாயைப்போல காங்கிரசை இரு திராவிட கட்சிகளும் தொட்டுக்கொள்வது வழக்கம். காமராஜருக்காகவே காங்கிரசுக்கு வாக்களித்து பழக்கப்பட்டுள்ள தென்மாவட்டத்து முதியவர்களால் காங்கிரஸ் நானும் இருக்கிறேன் என்பதை காண்பித்துக் கொண்டிருந்தது.

வியாழன், 17 ஏப்ரல், 2014

ஜெயாவுக்கு அல்வா கொடுத்த மோடி! பாஜகவை ஆதரிப்போம்- ரஜினி, விஜய் ரசிகர்கள் அறிவிப்பு !

ரஜினி, விஜய்யை நரேந்திர மோடி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலிலும் இதன் தாக்கம் எதிரொலிக்க துவங்கி உள்ளது. இருவரின் ரசிகர்களும் பாரதீய ஜனதாவோடு கை கோர்க்க தயாராகி வருகிறார்கள். கடந்த தேர்தல்களில் ரஜினி நடுநிலையுடனேயே இருந்தார். ரசிகர்களும் எந்த கட்சிக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கவில்லை. விருப்பப்பட்டவர்களுக்கு ஓட்டளித்தனர். தேர்தலில் ரஜினிமன்ற கொடியை பயன்படுத்த கூடாது என்று ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மீறியவர்கள் ரசிகர்மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் தற்போது நரேந்திர மோடி ரஜினி வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்ததன் மூலம் நிலைமை தலைகீழ் ஆகியுள்ளது. மோடி ஜெயாவுக்கு அல்வா கொடுத்துவிட்டார் அதனால்தான் ஜெயா திடீரென்று மோடிக்கு எதிராக வெடிக்கிறார் ! சொந்த செலவில் வைய்த்த சூனியமோ சோ ராமசாமி வாய்த்த சூனியமோ அல்லது ஜெயாவுக்கு ரஜினியும் vijay யும் கூட்டாக வாய்த்த பில்லி சூனியமோ போக போகத்தான் தெரியும் 

குஜராத் முன்னேற்றம் ? 5000 விவசாயிகள் தற்கொலை 170000 வீடுகளுக்கு கரண்ட் இல்லை

சேலத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் - படங்கள்சேலம் திமுக வேட்பாளர் உமாராணி செல்வராஜை ஆதரித்து கோட்டை மைதான பொதுக்கூட்டத்தில் பேசினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.‘மோடி இங்கு சேலத்தில் பேசிவிட்டு சென்றதாக அறிகிறேன். குஜராத் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக சொல்கிறார்கள். நிஜம் அதுவல்ல...வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகமாக அங்குள்ளனர்.’ என புள்ளிவிவரங்கள் சொல்லி மோடியை விமர்சித்தவர்,  ஜெ., பக்கம் வந்தார் அந்த அம்மையார் போல பொய் புரட்டு பித்தலாட்டம் செய்பவர் யாருமில்லை. தி.மு.க வை கண்டு அஞ்சுகிறார்’ என பேசினார்.கூட்டம் சரியாக ஏற்பாடு செய்யாததால் தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னே வந்தனர்.

Ex admk அமைச்சர் செல்வகணபதிக்கு தண்டனை: எம்.பி. பதவி பறிபோகுமா?

தமிழகத்தில் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. அப்போது, மத்திய அரசு திட்டமான ஜவஹர் யோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதிகளை கொண்டு தமிழகத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது. > இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனடிப்படையில், 1996-ம் ஆண்டு சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட ஐவர் மீது  சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP – கார்ப்பரேட் கொள்ளைச் சின்னம்

விண்டோசின் முடிவு

வாழ்வையே விற்பதாகவும் வாங்குவதாகவும் பார்க்கச் சொல்கிற அத்து மீறல்; உழைப்புச் சுரண்டல்; முதலாளித்துவத்தின் கொடூரம்; இவைகள் தான் சன்னல்களுக்கு அப்பால் பிதுங்கித் தள்ளும் அடிவேர்கள்!
விண்டோசின் முடிவு
மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ்-xp இயங்குதளத்தின் சேவையை அடியோடு நிறுத்தி செவ்வாயோடு செவ்வாயாக ஒரு வாரம் ஆகியிருக்கிறது. மைக்ரோசாப்ட் இயக்குநர் டிம் ரெய்ன்ஸ் ஏப்ரல் 8-ம் தேதி விண்டோஸ்-xp இயங்குதள சேவையை நிறுத்துவதாக அறிவிப்பதற்கு முன்னரே பிரிட்டனின் மிகப்பெரும் ஐந்து வங்கிகள் 100 மில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ 620 கோடிகள்) மென்பொருள் புதுப்பித்தலுக்காக செலவிட்டிருக்கின்றன.

சிறு பட்ஜெட் படங்கள்தான் திரை அரங்குகளை காத்துக்கொண்டிருக்கிறது.

சென்னை:நிபின், சீமா, மது, பாபா, ஸ்ரீராம்ராஜ் சுவாமிகள் நடிக்கும்

படம் ‘இது என்ன மாற்றம்‘. சத்திய நாராயணன் இயக்குகிறார். பி.கே.ஜேம்ஸ் தயாரிக்கிறார். இதன்  ஆடியோ விழாவில் திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் பேசியது: தயாரிப்பாளர்கள் 3 வருடம்கூட படம் எடுக்காமல் இருக்கலாம்,  நடிகர்களும் வருடக்கணக்கில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கலாம் ஆனால் தியேட்டர்களில் தினமும் காட்சிகள் காட்டியே ஆக வேண்டும். கண்டிப்பாக வாரா வாரம் படங்களை  மாற்றியாக வேண்டும். தமிழில் வருடத்துக்கு 120 படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 20 படங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் மற்ற 100 படங்கள் சிறுபட்ஜெட்  படங்கள். வருடம் முழுவதும் பெரிய பட்ஜெட் படங்களை நம்பி தியேட்டர் நடத்த முடியாது. இதைத்தான் எல்லா தியேட்டர்காரர்களும் சொல்கிறார்கள். சிறுபட்ஜெட்  படங்கள்தான் திரை அரங்குகளை காத்துக்கொண்டிருக்கிறது.  இப்படம் விஞ்ஞானமும், ஆன்மிகமும் இணைத்து எடுக்கப்பட்டதாக இயக்குனர் கூறினார்.  tamilmurasu.org

பாலுமகேந்திராவின் தலைமுறை படத்திற்கு தேசிய விருது!

திரைத்துறையில் இந்திய அளவிலான 61-வது தேசிய விருதுகள்
அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த திரைப்படமாக இயக்குனர் ராம் இயக்கிய ‘தங்கமீன்கள்’ தேர்வாகியிருக்கிறது. சிறந்த பாடலாசிரியருக்கான விருது ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் எழுதிய பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்வானி - சுஷ்மா பிரசாரம் செய்யாததால் பாஜக அதிர்ச்சி

கர்நாடக மாநிலத்தில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் பிரசாரம் செய்யாததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாஜகவில் எடியூரப்பா சேர்ந்ததை அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகி.ோர் விரும்பவி்ல்லை. அதனால அவர்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்யவில்லை. அவர் ஊழலில் சிக்கியதால் கர்நாடகத்தி்ல் பாஜக தோல்வி அடைந்தது.தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இசடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 24 தொகுதிகளி்ல்  இரு கட்சிகளுக்கும் தலா 12 இடங்கள் கிடைக்கும்  என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. எடியூரப்பாவை பாஜகவில் ராஜ்நாத்சிங் சேர்த்தார். இதை அத்வானி, சுஸ்மாஸ்வராஜ் விரும்பவி்ல்லை. இனால் அவர்கள் பிரசாரம் செய்யவி்ல்லை. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.     

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவதை தடுப்பது எப்படின்னு இன்னும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்


25 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு

தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும்
சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுப்பது எப்படி என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீருக்காக 200 அடி முதல் 300 அடி வரை ஆழ்துளை குழாய் கிணறு (போர்வெல்) அமைக்கின்றனர். இவ்வாறு போர்வெல் தோண்டும் இடங்களில் தண்ணீர் இல்லை என்றால், குழியை மூடாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இதனால் விவசாய நிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகள், குறிப்பாக 2 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், அந்த ஆழ்துளை கிணற்றின் விழ நேரிடுகிறது. இப்படி சுமார் 6 முதல் 8 இஞ்ச் அகலமே உள்ள ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தமிழகத்தில் தொடர்கதை ஆகிவிட்டது. ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவதை தடுப்பது எப்படின்னு இன்னும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்

அம்பேத்கரியம் பேசி தலித் மக்களை இந்துமத வெறியர்களிடம் கூட்டிக் கொடுப்பவர்கள்


மோடியுடன் 'சமூக நீதி' காக்க புறப்பட்ட தலித் போராளி ராம் விலாஸ் பஸ்வான்
பாபா சாகேப் அம்பேத்கர் கொள்கைகளின் வழிகாட்டிகளாக சுயதம்பட்டம் அடித்து வந்த மூன்று தலித் ராமன்களின் கதை இது. ராம்தாஸ் அதவாலே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ் ( இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இவ்வாறே அழைக்கப்பட்டார்; இப்போது உதித் ராஜ் என்று பெயர் மாற்றி உள்ளார். எனினும் முதல் பெயரே அவருக்கு பொருத்தமாக உள்ளது.) ஆகியோர் அதிகாரத்தின் அற்பப் பருக்கைகளை பொறுக்குவதற்காக தமது கொள்கைகளை பா.ஜ.க.வின் தேர்ச் சக்கரத்தில் நசுங்க அனுமதித்துள்ளனர். இவர்களில் பஸ்வான் தன்னை தேர்ந்த பிழைப்புவாதியாக ஏற்கனவே நிலைநிறுத்திக் கொண்டவர். ரயில்வே, தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, சுரங்கம், உருக்கு, ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சராக வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவைகளில் பணியாற்றியவர். மோடியுடன் ‘சமூக நீதி’ காக்க புறப்பட்ட தலித் போராளி ராம் விலாஸ் பஸ்வான் 
மற்ற இரண்டு ராமன்களும் மிகச் சமீப காலம் வரையிலும் பாரதிய ஜனதாவின் வகுப்புவாதத்திற்கு எதிராக  முழக்கமிட்டவர்கள்.

பிள்ளை – முதலி’ எவ்வளவு முக்கினாலும் பார்ப்பனர்களுக்கு கீழான ‘சூத்திரர்கள்’ தான்

வே.மதிமாறன் : சமயக் குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசைத் தவிர மற்ற மூவரும் பார்ப்பனர்களே.
இதற்கு நிகழ்கால சாட்சி, சைவ சமய ஈடுபாடு கொண்ட பார்ப்பனர்கள், (அய்யர்கள்) இன்றும் திருநாவுக்கரசு பெயரை வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஞானசம்பந்தன், சுந்தரம், மாணிக்கவாசகம் போன்ற பெயர்களையே அவர்களிடம் பார்க்க முடியும்.
அவ்வளவு ஏன்? சடகோபன், வரதராஜன், ஜானகிராமன், சீதாராமன், கோபாலன், ரங்கராஜன், ரங்கநாதன், வெங்கட்ராமன் போன்ற வைணவ (அய்யங்கார்) பெயர்களையும் சைவ-வைணவ (அய்யர்-அய்யங்கார்) ஒற்றுமையை வலியுறுத்தி வைக்கப்பட்ட சிவராமன், சங்கரராமன் போன்ற பெயர்களையும் வைத்துக் கொள்கிற ‘அய்யர்கள்’; நாவுக்கரசு, திருநாவுக்கரசு என்கிற சைவ சமய பெயரை வைப்பதில்லை.
பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இவர்களை விட, மிக அதிகமாக முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு பெயரை அதிகமாக வைத்திருக்கிறார்கள்.

அழகிரியை பாஜக பக்கம் ஓரம்கட்டும் சுயநல நண்பர்கள் !


அண்ணன் ‘ஏதோ ஒரு அளவுக்கு’ தாக்கத்தை ஏற்படுத்துவார்!
அண்ணன் ‘ஏதோ ஒரு அளவுக்கு’ தாக்கத்தை ஏற்படுத்துவார்!
தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான சமரசத்துக்கு அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டதால் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரிக்க பிரதமர் வேட்பாளரான மோடியை சந்திக்க ‘அப்பாயின்மென்ட்’ கேட்டு காத்திருக்கிறார் மு.க. அழகிரி.
நாளை (வியாழக்கிழமை) சந்திப்பு நடைபெறலாம் என்றும், அதன்பின் அழகிரியின் ஒரு அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.
தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட அழகிரி தேர்தலுக்குள்ளாக தன்னை கட்சி மேலிடம் அழைத்துப் பேசும் என எதிர்பார்த்திருந்தார். தே.மு.தி.க.வுடனான கூட்டணியை குலைத்தது, வைகோவை வீட்டுக்கு வரவழைத்தது, தி.மு.க. வேட்பாளர்களை விமர்சனம் செய்து அவர்களைத் தோற்கடிப்பேன் எனக் கூறியது போன்ற காரணங்களால் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் அழகிரி மீது இன்னமும் கடும் கோபத்தில் உள்ளனர்.
அதனால்தான், அழகிரிக்காக தூது சென்ற கே.பி.ராமலிங்கம் எம்.பி.யை கருணாநிதி எச்சரித்து அனுப்பினார்.  சுற்றி இருப்பவர்களின் சொல்கேட்டு பாஜக பக்கம் அழகிரி சென்றால் அவரது திராவிட பாரம்பரிய வாக்கு வங்கி காலியாகிவிடும். ஸ்டாலின் அதிருப்தியாளர்கள் பலரின் நம்பிக்கையை பெற்றுள்ள அழகிரி அதை இழப்பது ஒரு தற்கொலைக்கு ஒப்பான நிலையாகும்

வடிவேலு: எல்லா மொழியை சேர்ந்தவர்களுக்கும் என் உடல் மொழி பிடிக்கும்: (படங்கள்)

எல்லோரையும் சந்தோஷப்படுத்தி சிரிக்க வைப்பதுதான் என் வேலை. எந்த படத்திலும் நான் ஆபாசமாக வசனம் பேசி நடித்ததில்லை. வன்முறை காட்சிகளிலும் நடித்ததில்லை. சிரிக்க வைக்கிற மருந்தை ஆண்டவன் எனக்கு கொடுத்து இருக்கிறான். அதை நான் மக்களுக்கு தொடர்ந்து கொடுப்பேன். அண்ணனுக்கு தெரியாமல் தங்கையோ அல்லது தங்கைக்கு தெரியாமல் அண்ணனோ ஒளிந்து மறைந்து  பார்க்கிற படம் அல்ல, இது. பல் முளைக்காத குழந்தைகள் முதல், பல் விழுந்த தாத்தாக்கள் வரை குடும்பத்துடன் பார்க்கிற படம்  வடிவேல் நடித்த தெனாலிராமன் படத்தில், கிருஷ்ண தேவராயரை பற்றி காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அது தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி, தெலுங்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்தை திரையிடுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

சிதம்பரம் : இதையெல்லாம் கேட்கணும்கிறது நம்ம தலைவிதி !

மின்வெட்டுக்கு காரணம் எதிர்க்கட்சிகளின் சதி என்று ஜெயலலிதா கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் புதன்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது அவர் மேலும் கூறுகையில்,
மின்சாரத்தை யாரும் தேக்கி வைக்க முடியாது. மின்சாரம் தண்ணீர் அல்ல, அணைகட்டு கட்டி தேக்கி வைப்பதற்கு. மின்சாரம் வெங்காயம் அல்ல. மூட்டையில் கட்டி வைப்பதற்கு. மின்சாரத்தை யாரும் சாக்குப் பையில் போட்டு எடுத்து போக முடியாது. மின்சாரம் உற்பத்தியான அந்த கணமே மக்களைப் போய் சேர வேண்டும். மின்சாரம் மக்களைப் போய் சேரவில்லை என்றால் மின்சாரம் உற்பத்தியாகவில்லை என்ற பொருளேயொழிய, யாரும் இதிலே சதி செய்ய முடியாது.
அதுவுமின்றி மின்சாரத்துறை அமைச்சர் அவருடைய (ஜெயலலிதா) நம்பிக்கைக்கு உரியவர். மின்சார வாரியத்திற்கு தலைவரை நியமிப்பது முதல் அமைச்சர். யார் சதி செய்கிறார்கள். சதி செய்கிறார்கள் என்றால் மின்வாரிய துறை அமைச்சரும், மின்வாரியத்துறை தலைவரும் என்ன செய்கிறார்கள். தூங்குகிறார்களா. என்ன சதி. இது நம்ம தலைவிதி. இதையெல்லாம் கேட்கணும்கிறது நம்ம தலைவிதி. இவ்வாறு கூறினார் nakkheeran.in

புதன், 16 ஏப்ரல், 2014

நீலகிரியில் ஆ. ராசா தனிகாட்டு ராஜாவாக வலம் வருகிறார் ! எதிரணியினரே ராசாவின் வெற்றியை உறுதி செய்கின்றனர்


பிரச்சாரத்தில் ஆ.ராசா| கோப்புப் படம்.
பிரச்சாரத்தில் ஆ.ராசா| கோப்புப் படம்.
நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது அதிமுக-வுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், அனைத்துக் கட்சியினரையும் வளைத்துப் போட்டு களத்தை தங்களுக்கு சாதகமாக்கி வருகிறது ஆ.ராசா-வின் ஆதரவு வட்டம்.
இதுகுறித்து ‘தி இந்து'-விடம் மேட்டுப்பாளையம் பகுதி அதிமுக- வினர் கூறியதாவது: நீலகிரி மக்கள வைத் தொகுதியில் குன்னூர், ஊட்டி, கூடலூர், மேட்டுப் பாளை யம், பவானி சாகர், அவிநாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வருகின் றன.
இதில் மலைப்பகுதிகளான மூன்று தொகுதிகளில் ஆ.ராசா வுக்கும் மேட்டுப் பாளையம், அவிநாசி தொகுதிகள் அதிமுக-வுக்கும் சாதகமாக இருந்தது. 

நாடு 60 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை பெறும்: மோடி உறுதி !


சேலம்: சேலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மின் பற்றாக்குறையால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை போக்க ஐமு கூட்டணி அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார். தேஜ கூட்டணிக்கு வாய்ப்பு அளித்தால் நாடு 60 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை பெறும் என்று உறுதியளித்தார். !

நரேந்திரமோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு !

நடிகர் ரஜினிகாந்தை நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார். ரஜினி வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இதன் மூலம் பாரதீய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். ரஜினியை சந்தித்த போதே நடிகர் விஜய்யையும் பார்ப்பதாக இருந்தது. ஆனால் விஜய் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் சந்திப்பு நிகழவில்லை. தற்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக நரேந்திர மோடி கோவை வருகிறார். அப்போது இருவரையும் சந்தித்து பேச வைக்க தமிழக பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்பாடு செய்தனர். விஜய்யும் நரேந்திர மோடியை சந்திக்க இசைவு தெரிவித்துள்ள்ளார். விஜய் பிற்பகல் கோவை செல்கிறார். அங்கு நரேந்திர மோடியை சந்திக்கிறார். தேர்தலையொட்டி இருவரும் சந்திப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் ஏற்கனவே ரசிகர் மன்றத்தினரை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் சமூக சேவை பணிகளை செய்து வருகிறார். அவர் அரசியலுக்கு வருவார் என்று தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நரேந்திர மோடியை அவர் சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைவா ஜாதகத்தில் சனி சரியாக இல்லையோ nakkheeran.in

கன்னியாகுமரியில் சோனியா காந்தி: இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவும்'


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.| கோப்புப் படம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.| கோப்புப் படம்.
இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும் என கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார்.
கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட சோனியா காந்தி பேசியதாவது: "இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என மற்ற அரசியல் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், இலங்கை தமிழர் நலனுக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ரத்தம் சிந்தினார். காங்கிரஸை விட எந்த கட்சியாவது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது செய்துள்ளது என்று கூற முடியுமா? இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் தொடர்ந்து உதவிகள் செய்யும்" என்றார்.

பேச்சுவார்த்தையில் சுமூகம்: தெனாலி ராமன் திட்டமிட்டபடி ஏப்.18-ல் வெளியாகிறது !

நடிகர் வடிவேலு நடித்துள்ள நாளை மறுதினம் திரைக்கு வரவிருக்கிறது தெனாலிராமன் திரைப்படம்.  இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவரும் இத்திரைப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   கிருஷ்ணதே வராயரை இழிவுபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி வருகிறார்கள்.  படக்குழுவினரோ, அப்படி காட்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்கிறார்கள்.  அப்படியானால் படத்தை எங்களுக்கு திரையிட் டுக்காட்டுங்கள் என்கிறார்கள் தெலுங்கு அமைப்பினர்.  ஆனால் படத்தை திரையிட்டுக்காட்ட முடி யாது என்று பிடிவாதமாக இருக்கிறார்.
படத்தை எங்களூக்கு திரையிட்டுக்காட்டாமல் ரிலீஸ் செய்தால், போராட்டம் நடத்துவோம் என்று தெலுங்கு அமைப்பினர் கூறுகின்றனர்.   வடிவேலுவுக்கு எதிராக போராட்டம் செய்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று சீமான் உள்பட பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Mrs.யசோதா நரேந்திர மோடி ! கைவிட்ட கணவன் ! சேர்ந்து வாழ விரும்பும் சராசரி பெண் !

நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்.| கோப்புப் படம்.நரேந்திர மோடியின் மனைவிபற்றிய விவாதம் ஊடகங்களில் அனல் பறக்கிறது. இதுநாள்வரை அவரை ஒண்டிக்கட்டையாகவே சித்தரித்து வந்த பா.ஜ.க-வினர், அவர் தேசியப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதால் குடும்பத்தை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று சமாதானம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
காங்கிரஸும் பிற கட்சிகளும் மோடி பொய்யர் என்பதை நிரூபிக்க இது ஒன்றே போதாதா என்று ஓங்கி அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், ஹைமா தேஷ்பாண்டே என்னும் பத்திரிகையாளர் மோடியின் மனைவியைச் சந்தித்து விட்டு அதுபற்றி, 2009-ல் ‘ஓப்பன்’ இதழில் எழுதிய கட்டுரையைப் பலரும் மறந்துபோனார்கள். இன்று இந்த சர்ச்சை உருவாகியுள்ள சூழலில் அவரைத் தொடர்புகொண்டோம். மோடியின் மனைவியைத் தேடிச் சென்ற அனுபவத்தை நம்முடன் ஹைமா பகிர்ந்துகொள்கிறார்.
மோடியின் மனைவி இருக்கும் இடத்தை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
மோடியின் மனைவியைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்ததும் பா.ஜ.க. வட்டாரங்களைத் தொடர்புகொண்டு விசாரிக்க ஆரம்பித்தேன். கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு மேலும் தேடியதில் அவர் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது. பாருங்கள் அந்த இளம் அழகியுடன் எவ்வளவு ஆனந்தமாக மோடி சிரிக்கிறார் !மனைவி பேசாம சொல்வதெல்லாம் உண்மை அல்லது வாய்மையே வெல்லும் போன்ற டிவி நிகழ்சிகளில் முறையிடலாம் 

மோடி பிரதமர் ஆவதற்கு கடும் எதிர்ப்பு ! சல்மான் ருஷ்டி, தீபா மேத்தா உள்ளிட்ட 21 பிரமுகர்கள் கருத்து


எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, திரைப்பட இயக்குநர் தீபா மேத்தா.| கோப்புப் படம்.
நரேந்திர மோடி பிரதமரானால், அது இந்தியாவின் எதிர்காலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தும் என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, திரைப்பட இயக்குநர் தீபா மேத்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: “2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாட்டை யாரும் மறந்துவிட முடியாது. கொலை, கொள்ளை, வன்முறைக்கு முஸ்லிம்கள் இலக்காகினர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கலவரம் தொடர்பாக மோடி மன்னிப்புக் கேட்கவில்லை. அச் சம்பவத்துக்குப் பொறுப் பேற்கவுமில்லை. இத்தகைய நடத்தையையும், அரசியல் நெறிமுறைகளையும் கொண்டி ருக்கும் மோடி, இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் சாசனச் சட்ட வழிகாட்டுதலுக்கு ஒத்துப் போக மாட்டார்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கடிதத்தில் டர்னர் பரிசு வென்ற சிற்பக் கலைஞர் அனீஷ் கபூர், சல்மான் ருஷ்டி, கல்வியாளர் ஹோமி கே.பாபா. தீபா மேத்தா, புகைப்படக் கலைஞர் தயானிதா சிங், சிற்பக் கலைஞர் விவான் சுந்தரம், திரைப்பட இயக்குநர்கள் குமார் சஹானி, எம்.கே.ரய்னா, பொருளாதார நிபுணர்கள் ஜெயத்தி கோஷ், பிரபாத் பட்னாயக், டெல்லி தேசிய நாடகப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த அனுராதா கபூர், லண்டன் பொருளாதார கல்வி மைய பேராசிரியர் சேத்தன் பட் உள்ளிட்ட 21 பிரமுகர்கள் கையெழுத் திட்டுள்ளனர் tamil.thehindu.com/

செல்வமணியிடம் பொய் சொன்ன மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான் எழுதி இசை அமைத்து தயாரித்து, இயக்கி நடிக்கும் படம் அதிரடி. ஆட்டம் ஆடி பிழைப்பு நடத்தும் கழைக்கூத்தாடிகள் பற்றிய கதையான இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. இதில் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,‘ மன்சூர் அலிகான் எதையுமே தெரியாது என்று சொல்லமாட்டார். கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க வந்தபோது குதிரை ஏற்றம் தெரியுமா என்றேன். தெரியும் என்றார். அவர் குதிரை மீது அமர்ந்து வரும் காட்சியில் நடிக்க சொன்னபோது மன்சூர் தூக்கிவீசப்பட்டார். பிறகுதான் அவருக்கு குதிரை ஓட்ட தெரியாது என்று சொன்னார். ‘முதலிலேயே ஏன் சொல்லவில்லை என்றபோது, ‘அப்படி சொன்னால் என்னை படத்திலிருந்து தூக்கிவிடுவீர்கள் அதனால் பொய் சொன்னேன் என்றார். - tamilmurasu.org

ஜெயலலிதா : காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியே லட்சியம்:

வேலூரை அடுத்த இறைவன்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் ஜெயலலிதா. (வலது) கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினரில் ஒரு பகுதியினர். மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் லட்சியம் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட செய்யாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: பாஜகவின் "பி' டீம் அதிமுக என்றும், பாஜகவை எதிர்த்து ஏன் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. எங்களைப் பொருத்தவரை நாங்கள் யாருக்கும் "பி' டீம் இல்லை. எங்கள் அணிதான் முதன்மையான அணி.
காங்கிரஸ், பாஜக அல்லாத மத்திய ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம்.

சோனியா கன்யாகுமரியில் பிரசாரம் ஏன் ? திமுகவிடம் பறிபோன காங்கிரஸ் சிறுபான்மையோர் ஒட்டு வங்கி

இன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா, கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்காக, நாகர்கோவிலில் பிரசாரம் செய்ய உள்ளார். தமிழகத்தில், சோனியா, இங்கு மட்டும் தான் பிரசாரம் செய்கிறார்.மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி போட்டியிடும் சிவகங்கையிலோ, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மணிசங்கர் ஐயர், இளங்கோவன் போட்டியிடும், மயிலாடுதுறை, திருப்பூர் தொகுதிகளிலோ, மாநில தலைநகர் சென்னையிலோ அவர் பிரசாரம் செய்யாததற்கு காரணம் என்ன? அதேபோல், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், தமிழகம் பக்கமே திரும்பி பார்க்காததற்கு காரணம் என்ன?

காங்கிரஸ் மெதுவாக மீண்டும் செல்வாக்கு பெறுகிறது ! கருத்து கணிப்புகள் positive

தேர்தல் முடிவுகள் எந்த விதமாக இருக்கும்? எல்லார் மனதிலும் ஓடிக் கொண்டிருப்பது இதுதான். இதற்கு காங்கிரஸ் மட்டும் விதிவிலக்கா என்ன?காங்கிரசுக்கு, சி.என்.என்., - ஐ.பி.என்., கருத்து கணிப்பு 94 - 106 தொகுதிகள் அளித்தது; என்.என்.டி.டி.வி., 106 இடங்கள் வரை அளித்தது; ஏ.பி.பி., - நீல்சன் செய்தி நிறுவனமோ வெறும் 96 இடங்களை மட்டுமே கொடுத்தது.

இந்த கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் 'வெத்து வேட்டுகள்' என்றும், உண்மையில் அதிகமான இடங்களில் தாங்கள் ஜெயித்து, கருத்து கணிப்புகளை பொய்யாக்குவோம் என்றும், காங்கிரஸ் கூறி வருகிறது.உண்மை அது தானா என்று அறிந்து கொள்ள, காங்கிரசே சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பை ரகசியமாக நடத்தி உள்ளது.அதில், சிறிது நிம்மதி அளிக்கும் அளவிற்கு முடிவுகள் வந்துள்ளன. அதாவது, 120? முதல் 140? தொகுதிகள் வரை காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.குறிப்பாக, அசாம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கிடைக்கும் தொகுதிகள் மூலம், எப்படியாவது 140தொகுதிகள் கிடைத்துவிடும் என, அந்த ரகசிய கருத்து கணிப்பு சொல்கிறதாம்.

Delhi கிரண்பேடிக்கு டில்லி முதல்வர் பதவி?

புதுடில்லி: பா.ஜ.வில் இணைய உள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி புதுடில்லி மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.அன்னாஹசாரே இயக்கத்தில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனிக்கட்சி துவங்கியதையடுத்து அவர் மீது அதிருப்தி கொண்டார் கிரண்பேடி. இந்த சந்தர்ப்பத்தை பா.ஜ.பயன்படுத்திகொள்ள முனைந்தது. பா.ஜ., முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பேடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனையடுத்து அவர் டில்லி மாநிலத்தின் முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப் பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எம்.பி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கானை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்ககிரண்பேடி மறுத்து வி்ட்டார். என பா.ஜ., கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மீனாக்ஷி லெஹி தெரிவித்தார்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

தடையை உடைத்துக்கொண்டு தென்னாலிராமன் வருகிறான் பராக் ! தடை கோரிய மனு தள்ளுபடி !

வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிட தடை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
   பழந்தமிழர் மக்கள் கட்சி நிர்வாகி வீரகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
  மனு விவரம்: நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தின் டிரெய்லர் காண்பிக்கப்படுகிறது. இதில், விஜயநகரப்பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். கிருஷ்ணதேவராயர் சிறந்த போர்வீரர். சிறப்பான ஆட்சி நடத்தியவர். தென்னிந்தியாவில் இசுலாமிய படையெடுப்பை தடுத்தவர் என பள்ளி வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறேன். அவரது வேடத்தை ஏற்றுள்ள வடிவேலு கோமாளி போன்று காட்சி தருகிறார். மேலும் மூடர்கள் பேசுவது போல் அவரது வசனங்கள் உள்ளன. கிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவியர் 52 குழந்தைகள் இருப்பதாகவும் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று தகவல் கிடையாது. ஒரு பேரரசரின் வரலாற்றை திரித்துக்கூறி பணம் சம்பாதிக்க முற்படுவதை ஏற்கக்கூடாது.மேலும் இந்த படத்தை பார்க்கும் குழந்தைகள் கிருஷ்ணதேவராயரை ஒரு கோமாளி போல் கற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.
  இம்மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. வரலாறுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதியிருக்கின்றனர். எனவே வரலாறு அடிப்படையில் திரைப்படத்துக்கு தடை கோருவதை ஏற்கமுடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

தா.பாண்டியன் : ஜெயலலிதா சிறைக்கு போவார் ! சீ சீ இந்த பழம் புளிக்கும்

தென்காசி: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குப் போவது உறுதி என்று தா.பாண்டியன் அதிரடியாக கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக இருந்த 'தோழர்' தா.பாண்டியன்தான். ஜெயலலிதா எவ்வளவுதான் அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொண்டு மகா பொறுமையாக இருந்தவர் தா.பா.
ஆனால் அவருக்கே லோக்சபா தேர்தலில் பெரும் ஆப்பு வைத்து விட்டார் ஜெயலலிதா. இதனால் போகுமிடம் எல்லாம் ஜெயலலிதாவை விமர்சித்து வருகிறார் தா.பா.
தென்காசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்து அவர் பாவூர்சத்திரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது..
பிரசாரம் செய்தபோது, ''நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வரும். தமிழகத்தில் தற்போது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை அனைத்து கட்சிகளும் அமைத்துள்ளன.  அப்படி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி கூட அமைக்க முடியாதவாறு கம்யுனிஸ்டு கப்பலை வெறும் கற்பாறையில் மோதவைத்து டைடானிக் முடிவை தேடித்தந்த மஹா பாவி இந்த தா பாண்டி இனி என்னத்தை பேசி என்ன போன மானம் போனதுதான்

சங்கரன்கோவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க உதவிய ரோபோ

சங்கரன்கோவில் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனைக் காப்பாற்ற உதவிய போர்வெல் ரோபோ கண்டுபிடிப்பின் பின்னணியில் உருக்கமான தகவல்கள் உள்ளன.
இக்கருவியைக் கண்டுபிடிக்க மூளையாக செயல்பட்ட எம்.மணிகண்டன் (43), ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:
கோவில்பட்டிக்கு 2003-ம் ஆண்டில் பிளம்பர் வேலைக்கு வந்தேன். அப்போது, எனது 3 வயது மகன் தினேஷ்பாபுவை அழைத்து வந்திருந்தேன். நான் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த எனது மகன், அங்குள்ள ஆழ்துளைகிணற்றில் விழும் தருவாயில் தடுத்து காப்பாற் றினேன். அதுதான் எனது மனதில் பொறியாக உருவெடுத்தது.

டிராபிக் ராமசாமி ஊழலை ஒழிக்க புதிய இயக்கம் தொடங்கினார்



லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, ஜனசக்தி என்ற புதிய இயக்கத்தை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திங்கள்கிழமை தொடங்கினார்.
‘ஜனசக்தி’ ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் தொடக்க விழா, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள்கிழமை நடந்தது. நிறுவனத் தலைவர் டிராபிக் ராமசாமி, இயக்கத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு அலுவலகங்களில் பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை அனைத்துக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்காக ‘ஜனசக்தி’ என்ற ஊழல் ஒழிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

பிரியங்கா : வருண் எங்கள் குடும்பத்திற்கு துரோகம் செய்துள்ளார்.


மக்களவை தேர்தல் ஒன்றும் டீ பார்ட்டி அல்ல என்றும் தனது ஒன்றுவிட்ட சகோதரார் வருணை தாக்கி பேசியுள்ளார்.
உத்தரப்பிரதே மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புபேசிய வருணின் ஒன்றுவிட்ட சகோதரி பிரியங்கா காந்தி,  வருண் எங்ங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்தான். ஆனால் அவர் தவறான பாதையில் போகிறார். குடும்பத்தில் உள்ள ஒரு இளையவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறபோது, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்கு சரியான பாதையை காட்ட வேண்டும். எனது சகோதரருக்கு (வருண்காந்தி) நீங்கள் சரியான பாதையை காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்,
இந்நிலையில் சுல்தான்பூரில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்த பாஜக வேட்பாளர் வருண் காந்தி, தனிப்பட்ட நபர் எந்த பாதையில் செல்கிறார் என்பதை விட, நாடு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதே மிக முக்கியம் என்று பிரியங்காவின் பேச்சுக்கு பதிலளித்து பேசினார்.
இது குறித்து தனியார் தொலைக்காட்சியினர் பிரியங்காவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், வருண் எங்கள் குடும்பத்திற்கு துரோகம் செய்துள்ளார். மக்களை தேர்தல் என்பது  குடும்பத்தில் நடக்கும் டீ பார்ட்டி அல்ல; கருத்தியல் போர் எனறு காட்டமாக விமர்சித்தார்.

மோடி படத்துடன் 5 ஆயிரம் சேலைகள் பறிமுதல் ! karnataka !


கர்நாடகத்தில் நரேந்திர மோடி படத்துடன் கூடிய 5 ஆயிரம் சேலைகள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள பாத்திரங்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகத்தில் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் யாதகிரி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் 7 பேர், யாதகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள குருநாத் ரெட்டி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
இதில் அங்கு மூட்டைகளிலும், அட்டைப் பெட்டிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,500 ‘நமோ மந்திரா' புடவைகளை பறிமுதல் செய்தன‌ர்.