வியாழன், 17 ஏப்ரல், 2014

ஜெயாவுக்கு அல்வா கொடுத்த மோடி! பாஜகவை ஆதரிப்போம்- ரஜினி, விஜய் ரசிகர்கள் அறிவிப்பு !

ரஜினி, விஜய்யை நரேந்திர மோடி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலிலும் இதன் தாக்கம் எதிரொலிக்க துவங்கி உள்ளது. இருவரின் ரசிகர்களும் பாரதீய ஜனதாவோடு கை கோர்க்க தயாராகி வருகிறார்கள். கடந்த தேர்தல்களில் ரஜினி நடுநிலையுடனேயே இருந்தார். ரசிகர்களும் எந்த கட்சிக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கவில்லை. விருப்பப்பட்டவர்களுக்கு ஓட்டளித்தனர். தேர்தலில் ரஜினிமன்ற கொடியை பயன்படுத்த கூடாது என்று ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மீறியவர்கள் ரசிகர்மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் தற்போது நரேந்திர மோடி ரஜினி வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்ததன் மூலம் நிலைமை தலைகீழ் ஆகியுள்ளது. மோடி ஜெயாவுக்கு அல்வா கொடுத்துவிட்டார் அதனால்தான் ஜெயா திடீரென்று மோடிக்கு எதிராக வெடிக்கிறார் ! சொந்த செலவில் வைய்த்த சூனியமோ சோ ராமசாமி வாய்த்த சூனியமோ அல்லது ஜெயாவுக்கு ரஜினியும் vijay யும் கூட்டாக வாய்த்த பில்லி சூனியமோ போக போகத்தான் தெரியும் 
நரேந்திரமோடி உறுதியான தலைவர், தகுதியான நிர்வாகி வருங்காலத்தில் அவர் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும், என்றெல்லாம் ரஜினி புகழ்ந்து தள்ளினார். அரசியல் பேசவில்லை என்று கூறினாலும் தேர்தலில் இச்சந்திப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி ரசிகர்கள் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக களம் இறங்குகின்றனர். எங்கள் தலைவர் ரஜினியை நரேந்திர மோடி சந்தித்து பேசியதால் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போடுவோம் என்று இன்டர்நெட் பேஸ்புக்கில் ரஜினி ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சைதை ரவி கூறும் போது நரேந்திரமோடி எங்கள் தலைவர் ரஜினியை வீட்டில் வந்து சந்தித்தது ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கிறது. எனவே தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளோம் என்றார். இதே கருத்தை வெளிப்படுத்தினர்.

குட்டி சந்திரன் என்ற ரஜினி ரசிகர் கூறும் போது, ரஜினி எல்லா தலைவர்களுடனும் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறார். நரேந்திர மோடியை சந்தித்ததில் கூட அரசியல் இல்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் பிரதமர் வேட்பாளராக இருக்கும் நரேந்திரமோடி ரஜினியை சந்தித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போடும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

இது போல் விஜய்யை நரேந்திர மோடி சந்தித்ததால் அவரது ரசிகர்களும் பாரதீய ஜனதாவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த விஜய் ரசிகர் கிரிஷ் கூறும் போது, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி விஜய்யை சந்திக்க விருப்பம் தெரிவித்ததும், அதன் மூலம் இருவரும் சந்தித்து பேசியதும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அரசியல் ரீதியான சந்திப்பாக இல்லா விட்டாலும் ரசிகர்கள் மனதில் பாரதீய ஜனதாவை ஆதரிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது. பாரதீய ஜனதாவுக்கே ஓட்டு போடுவோம் என்றார். malaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக