புதன், 16 ஏப்ரல், 2014

நரேந்திரமோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு !

நடிகர் ரஜினிகாந்தை நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார். ரஜினி வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இதன் மூலம் பாரதீய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். ரஜினியை சந்தித்த போதே நடிகர் விஜய்யையும் பார்ப்பதாக இருந்தது. ஆனால் விஜய் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் சந்திப்பு நிகழவில்லை. தற்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக நரேந்திர மோடி கோவை வருகிறார். அப்போது இருவரையும் சந்தித்து பேச வைக்க தமிழக பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்பாடு செய்தனர். விஜய்யும் நரேந்திர மோடியை சந்திக்க இசைவு தெரிவித்துள்ள்ளார். விஜய் பிற்பகல் கோவை செல்கிறார். அங்கு நரேந்திர மோடியை சந்திக்கிறார். தேர்தலையொட்டி இருவரும் சந்திப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் ஏற்கனவே ரசிகர் மன்றத்தினரை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் சமூக சேவை பணிகளை செய்து வருகிறார். அவர் அரசியலுக்கு வருவார் என்று தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நரேந்திர மோடியை அவர் சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைவா ஜாதகத்தில் சனி சரியாக இல்லையோ nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக