சனி, 19 ஏப்ரல், 2014

தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் சமந்தா

விக்ரம் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா.‘கோலி சோடா‘ படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது பற்றி விஜய்மில்டன் கூறும்போது, ‘விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். வரும் வாரத்தில் சமந்தாவை சந்தித்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் சொல்ல உள்ளேன். அதன்பிறகு அவர் கால்ஷீட் பற்றி முடிவாகும் என்றார். சமந்தா ஏற்கனவே ‘கோலி சோடா படம் பற்றி தனது இணையதள பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் சமந்தா தற்போது ‘கத்தி படத்தில் விஜய் ஜோடியாகவும், ‘அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாகவும் நடித்து வருகிறார். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக