சனி, 19 ஏப்ரல், 2014

மோடியை விமர்சிப்பவர்களுக்கு இங்கு இடம் இல்லை;பாகிஸ்தானுக்கு போகலாம்: பீகார் பாஜக தலைவர் பேச்சு

மோடியைப்பற்றி விமர்சிப்பவர்களுக்கு  இந்தியாவில் இடம் இல்லை, அவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம் என்று பீகார் மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய கிரிராஜ் சிங், பாஜக பிரமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு தடையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம். வருங்காலத்தில் அவர்களுக்கு இந்தியாவில் இடம் இருக்காது. பாகிஸ்தானில் மட்டுமே இடம் இருக்கும். என்றார். சர்சைக்குரிய வகையில் பேசிய கிரிராஜ்க்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆட்சிக்கு வருவோமா என்பது தெரிய முதலே பயங்கர வாதத்தை பாஜக பரப்புகிறது ! மோடி பிரதமர் ஆகிவிட்டால் இவ்வளவு காலமும் கட்டி காத்த ஜனநாயக பாரம்பரியம் எல்லாமே வீணாகிவிடும் நாடு குட்டி சுவராகி விடும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக