வெள்ளி, 18 ஏப்ரல், 2014

நக்கீரன் சர்வே: 15 தொகுதிகளில் திமுக- 10; அதிமுக-3 ; பாஜக -1 வெல்லும்!! வைகோ, சுதீஷுக்கு படுதோல்வி!!

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக நக்கீரன் வாரமிருறை இதழ் கருத்து கணிப்பு நடத்தி 15 தொகுதிகள் முடிவுகளை அறிவித்துள்ளது. இதில் திமுக 10 தொகுதிகளிலும் அதிமுக 3 தொகுதிகளிலும் பாஜக 1 தொகுதியிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் அதிமுக- திமுக சமபலத்தில் இருக்கிறதாம். விருதுநகர் தொகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, சேலம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் தோல்வியை சந்திப்பர் என்கிறது நக்கீரன் கருத்து கணிப்பு. லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் நக்கீரன் வாரம் இருமுறை கருத்து கணிப்புகளை நடத்தியது. ஒரு தொகுதிக்கு 600 பேர் (ஆண்கள் 300, பெண்கள் 300) என்ற அடிப்படையில் இக்கருத்து கணிப்பை நடத்தியதாக நக்கீரன் தெரிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட கருத்து கணிப்பில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் தோல்வியைத் தழுவுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.  

திமுக வெல்லும் தொகுதிகள் விருதுநகர், விழுப்புரம், ராமநாதபுரம், வடசென்னை, நாகை, வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருச்சி 

அதிமுக வெல்லும் தொகுதிகள் சேலம், பொள்ளாச்சி, கரூர் 

பாஜக வெல்லும் தொகுதி கன்னியாகுமரி

அதிமுக- திமுக இழுபறியில் உள்ள தொகுதி தென்சென்னை 

விருதுநகரில் வைகோவுக்கு 3வது இடம் 

விருதுநகர் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் ரத்தினவேல் வெல்வார். 

 அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு 2வது இடமும் மதிமுக வேட்பாளர் வைகோவுக்கு 3வது இடமும் கிடைக்குமாம். இங்கு காங்கிரஸ் கட்சி 4வது இடத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி 5வது இடத்திலும் இருக்கிறது. சேலத்தில் சுதீஷூக்கும் 3வது இடம் சேலம் லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வெல்வார். திமுக வேட்பாளர் உமாராணிக்கு 2வது இடமும் தேமுதிக தலைவரான விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷுக்கு 3வது இடமும் கிடைக்கும். காங்கிரஸ் கட்சி 5வது இடத்திலும் ஆம் ஆத்மி 6வது இடத்திலும் இருக்கிறது. அப்ப 4வது இடம் யாருக்கு என்கிறீர்களா? "நோட்டாவுக்கு" விழுப்புரத்தில் திமுக வெற்றி முகம் விழுப்புரம் தொகுதியில் திமுக முதலிடத்திலும் அதிமுக 2வது இடத்திலும் தேமுதிக 3வது இடத்திலும் இருக்கிறது. இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5வது இடமும் காங்கிரஸ் கட்சிக்கு 6வது இடமும் கிடைக்குமாம். இங்கேயும் 4 வது இடம் "நோட்டா"வுக்குத்தான் என்கிறது நக்கீரன் சர்வே. ராமநாதபுரத்தில் பாஜகவுக்கு 3வது இடம் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முதலிடத்தில் திமுகவும் 2வது இடத்தில் அதிமுகவும் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் பாஜகவும் காங்கிரஸ் கட்சி 4வது இடத்திலும் இருக்கிறது. இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5வது இடம்! வடசென்னையில் திமுக வெல்லும்- தேமுதிகவுக்கு 3வது இடம் வடசென்னை லோக்சபா தொகுதியில் அதிமுக வெல்லும். திமுகவுக்கு 2வது இடமும் தேமுதிகவுக்கு 3வது இடமும் கிடைக்குமாம். 3வது இடத்துக்கு இந்த தொகுதியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி மற்றும் "நோட்டா" இடையே கடும் போட்டியிருக்கிறதாம். நாகையில் மீண்டும் விஜயன் நாகை லோக்சபா தொகுதியில் சிட்டிங் திமுக எம்.பி. விஜயனே மீண்டும் வெல்வார். இத்தொகுதியில் அதிமுக 2வது இடத்திலும் 3வது இடத்தில் சிபிஐயும் இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4வது இடமும் காங்கிரஸ் கட்சிக்கு 5வது இடம்தானாம். வேலூரில் மீண்டும் முஸ்லிம் லீக் வேலூர் தொகுதியை கேட்டு அடம்பிடித்து வாங்கிய முஸ்லிம் லீக் கட்சி இங்கே வென்றுவிடுமாம். அதிமுகவுக்கு 2வது இடமும் பாஜக கூட்டணியில் அடித்து பிடித்து சீட் வாங்கிய புதிய நீதிக் கட்சி 3வது இடத்திலும் இருக்கிறது. இத்தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி 4வது இடத்தில் இருக்கிறது. தென்சென்னையில் அதிமுக- திமுக கடும் போட்டி தென் சென்னை தொகுதியில் அதிமுகவும் திமுகவும் சம பலத்தில் இருப்பதாக சொல்கிறது சர்வே. இங்கு போட்டியிடும் பாஜகவின் இல கணேசன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடைசியாக வேட்பாளரை அறிவித்து களத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சி 4வது இடத்தில் "நிற்கிறது" நக்கீரன் சர்வே: வைகோ, சுதீஷுக்கு படுதோல்வி!! 15 தொகுதிகளில் திமுக- 10; அதிமுக-3 ; பாஜக -1 வெல்லும்!! கடலூரில் திமுக கடலூர் லோக்சபா தொகுதியில் திமுக வெல்லுமாம். இங்கு அதிமுக 2வது இடத்திலும் தேமுதிக 3வது இடத்திலும் இருக்கிறது. இத்தொகுதியின் சிட்டிங் எம்.பி. அழகிரிக்கு டெபாசிட் கிடைக்காது என்பதையே நக்கீரன் சர்வே சொல்கிறது. திருவண்ணாமலையில் திமுக.. திருவண்ணாமலை தொகுதியில் திமுக வெல்லுமாம். 2வது இடத்தில் அதிமுகவும் 3வது இடத்தில் பாமகவும் இருக்கிறது. இத்தொகுதியில் காங்கிரஸை விட நோட்டா முன்னணியில் இருக்கிறது. பொள்ளாச்சியில் அதிமுக பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வெல்லும். இத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி 2வது இடத்திலும் பாஜக அணியில் போட்டியிடும் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் 3வது இடத்திலும் இருக்கிறார். இங்கும் காங்கிரஸை விட நோட்டா ஓட்டுதான் முன்னணி. கிருஷ்ணகிரியில் கோ.க.மணிக்கு 3வது இடம் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் திமுகவின் சின்ன பில்லப்பா வெல்வார். அதிமுகவின் அசோக்குமாருக்கு 2வது இடம், பாமகவின் கோ.க.மணிக்கு 3வது இடம். காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாருக்கு 4வது இடம் கிடைக்கும். கரூரில் மீண்டும் தம்பிதுரை கரூர் தொகுதியில் அதிமுகவின் தம்பிதுரை மீண்டும் வெல்வார். திமுக 2வது இடத்துக்கு வரும். 3வது இடம் தேமுதிகவுக்கு இருந்தாலும் வாக்கு வித்தியாசம் படுமோசமாக இருக்குமாம். அதேபோல் காங்கிரஸின் ஜோதிமணிக்கு தேமுதிகவை விட மோசமான வாக்குகள்தான் கிடைக்கும். ஆம் ஆத்மியின் மாநில தலைவரான கிறிஸ்டினா சாமியின் தொண்டு நிறுவனங்கள் அதிகம் இருக்கும் இந்த கரூரில் அக்கட்சியை "நோட்டா" வீழ்த்துகிறது. கன்னியாகுமரியில் பொன்னார் நக்கீரன் வெளியிட்டுள்ள 15 தொகுதிகளில் கன்னியாகுமரியில் மட்டும்தான் பாஜக அணி வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் முதலிடத்திலும் திமுக- அதிமுக வேட்பாளர்கள் 2வது இடத்திலும் இருக்கின்றனர். 3வது இடம் காங்கிரஸுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 4வது இடமும் ஆம் ஆத்மிக்கு 5வது இடம்தானாம். திருச்சியில் திமுக திருச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பழகன் வெல்வார். 2வது இடத்தில் அதிமுக, 3வது இடத்தில் தேமுதிக, 4வது இடத்தில் காங்கிரஸ். 5வது இடத்துக்கான போட்டி "நோட்டாவுக்கும்" மார்க்சிஸ்ட் கட்சிக்கும்தானாம்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக