தமிழக முதல்வரும், அதிமுக, தலைவருமான ஜெயலலிதாவின் தொடர் நிலைப்பாடு
மாற்றங்கள், அந்த கட்சியினர் மத்தியில் பெரும் சோர்வை ஏற்படுத்தி உள்ளதாக,
அதிமுக,வில் பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்
கடந்த மார்ச் 3ம் தேதி, ஜெயலலிதா, தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கிய போது, கள நிலவரம் அதிமுக,விற்கு சாதகமாக இருந்தது. பின், அவர் கம்யூ, கட்சிகளை கழற்றிவிட்டார் அப்போது, பாஜ,வுடன் கூட்டணி வைப்பதற்காக தான் இத்தகைய முடிவை, ஜெயலலிதா எடுத்து உள்ளார் என்ற பேச்சு நிலவியது. அதற்கு ஏற்ப, அந்த நேரத்தில் பாஜ,வின் தற்போதைய கூட்டணி முடிவாகவில்லை; ஜெயலலிதாவும், பிரசார மேடைகளில் பாஜ,வை விமர்சிப்பதை தவிர்த்தார்பாஜ, கூட்டணி முடிவான பின்பும், விஜயகாந்தை விமர்சிப்பதில் தான் அதிமுக, ஆர்வம் காட்டியது .இதனால், தேர்தலுக்கு பின் கூட, அதிமுக, - பாஜ, கூட்டணி உருவாகலாம் என்ற, தோற்றம் உருவாக்கப்பட்டு வந்தது. அம்மா எப்படியாவது கஷ்டப்பட்டு ஜெயிச்சு வந்து மத்திய அரசோடு ஒட்டிகிட்டா தான் பெங்களூர் வழக்கை ஒழித்து கட்ட முடியும் ஆனா அம்மாதான் பேருந்தை மிஸ் பண்ணிட்டாங்களே ? எவ்வளவுதான் லக் அடிச்சாலும் அதை மட்டும் நம்பாமல் கொஞ்சம் அறிவையும் தர்மத்தையும் நம்பினால் இந்த நிலைமை வந்திருக்குமா ?
இதுகுறித்து, காங்கிரஸ் மற்றும் கம்யூ, கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.இருப்பினும், பாஜ,வை தாக்காததன் மூலம், அதிமுக, சத்தமில்லாமல், மோடி ஆதரவு ஓட்டுகளை அறுவடை செய்து வந்தது. எல்லாம், "மோடி - ஜெ, நண்பர்கள் மோடி பிரதமராக வேண்டும் என்றால், அதிமுக,விற்கு ஓட்டளியுங்கள்' என்று, கையாளப்பட்ட கள பிரசார உத்தி தான். இது குறித்து, பாஜ,வும் முதலில் கண்டுகொள்ளவில்லை "இது லோக்சபா தேர்தல், அதனால், காங்கிரசை தான் விமர்சிக்க வேண்டும்' என்ற, பிரசார கொள்கையில் பாஜ, சிக்கி இருந்ததால், திமுக, - அதிமுக,வை, அவர்கள் விமர்சிக்கவில்லை.
இது, அதிமுக,விற்கு நல்ல பலன் தந்து கொண்டு இருந்த வேளையில்; அதிமுக,விற்கு ஆதரவு தெரிவித்து வந்த தவ்ஹீத் ஜமாத், கடந்த வாரம், திமுக,விற்கு ஆதரவு தெரிவித்தது. பாஜ, தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா விமர்சிக்காததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதற்கு இன்னொரு காரணம், மூன்று வாரங்களுக்கு முன், கருணாநிதி தன் பிரசாரத்தை துவங்கியதில் இருந்தே, சிறுபான்மையினர் ஓட்டுகளை திமுக, பக்கம் திருப்ப எடுத்துவந்த முயற்சியின் வெற்றி.காங்கிரஸ், தங்கள் கூட்டணியில் இல்லாததால், சிறுபான்மையினர் ஓட்டுகளை தங்கள் வசம் வைத்துக்கொள்ள, திமுக, மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் வெற்றியும் அடைந்து உள்ளது .இதனால், ஜெயலலிதா, கடந்த ஒரு வாரமாக, பாஜ,வை விமர்சிக்க தொடங்கி உள்ளார். இதன் அடுத்த பரிமாணமாக, மோடியையும் விமர்சிக்க தொடங்கி உள்ளார். கள உத்திகளை, ஜெயலலிதா, இப்படி மாற்றிக்கொண்டே இருப்பதால்; இது, சரியான முடிவு தானா? இது, அதிமுக,விற்கு பலன் தருமா? உள்ளிட்ட கேள்விகள் அதிமுக,வினர் மத்தியில் எழுந்து உள்ளது இதனால், அந்த தரப்பில் முன்பிருந்த வேகம் முழுமையாக குறைந்திருக்கிறது.
இது குறித்து, அதிமுக, வட்டாரங்கள் கூறுகையில், "ஆரம்பத்தில் நாங்கள் எதிர்பார்த்தது வேறு . ஆனால், நாட்கள் ஆக, ஆக சூழ்நிலை சுத்தமாக மாறிவிட்டது கட்சி மேலிடம் தவறான முடிவெடுத்து, இந்த தேர்தலை எதிர்கொண்டு விட்டதோ, என நினைக்கும் அளவுக்கு, நிலைமை தலைகீழாகி விட்டது. இப்படியொரு மாற்றத்தை முதல்வரும் கவனிக்கவில்லை. ஆரம்பத்தில், பாஜ, தரப்புடன் கூட்டணி சேருவதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டு விட்டோமோ என்று நினைக்க வைத்திருக்கிறது' என்றனர்.
மேலும், "மோடிக்கு பெருகும் அபரிமிதமான செல்வாக்கைப் பார்த்து, நாங்கள் விக்கித்துப் போயிருக்கிறோம். நாங்கள் பாஜ,வுடன் கூட்டணி வைத்திருந்தால், இன்றைக்கு தமிழகத்தில் பாஜ,- அதிமுக, கூட்டணி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கும். ஆனால், இப்போது, கூட்டணியும் இல்லாமல், ஆளும் கட்சி என்ற ஒரே ஒரு ஆயுதத்துடன் தான், நாங்கள் களத்தில் நிற்க வேண்டி உள்ளது' என்று, சோர்வாக சொல்கின்றனர்.தமிழகத்தில், ஒரே வாரத்தில், ஏழு பிரசார கூட்டங்களில், மோடி பேசுவார் என, யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி கட்சிகளின் பலத்தையும், மோடி அலையையும் மட்டுமே நம்பி இருந்த பாஜ,விற்கு, மோடியின் சூறாவளி சுற்றுப்பயணம் பெரும் பலத்தை சேர்த்து உள்ளது. அவர்களை பொறுத்த அளவில், மோடி அலையை அது இன்னும் வலுவாக்கி உள்ளது.
இதனால், முதலில், "ஆறு அல்லது ஏழு தொகுதிகள் எங்கள் கூட்டணிக்கு கிடைக்கும்' என, கூறி வந்த பாஜ,வினர், தற்போது, "15 தொகுதிகள் வரை எங்களுக்கு கிடைக்கும்' என, தன்னம்பிக்கையுடன் கூறத் துவங்கி உள்ளனர். இருப்பினும், தலைவர் பிரசாரத்திற்கு ஏற்ப, களப்பணி இல்லை என்பதால், பாஜ,வை அதிமுக, விமர்சிக்காமல் இருந்திருந்தால், இந்த வலுப்பெற்ற மோடி அலையின் ஓட்டுகளையும், திறமையான களப்பணி மூலம் அதிமுக, அறுவடை செய்து இருக்கலாம் ஆனால், ஜெயலலிதாவின் தற்போதைய நிலைப்பாட்டால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.அதே போல், ஜெயலலிதா, மோடியை தாக்குவதும் மக்களிடம் எடுபடவில்லை என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன "அது எந்த கூடுதல் ஓட்டுகளையும் பெற்றுத் தராமல் இருந்தாலும் சரிதான், ஆனால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமோ' என, அதிமுக,வினர் அஞ்சுகின்றனர்.
நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், முதல்வருக்கு நல்லது செய்கிறோம் என்கிற பெயரில், குஜராத்தோடு தமிழகத்தை ஒப்பிட்டு சில புள்ளிவிவரங்களைக் கொடுத்தார். அதை வைத்து தான், ஜெயலலிதா, மோடியின் குஜராத் ஆட்சியை விமர்சனம் செய்து வருகிறார் . குஜராத்தை விட, மின் உற்பத்தி உட்பட பல துறைகளில் தமிழகம் சிறந்தது என, முதல்வர் பேசி வருவது, இங்கிருக்கும் சூழ்நிலையை அனுபவித்து வரும் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.அதாவது, "குஜராத் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால், மின்வெட்டு, குடிநீர் பஞ்சம், பாசன நீர் பஞ்சம், கால்நடை தீவன விலை உயர்வு, மேடு பள்ளமான சாலைகள், நேரத்திற்கு வராத பஸ்கள், ஊராட்சிகளில் நடக்கும் முறைகேடுகள் எல்லாத்தையும் நாங்க தானே அனுபவிச்சுட்டு வரோம்' என, மக்கள் எதிர்க் கேள்வி கேட்பதாக, வீட்டுக்கு வீடு பிரசாரத்திற்கு செல்லும் அதிமுக,வினர் கூறுகின்றனர்.
உதாரணமாக, குஜராத்தை விட, தமிழகம் அதிக மின் உற்பத்தி செய்கிறது என்று புள்ளிவிவரங்களோடு, அதிமுக, பிரசாரத்தில் கூறிவந்தாலும், இந்த கடும் கோடை காலத்தில், கிராம பகுதிகளில் நிலவி வரும் 8 - 10 மணிநேர மின்வெட்டை நாங்கள் தானே அனுபவிக்கிறோம் என்பது, வாக்காளர்களின் வாதமாக உள்ளது.மோடியின் ஆட்சி பற்றி காங்கிரஸ் கூட விமர்சிப்பதில்லை, "மோடி மதசார்பற்றவர் அல்ல' என்ற ஒரு பிரசாரத்தை அந்த கட்சி செய்து வருகிறது. இதனால், மோடி ஆட்சி பற்றிய அதிமுக,வின் வாதம் வலுவில்லாமல் உள்ளது.அதே நேரத்தில், தேசிய அளவில், பாஜ, 200 இடங்களை மட்டும் கைப்பற்றும் என்று கூறிவந்த கருத்துக் கணிப்பு கள், தற்போது, பாஜ, மட்டுமே 250 இடங்களை கைப்பற்றும் எனவும், தேஜ, கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும் எனவும் ஆரூடம் கூறி வருகின்றன.
அப்படி நடந்தால், தமிழகத்தில் அதிமுக, 20 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அவர்களுக்கு மத்திய அரசில் எந்த பங்கும், வேலையும் இருக்காது என்ற நிலை உருவாகி உள்ளது.மேலும், தேர்தல் வரையும் கூட பாஜ, கூட்டணி தாங்காது என்று, அதிமுக, போட்டிருந்த கணக்கு தவறி, அந்த கூட்டணி அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்கும் தொடரும் என்ற வகையில், சேலத்தில் பிரசாரத்திற்கு வந்த மோடி, "தமிழகத்தின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்று, ஆட்சி நிர்வாகத்தை செய்யக்கூடிய அளவுக்கு திறமை படைத்தவராக விஜயகாந்த் இருக்கிறார்' என, புகழாரம் சூட்டி சென்றார்.இத்தகைய கள நிலவர மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகளால், இந்த தேர்தல் பற்றி மட்டும் அல்ல, தேர்தலுக்கு பிந்தைய சூழல் பற்றியும், அதிமுக,வினர் கவலையாக உள்ளனர் மொத்தத்தில், தேர்தல் உத்திகளை மாற்றிக்கொண்டே இருப்பதன் மூலம், இருப்பதைவிட்டு பறப்பதை பிடித்த கதையாக, அதிமுக,வின் நிலை உள்ளது
-நமது சிறப்பு நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக