புதன், 16 ஏப்ரல், 2014

காங்கிரஸ் மெதுவாக மீண்டும் செல்வாக்கு பெறுகிறது ! கருத்து கணிப்புகள் positive

தேர்தல் முடிவுகள் எந்த விதமாக இருக்கும்? எல்லார் மனதிலும் ஓடிக் கொண்டிருப்பது இதுதான். இதற்கு காங்கிரஸ் மட்டும் விதிவிலக்கா என்ன?காங்கிரசுக்கு, சி.என்.என்., - ஐ.பி.என்., கருத்து கணிப்பு 94 - 106 தொகுதிகள் அளித்தது; என்.என்.டி.டி.வி., 106 இடங்கள் வரை அளித்தது; ஏ.பி.பி., - நீல்சன் செய்தி நிறுவனமோ வெறும் 96 இடங்களை மட்டுமே கொடுத்தது.

இந்த கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் 'வெத்து வேட்டுகள்' என்றும், உண்மையில் அதிகமான இடங்களில் தாங்கள் ஜெயித்து, கருத்து கணிப்புகளை பொய்யாக்குவோம் என்றும், காங்கிரஸ் கூறி வருகிறது.உண்மை அது தானா என்று அறிந்து கொள்ள, காங்கிரசே சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பை ரகசியமாக நடத்தி உள்ளது.அதில், சிறிது நிம்மதி அளிக்கும் அளவிற்கு முடிவுகள் வந்துள்ளன. அதாவது, 120? முதல் 140? தொகுதிகள் வரை காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.குறிப்பாக, அசாம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில் கிடைக்கும் தொகுதிகள் மூலம், எப்படியாவது 140தொகுதிகள் கிடைத்துவிடும் என, அந்த ரகசிய கருத்து கணிப்பு சொல்கிறதாம்.
இந்த நம்பிக்கை தந்த ஊக்கத்தின் அடிப்படையில் தான், காங்., துணை தலைவர் ராகுல், தான் செல்லும் இடங்களில்,'கருத்து கணிப்புகள் நாங்கள் தோற்று விடுவோம் என்று சொல்கின்றன. ஆனால், உண்மையில் என்ன நடக்கப் போகிறது என்பது உங்களுக்கு தான் தெரியும்' என, மக்களை கைகாட்டி பேசி வருகிறாராம்.மேலும், பா.ஜ., 272க்கும் குறைவான இடங்களையே பெறும் என்றும், அதன் மூலம், மூன்றாவது அணி ஆட்சி அமைக்க வழி ஏற்படலாம் என்றும், அந்த அணியில், காங்., ஆதரிக்கும் பிராந்திய கட்சிகள் இடம் பெறும் என்றும், ராகுல் பெரும் நம்பிக்கையில் உள்ளாராம். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக