வியாழன், 17 ஏப்ரல், 2014

குஜராத் முன்னேற்றம் ? 5000 விவசாயிகள் தற்கொலை 170000 வீடுகளுக்கு கரண்ட் இல்லை

சேலத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் - படங்கள்சேலம் திமுக வேட்பாளர் உமாராணி செல்வராஜை ஆதரித்து கோட்டை மைதான பொதுக்கூட்டத்தில் பேசினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.‘மோடி இங்கு சேலத்தில் பேசிவிட்டு சென்றதாக அறிகிறேன். குஜராத் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக சொல்கிறார்கள். நிஜம் அதுவல்ல...வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகமாக அங்குள்ளனர்.’ என புள்ளிவிவரங்கள் சொல்லி மோடியை விமர்சித்தவர்,  ஜெ., பக்கம் வந்தார் அந்த அம்மையார் போல பொய் புரட்டு பித்தலாட்டம் செய்பவர் யாருமில்லை. தி.மு.க வை கண்டு அஞ்சுகிறார்’ என பேசினார்.கூட்டம் சரியாக ஏற்பாடு செய்யாததால் தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னே வந்தனர்.


பத்திரிகையாளர்கள் இடத்தில் நுழைந்தவர்கள் ஒருகட்டத்தில் பத்திரிக்கையாளர்களை தள்ளினர்.  இதை கண்ட மேடையில் இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம்,பாரப்பட்டி சுரேஷ் போன்றவர்கள் தொண்டர்களை கண்டித்தனர். ஆனாலும் அவர்கள் அதை சட்டை செய்யாமல்  ஸ்டாலின் பார்க்கவே தள்ளுமுள்ளு செய்தனர். பின்பக்கம் சீட் காலியாக காத்திருக்கு ஸ்டாலினை பார்க்கும் ஆவலில் முன்டியடித்ததால் பாதிக்கப்பட்டது என்னவோ பத்திரிகையாளர்கள் தான்.  nakkheeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக