புதன், 16 ஏப்ரல், 2014

நாடு 60 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை பெறும்: மோடி உறுதி !


சேலம்: சேலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மின் பற்றாக்குறையால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை போக்க ஐமு கூட்டணி அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார். தேஜ கூட்டணிக்கு வாய்ப்பு அளித்தால் நாடு 60 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை பெறும் என்று உறுதியளித்தார். !


சேலத்தில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் நிலையை கருத்தில் கொண்டே பாஜக தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக கிருஷ்ணகிரி பிரசாரத்தில்

 தேசிய ஜனநாயகக் கூட்டணி  வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில்  அவர் பேசிய போது மத்தியில் ஆளும் ஐ.மு. கூட்டணி அரசு தான்  செய்த செயல்களுக்கு கணக்கு தர வேண்டும் என்று அவர்  குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு ஐமு கூட்டணி  அரசு வேலை வழங்கியுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

70 கோடி இளைஞர்களின் கனவை நனவாக்கும் வகையில்  வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் பேசிய அவர் குஜராத்தில் தமது ஆட்சியில் மின்வெட்டே  இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு  முன்னேறுவதற்கு மின்சாரம் தேவையா? இல்லையா? என்று மோடி  கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்சாரம் இல்லாத காரணத்தாலேயே நூற்றுக்கணக்கான ஆலைகள்  மூடப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். நிலக்கரி பற்றாக்குறையே  மின் உற்பத்தி செய்ய முடியாததற்கு காரணம் என்று மோடி  குறிப்பிட்டுள்ளார்.

நதி இணைப்பை தடுத்த காங்கிரஸ்

வாஜ்பாய் ஆட்சியின் போது இந்தியாவில் நதிகள் இணைப்புக்கு திட்டம்  தீட்டப்பட்டது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு பாஜகவின் நதிகள்  இணைப்புத் திட்டத்தையும் தடுத்து நிறுத்தியது. தமிழ்நாட்டின்  முன்னேற்றத்திற்காக ஐமு கூட்டணி அரசு எதையும் செய்யவில்லை  என்று குற்றம் சாட்டியுள்ளார். ஐமுகூக்கு மாற்றாக உள்ள தேஜ  கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள் என்றும் மோடி கேட்டுக் கொண்டார். dinakaran.comஎல்லாரும் ஒருக்கா ஜோரா கைதட்டுங்கோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக