வியாழன், 17 ஏப்ரல், 2014

வடிவேலு: எல்லா மொழியை சேர்ந்தவர்களுக்கும் என் உடல் மொழி பிடிக்கும்: (படங்கள்)

எல்லோரையும் சந்தோஷப்படுத்தி சிரிக்க வைப்பதுதான் என் வேலை. எந்த படத்திலும் நான் ஆபாசமாக வசனம் பேசி நடித்ததில்லை. வன்முறை காட்சிகளிலும் நடித்ததில்லை. சிரிக்க வைக்கிற மருந்தை ஆண்டவன் எனக்கு கொடுத்து இருக்கிறான். அதை நான் மக்களுக்கு தொடர்ந்து கொடுப்பேன். அண்ணனுக்கு தெரியாமல் தங்கையோ அல்லது தங்கைக்கு தெரியாமல் அண்ணனோ ஒளிந்து மறைந்து  பார்க்கிற படம் அல்ல, இது. பல் முளைக்காத குழந்தைகள் முதல், பல் விழுந்த தாத்தாக்கள் வரை குடும்பத்துடன் பார்க்கிற படம்  வடிவேல் நடித்த தெனாலிராமன் படத்தில், கிருஷ்ண தேவராயரை பற்றி காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அது தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி, தெலுங்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்தை திரையிடுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இதுதொடர்பாக நடிகர் வடிவேலுவும், தெலுங்கு அமைப்புகளை சேர்ந்தவர்களும் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில், வடிவேலுவுடன் ‘தெனாலிராமன்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தெலுங்கு மக்கள் சார்பில் அகில இந்திய தெலுங்கு சம்மேளன தலைவர் சி.எம்.கே.ரெட்டி, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பேச்சுவார்த்தையின் முடிவில், இரு தரப்பினர் இடையேயும் சமரசம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ‘தெனாலிராமன்’ படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடிகர் வடிவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘எல்லா மொழிகளை சேர்ந்த மக்களும் என்னை ரசிக்கிறார்கள். எல்லா மொழியை சேர்ந்தவர்களுக்கும் என் உடல் மொழி பிடிக்கும். பகை மொழி எதுவும் எனக்கு கிடையாது. மொழி தெரியாதவர்கள் கூட, என் நகைச்சுவையை ரசிக்கிறார்கள். எல்லா மொழிகளை சேர்ந்தவர்களும் என் சகோதரர்கள்.
யார் மனதையும் புண்படுத்துவதற்காக, ‘தெனாலிராமன்’ படத்தை எடுக்கவில்லை. இந்த படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சுமுகமான முடிவு ஏற்பட்டதற்காக, ஒட்டு மொத்த தமிழ் மக்கள் சார்பில் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரையும் சந்தோஷப்படுத்தி சிரிக்க வைப்பதுதான் என் வேலை. எந்த படத்திலும் நான் ஆபாசமாக வசனம் பேசி நடித்ததில்லை. வன்முறை காட்சிகளிலும் நடித்ததில்லை. சிரிக்க வைக்கிற மருந்தை ஆண்டவன் எனக்கு கொடுத்து இருக்கிறான். அதை நான் மக்களுக்கு தொடர்ந்து கொடுப்பேன்.
அண்ணனுக்கு தெரியாமல் தங்கையோ அல்லது தங்கைக்கு தெரியாமல் அண்ணனோ ஒளிந்து மறைந்து பார்க்கிற படம் அல்ல, இது. பல் முளைக்காத குழந்தைகள் முதல், பல் விழுந்த தாத்தாக்கள் வரை குடும்பத்துடன் பார்க்கிற படம். அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.’’ இவ்வாறு வடிவேல் கூறினார்.

படங்கள்: அசோக் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக