சனி, 4 செப்டம்பர், 2021

பேராசிரியர் சுப வீரபாண்டியன் இந்து மதம் பற்றி அறிந்த அளவிற்கு இஸ்லாம் பற்றி அறியவில்லை ... சாதிக் சமத்து

 Saadiq Samad Saadiq Samad  :  திரு ஐயா சுபவீ அவர்களுக்கு ஓர் மடல்  !  வணக்கம்.
ஐயா அவர்களின் முஸ்லிம்கள் தமிழில் வழிபாடு நடத்துகிறார்கள் என்ற உங்க பதில் கூறும் வீடியோ ஒன்றை பார்த்தேன்  ஐயா சொல்வது போல் அங்கே இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் உங்களை எந்த மௌலவியோ ஏமாற்றி இருக்கிறார்கள் நீங்களும் "வழமை" யாக ஏமாந்துப்போனதுப்போல் ஏமாந்து இருக்கிறீர்கள் ஹிந்து மதம் (!!?)பற்றி நீங்கள் அறிந்த அளவிற்கு இஸ்லாம் பற்றி அறியவில்லை  என்பதையும் தாழ்மையுடன் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் .
நீங்கள் பார்ப்பனிய ,பார்பனிய கடவுள்களை மறுக்கும் ஒரு இறை மறுப்பாளர் நான் சிவன், இயேசு ,யகோவா, அல்லாஹ் குறிப்பா இறைத்தூதர் என்று  திராவிடர்களையும் தமிழர்களையும்  இன்றும் ஏமாற்றிவரும் முஹம்மது உட்பட அனைத்து கருத்துவாத கடவுள்கள் அதன் வேதங்கள் தூதர்களை  நேர்கொண்டு மறுக்கும் EX முஸ்லிம்களில்நானும் ஒருவன்   இந்த வேறுபாடும் ,ஒற்றுமையும் தான் நம்மை இணைக்கிறது  சரி மேட்டருக்கு போவோம்
 முதலில் உங்களுக்கு ஒரு நன்றி அல்லா சாமி அரபிய கடவுள் அதாவது இங்கே அது ஓர் இறக்குமதி கடவுள் என்று ஒப்புக்கொண்டதற்கு

டெல்லியில் பாதுகாப்பு துறையில் பணியாற்றிய பெண் பலாத்காரம் செய்து கொலை- .. வெறியாட்டம்

 Veerakumar  -  Oneindia Tamil :  டெல்லி: டெல்லியில் பாதுகாப்பு துறையில் பணியாற்றிய சபியா என்ற இஸ்லாமிய பெண்மணி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:
டெல்லியில் கடந்த வாரம் சபியா சைஃபி என்ற பெண் காவல் அதிகாரி நான்கு நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதுடன் 50 இடங்களில் வெட்டப்பட்டும், மார்பகங்களை அறுத்தும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த படுபாதகச் செயலைக் கேள்வியுற்ற போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
ஒரு நாட்டின் தலைநகர் அதிலேயே பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக் குறியாக இருப்பது நம்மையெல்லாம் தலைகுனிய வைக்கிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரகாலமாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வெட்கத்திற்குரியது.

நியூசிலாந் தாக்குதல் ! இலங்கை காத்தான்குடியை சேர்ந்த சம்சுதீன் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி என்று அறிவிப்பு

veerakesari :   நியூசிலாந்தில் ஆறு பேர்கள் மீது கொடூர தாக்குதலை மேற்கொண்டவர்  இலங்கை காத்தான்குடியை சேர்ந்த சம்சுதீன் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி என்று தெரிகிறது
நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் அந் நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் ,  அந்த நபர் தொடர்பில் இலங்கையிலும் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்தின் ஆக்லண்ட் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் நுழைந்த குறித்த இலங்கையர் கத்திக்குத்து தாக்குதலை ஆரம்பித்த 60 செக்கன்களில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
வெறுக்கத்தக்க, தவறான இந்த செயலை செய்த நபர் மாத்திரமே இந்த தாக்குதலுக்கு பொறுப்பாளியாவார் என ஜெசிந்தா ஆர்டன் சம்பவத்தின் பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
குறித்த நபர் இலங்கையை சேர்ந்த அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவில் 5000 கி.மீ., பைக் டிராவல் செய்த நடிகர் அஜித்..

5000 கி.மீ.,

tamil.filmibeat.com -By Mari s : சென்னை: வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் முடித்த தல அஜித் அங்கே பைக் டிராவல் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஏற்கனவே ஹைதரபாத்தில் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர் அஜித் சைக்கிளில் ஊர் சுற்றிய புகைப்படங்கள் வைரலானது.இந்நிலையில், ஹெல்மெட் மற்றும் பைக் சூட் அணிந்து கொண்டு அஜித் இருக்கும் புகைப்படங்கள் தல ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளன. கடந்த ஆகஸ்ட்  மாதம் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக இயக்குநர் எச். வினோத், தல அஜித் உள்ளிட்ட வலிமை படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். இரண்டு ஆண்டுகளாக நீண்டு கொண்டே சென்ற வலிமை படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்து படக்குழுவினர் மீண்டும் சென்னைக்கு நேற்று திரும்பினர்.

தாலிபான்களுக்கு பயந்து தப்பியோடியபோது பெண்கள், சிறுமிகளுக்கு நடந்த கட்டாய திருமணங்கள்: வெளியான தகவல்

tamil.oneindia.com - Veerakumar : வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆண்கள் .. பெண்கள் மற்றும் சிறுமிகளை கட்டாய திருமணம் செய்து கொண்டு அதை காண்பித்து நாட்டை விட்டு வெளியேற விண்ணப்பம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அமெரிக்காவின் முன்னணி ஊடகம் சிஎன்என் இது தொடர்பாக களத்தில் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தங்களுக்கு கிடைத்த தகவல்களை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தாலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து அமெரிக்க நேசப்படைகளுக்கு உதவிகரமாக இருந்து வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

பொதுத் துறை நிறுவனங்களில் மாநிலங்களுக்கும் உரிமை உண்டு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

 மின்னம்பலம் : நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குக் கொடுத்து அவற்றைப் பணமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து இருக்கும் நிலையில்... இதுகுறித்து தனது எதிர்ப்பை சட்டமன்றத்தில் பதிவு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கும் இது தொடர்பாக கடிதம் எழுத இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 3) இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அந்தக் கடிதத்தில், “நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும்.
அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில்மயமான – தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதனால், அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது” என்று கூறியுள்ள ஸ்டாலின்,

அமெரிக்க ஹெலிகாப்டர்களை விமானங்களையும் எதிர்பார்த்து ஏமாந்த தாலிபான்கள் ..வெறும் உடைசல்களையே விட்டு சென்றுள்ளது

செல்லபுரம் வள்ளியம்மை : அமெரிக்க ஹெலிகாப்டர்களை விமானங்களையும் எதிர்பார்த்து காத்திருந்த தாலிபான்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அமெரிக்க தந்துவிட்டது என்று கூறுகிறார்கள்
அமெரிக்க ராணுவம் விட்டு சென்ற ஏராளமான ராணுவ தளபாடங்கள் பாவனைக்கு உதவாதவை என்று தெரிகிறது .. வெறும் பேரிச்சம் பழத்துக்கு போடவேண்டிய இரும்பு துண்டங்களை தாலிபான்களுக்கு விட்டு சென்றுவிட்டது அமெரிக்க .
அல் ஜெஸிரா நிருபர்  : காபூல் ராணுவ விமான தளம் இது ..
நேற்று இங்கு தாலிபான்கள் அளவு கடந்த உற்சாகத்தில் ஆகாயத்தை நோக்கி சுட்டும் மகிழ்ச்சி பிரவாகத்தில் இருந்தனர்
ஆனால் இன்று நிலைமை வேறாக இருக்கிறது
அமெரிக்க விட்டு சென்ற விமானங்களை பார்த்ததும் தாலிபான்களுக்கு ஏமாற்றமாகி விட்டது
தங்களை அமேரிக்கா வஞ்சித்து விட்டதாக கூறுகிறார்கள்
ஏனெனில் விமான நிலையத்தில் காணப்படும் ஏராளமான ஹெலிகாப்டர்களும் விமானங்களும் ஒருபோதும் பாவிக்க முடியாதவாறு உடைந்து நொறுங்கி போயுள்ளது
இந்த விமானங்கள் ஆப்கானிஸ்தானின் சொத்து என்றுதான் தாங்கள் கருதி இருந்ததாகவும் அமெரிக்கா தங்களை ஏமாற்றி விட்டதாக கோபத்துடன் இருக்கிறார்கள் தாலிபான்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

திமுக-வுக்கு இது நல்லதல்ல!' - கொதிக்கும் கல்வியாளர்கள்

May be an image of 1 person
May be an image of 1 person
May be an image of 1 person, sitting and indoor

vikatan  :  `திமுக-வுக்கு இது நல்லதல்ல!' - கொதிக்கும் கல்வியாளர்கள்:
 புதிய கல்விக்கொள்கைக்கு
 துணை போகும் அரசு?
எம்.புண்ணியமூர்த்தி
சாதி ஆணவக் கொலையும் புதிய கல்விக் கொள்கையும் சாதி ஆணவக் கொலையும் புதிய கல்விக் கொள்கையும்
கல்வி  ``எதிர்க்கட்சியாக இருந்தபோது புதிய தேசிய கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்த தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய கல்விக் கொள்கையின் கூறுகளை ஆதரிப்பது ஏமாற்றமளிக்கிறது. இது தி.மு.க-வுக்கு நல்லது கிடையாது" என்று வெடிக்கிறார் பேராசிரியர் கருணானந்தன்.
``அரசிடம் இல்லாத எந்த விஷயம் தொண்டு நிறுவனங்களிடம் இருக்கிறது? இந்தத் தொண்டு நிறுவனங்களை எதன் அடிப்படையில் அனுமதிக்கிறீர்கள்?" - என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
அகஸ்தியாவுக்கு அனுமதி!

இலங்கையைச் சேர்ந்த ISIS இஸ்லாமிய பயங்கரவாதி நியூசிலாந்தில் தாக்குதல்!

 Rishvin Ismath  :  இலங்கையைச் சேர்ந்த ISIS இஸ்லாமிய பயங்கரவாதி நியூசிலாந்தில் தாக்குதல்!
நியூசிலாந்தின் ஒக்லன்ட் நகரில் உள்ள LynnMall நவீன சந்தைத் தொகுதியில் அமைந்துள்ள Countdown வர்த்தக நிலையத்தில் தாக்குதல் நடாத்தி 6 பேரை காயப்படுத்திய (பதிவு எழுதப்படும் வரையான தகவல்) இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியப் பயங்கரவாதி நியூசிலாந்துப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
குறித்த ISIS பயங்கரவாதி இலங்கையை சேர்ந்தவன் என்கின்ற விடயம் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், எனினும் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் உள்ளது என்கின்ற உண்மையை முடிந்த வரை தகவல்களுடன் எழுத்து மூலம் வெளிக்கொணரும் என் போன்றவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட பெரிதாக எதுவுமில்லை,
மாறாக இவ்வளவு எச்சரித்தும், இவ்வளவு நடந்தும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கவலைப்படவே முடியும்.  

நடிகை மீரா மிதுனின் 2வது ஜாமீன் மனு தள்ளுபடி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது..

 தினகரன் : சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனின் 2வது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மீரா மிதுனின் ஆண் நண்பரின் 2வது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

மட்டக்களப்பு 109 வயது செல்லம்மா ஆச்சி காலமானார்‌.. இறுதிவரை பூரண நலத்தோடு வாழ்ந்தார்

ஜேவிபி நியூஸ் : மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப்‌ பிரிவில்‌ அமைந்‌துள்ள புதுக்குடியிருப்பு இராமத்தில்‌ வசித்து வந்த செம்பக்குட்டி செல்‌லம்மா என்பவர்‌ தனது வயது 109
ஆவது வயதில்‌ நேற்று வியாழக்‌முமை காலமானார்‌.
191/8 ஆம்‌ ஆண்டு பிரலம்மா ஆச்சி தனது 109 வயது வரை அ,ரோக்கியமாகவே வாழ்ந்து வந்‌
துள்ளார்‌. செல்லம்மா ஆச்சிக்கு 12. பிள்ளைகள்‌. 68 பேரப்பிள்ளைகள்‌, 147
பூட்டப்பிள்ளைகள்‌, 37கொள்ளுப்பிள்‌ளைகள்‌ உள்ளனர்‌.
இறக்கும்‌ வரை தன து அன்றாடக்‌ கடமைகளை தானே செய்து வதுள்ளார்‌. மூன்று நேரமும்‌ தவறாது சாமிகும்பிடுவது, தேவார, திருவாசகங்களை ஓதுவது என தமது பொழு
தைக்போக்கியுள்ளார்‌.
பிரதேசத்தின்‌ பாரம்பரிய முதுசமாக விளங்கிய செல்லம்மா ஆச்சி யின்‌ மறைவால்‌ அப்பகுதி மக்கள்‌ பெரும்‌ கவலையடைந்துள்ளனர்‌.

அயோத்திய தாசருக்கு மணி மண்டபம்! முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த அறிவிப்புகள்.

  Velmurugan P - e Oneindia Tamil :  சென்னை : அயோத்திய தாசருக்கு மணி மண்டபம், வஉசி பிறந்த நாள் தியாகத் திருநாளாக அறிவிப்பு,
வன்னியர் இடஒதுக்கீட்டிற்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு மணி மண்டபம் மற்றும் குடும்பத்தினருக்கு அரசு வேலை, என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வரும் அறிவிப்புகளால் எதிர்க்கட்சிகள் திகைத்து நிற்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஒரு துறை அமைச்சர் தனது துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்கள்.
அத்துடன் தனது துறையில் செய்யப்பட்டு வரும் பணிகள்,ஒதுக்கப்பட்டுள்ள நிதி, செய்யப்பட உள்ள பணிகள் குறித்து விளக்கி வருகின்றனர்.
கோடநாடு எஸ்டேட்டில் 'அன்று' கரண்ட் கட்டானது எப்படி?
பின்னணியில் யார்? மேலும் 4 தனிப்படைகள் அமைப்பு இதேநேரம் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஒரு வாரமாக விதி எண் 110ன் கீழ் சிறப்பு அறிவிப்புகளை துறை வாரியாக வெளியிட்டு வருகிறார்கள்.

கப்பலோட்டிய தமிழர் பெயரில் ரொக்கப்பரிசுடன் விருது- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 மாலைமலர் : ப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18 -ம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை:  தமிழ்நாட்டில்  உள்ள சுதந்திர போராட்ட வீரர்களில் வ.உ.சி. தனித்துவம் மிக்கவர். அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலாக கப்பல் விட்டார். அதன் காரணமாக கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.
வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (5-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வ.உ.சி.க்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில்  இன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வண. சேவியர் தனிநாயகம் (Rev. Xavier S. Thani Nayagam,) ஈழத்துத் தமிழறிஞர்!

May be an image of 1 person and text that says 'தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் அவர்களின் 41-ஆவது ஆவது நினைவுநாள் 02.08.1913 01.09.1980 திட்டம் 8 உலகத் தமிழ் அருங்காட்சியகம், தேசிய மரபு அறக்கட்டளை. nht1947@gmail.com 94878-49490'

அருண் அம்பலவாணர்  :    1974ல் தொடங்கப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாக முதல் தலைவராக வருவதற்கு மிகப்பொருத்தமானவரான இருந்த இவர் புறக்கணிக்கப்பட்டது பெருந்தவறு.
தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் (Rev. Xavier S. Thani Nayagam,) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். நெடுந்தீவான்.
தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர்.
பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார்.  
தமிழ்க் கல்ச்சர் என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார்.
1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார்.
இந்த நிறுவனமே தொடர்ச்சியாக எட்டு உலகளாவிய ரீதியிலான உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்தியது.
அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப் பெற்றன.

இத்துப்போன உங்கள் ராமனை விட செத்து போன எங்கள் ராவணன் எவ்வளவோ மேல்.

May be an image of text that says 'வீர காவியம் வீழ்த்தப்பட் வீழ்த்தப்பட்டவர்களின் அவனது இனத்தாரின் அசுரன் கதை ராவணன் மற்றும் ஆனந்த் நீலகண்டன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம் Tamil translation Anand Neelakantan's National Bestseller ASURA TALE'F OF THE VANQUISHED'

சுமதி விஜயகுமார் :  வாரத்தில் ஒரு நாள் தூர்தர்ஷனில் ராமாயணம் ஒளிபரப்பாகும். கேபிள் இல்லாத காலம் என்பதால் வேறு வழி இல்லாமல் அதை பார்க்க நேரிடும்.
அதுவும் ஹிந்தியில் தான் இருக்கும். வசனங்களும் புரியாது.
அதனால் கதையும் சரியாக தெரியாது. ராமர் காட்டுக்கு சென்றதும் , சீதையை மீடியதும் மட்டும் தான் தெரியும்.
ஆனால் போர் வருகிறது என்று தெரிந்தால் மட்டும் ஆர்வத்துடன் பார்ப்பதுண்டு.
ஒரு வில்லில் இருந்து நெருப்பு வர , எதிர் வில்லில் இருந்து தண்ணீர் வரும். ஒரு வில்லில் இருந்து பாம்பு வர , எதிர் வில்லில் இருந்து பருந்து வரும்.
அதிலும் இலங்கையில் அனுமாருக்கு இருக்கை தர மறுக்க, அனுமனின் வால் நீண்டு சுருண்டு ஒரு சிம்மாசனம் போல அமையும்.
அது மன்னனின் சிம்மாசனத்தை விட உயரமானதாக இருக்கும். அதில் அனுமார் கம்பீரமாக உட்கார்ந்த காட்சிகள் எல்லாம் மிகவும் ரசித்து பார்த்த காட்சிகள். தூங்கி கொண்டிருக்கும் கும்பகர்ணனை எழுப்ப வாத்தியங்கள் முழங்க பல வழிகளிலும் எழுப்பும் காட்சி இன்னமும் கண் முன் நிற்கிறது.
தாத்தா, மிக நல்ல திரைப்படம் என்று என்னையும் அண்ணனையும் மட்டும் 'லவகுசா' திரைப்படத்திற்கு அழைத்து சென்றார்.

மீண்டும் அண்ணா சாலையில் எழுகிறார் கலைஞர்

“கம்பீரமாக அதே இடத்தில் எழுந்து நிற்கப்போகும் கலைஞர்” - அண்ணா சாலை கலைஞர் சிலை வரலாறு தெரியுமா?

கலைஞர் செய்திகள்  : அண்ணா சாலையில் அமைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் சிலை, ராமநாராயணன் இயக்கிய ‘பட்டம் பறக்கட்டும்’ என்ற திரைப்படத்தின் பாடல் காட்சியில் இடம்பெற்றது.
முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியால் கவரப்பட்ட தந்தை பெரியார் 1968ஆம் ஆண்டு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, “தம்பிக்குச் சிலை ஒன்றை அமைக்க வேண்டும்" என்றார்.
அப்போதே கலைஞர் இடைமறித்து, “முதலில் உங்களுக்குச் சிலை அமைப்பதைப் பற்றி யோசிக்கிறேன். அதன்பிறகு இதைப் பார்க்கலாம்" என்றார்.

லேமினேட் செய்து பாதுகாக்கவேண்டிய அரசியல்.. மு.க.ஸ்டாலின் நாட்டுக்கே ரோல்மாடல்”: தெலுங்கு சேனல் புகழாரம்!

கலைஞர் செய்திகள் -  விக்னேஷ் செல்வராஜ்:  ‘லேமினேட்’ செய்து பாதுகாக்கப்பட வேண்டியது மு.க.ஸ்டாலினின் அரசியல் என பிரபல தெலுங்கு தொலைக்காட்சி புகழாரம் சூட்டியுள்ளது.
10TV என்பது, புகழ்பெற்ற தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி. அதன் 'Clearcut’ எனும் நிகழ்ச்சியில், இந்த வாரம் தமிழக அரசியலையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் குறித்துப் பேசினார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களிடம் காட்சிக்கெளியராக விளங்குவதையும், அணுகுதற்கு ஆரவாரமற்றவராக இருப்பதையும், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மக்களின் நலன்கள் குறித்தே சிந்தித்துச் செயல்படுவதையும் வெகுவாகப் புகழ்ந்து, ஒரு வீடியோ செய்தித் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
தெலுங்கில் இடம்பெற்ற இக்காட்சித் தொகுப்பினை - அவர்கள் வழங்கிய அதே எளிய மொழி வடிவில் வழங்குகிறோம்.
நிகழ்ச்சியை அதன் நெறியாளர் இப்படித் தொடங்குகிறார்:
நேயர்களே! நீங்கள் லேமினேட் செய்த சான்றிதழ்களைப் பார்த்திருப்பீர்கள். லேமினேட் செய்த ஐ.டி. அடையாள அட்டைகளைப் பார்த்திருப்பீர்கள். லேமினேட் செய்த புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். இவைகளைப் போல லேமினேட் செய்து பாதுகாக்கப்பட வேண்டிய தரமான அரசியல் இருக்கிறது. அதை நீங்கள் தமிழ்நாட்டில் பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடு - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

ரத

-நக்கீரன்  :  விநாயக சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி,
பா.ஜ.க., சார்பில் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து பிறகு நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு பின்பு அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி  ஆற்றங்கரையில் கரைக்கப்படும்.

அரக்கர் கூட்டம், திராவிடம் 2.0 பின்னணியில் தி.மு.க? - உக்கிரமாகும் இணையப்போர்!

மனோஜ், ரவிசங்கர் அய்யாக்கண்ணு, பாக்கியராஜன்
கொளத்தூர் மணி - மனுஷ்ய புத்திரன்

விகடன் - ம.உமர் முக்தார் : முதலில் தி.மு.க-வை ஆதரிப்பவர்களையெல்லாம் தி.மு.க கட்சியின் உறுப்பினர்கள் போல முத்திரை குத்துவதே தவறான செயல்.
பிரீமியம் ஸ்டோரி
`புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு சிறப்பாகச் செயல்படுகிறது’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். மற்றொரு தரப்பினரோ, `அதிகாரிகள் நியமனம், மின்வெட்டு உள்ளிட்ட விஷயங்களில் தி.மு.க அரசு தடுமாறுகிறது’ என்கிறார்கள்.
ஆக்கபூர்வமான இவர்களின் விமர்சனங்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் `அரக்கர் கூட்டம்’, `திராவிடம் 2.0’ ஆகிய பெயர்களில் ‘தி.மு.க ஆதரவாளர்கள்’ என்று கூறிக் கொள்பவர்கள் பிரபாகரனையும், புலிகள் இயக்கத்தினரையும் கடுமையாக வசைபாடுவது கடும் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்களுக்குப் பதிலடி கொடுப்பதாகச் சொல்லி, தி.மு.க-வை வறுத்தெடுக்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள். கடந்த சில நாள்களாக இணையத்தில் உக்கிரமாக நடக்கும் இந்தப் போருக்கான பின்னணி என்ன?
இந்த விவகாரங்களை உன்னிப்பாக கவனித்துவருபவர், தந்தை பெரியார் திராவிடர் கழக மாணவரணி மாநில ஒருங்கிணைப்பாளர் மனோஜ். அவர் நம்மிடம், “தி.மு.க ஐடி விங் நிர்வாகிகள் நேரடியாக இது போன்ற பதிவுகளை இடுவதில்லை.

வியாழன், 2 செப்டம்பர், 2021

திராவிடக் களஞ்சியம் பெயர் மாற்றம் - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

 நக்கீரன் செய்திப்பிரிவு :  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்கத் தமிழ் நூல்களுக்குத் 'திராவிடக் களஞ்சியம்' என பெயர் மாற்றப்பட்டது மற்றும் 'வலிமை சிமெண்ட்' குறித்து விளக்கமளித்தார்.
அவர் கூறியதாவது, "கால்டுவெல் தொடங்கி செம்மொழித் தமிழ் வரை காலகட்ட நூல்கள் மட்டுமே திராவிடக் களஞ்சியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டையும் போட்டு சிலர் குழப்பிக் கொள்ளக் கூடாது; மற்றவர்களையும் குழப்பக் கூடாது. தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம், புதிய சிமெண்ட்டை அறிமுகப்படுத்தியதால், சிமெண்ட்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. புதிய ஆலைகள் சிமெண்ட் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வலிமை சிமெண்ட் விற்பனைக்கு வரும்போது மற்ற சிமெண்ட்களின் விலை குறையும்" எனத் தெரிவித்தார்

தமிழ்நாட்டின் 32 சுங்கச்சாவடிகளைக் நீக்குவதற்கு நடவடிக்கை : அமைச்சர் எ.வ.வேலு

May be an image of 1 person, road and text that says 'BREAKING NEWS LANE2 CARS /JEEPS/VANS LANE SUN NEWS NEWS AE சட்டப்பேரவையில் அமைச்சர் வ.வேலு பேச்சு! "தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச் சாவடிகள் உள்ளன; 32 சுங்கச் சாவடிகளை நீக்க ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்தப்படும்" SUNNEWS sunnewslive.in BREAKING NEWS ÛSUNNESTAIL'

  மின்னம்பலம் : தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தமிழகத்திலுள்ள 24 சுங்கச்சாவடிகளில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஏற்கனவே உள்ள கட்டணங்களை விட தற்போது 5ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 2) மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளில் உள்ளது. இவற்றில் பல சுங்கச்சாவடிகளின் காலம் முடிவுற்ற பிறகு 15 ஆண்டுகளைக் கடந்தும், கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சுங்கச் சாவடிகளில் கந்துவட்டி போல் ஏழை மக்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது.

காஷ்மீர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம்" - பிபிசிக்கு தாலிபன் தலைவர் பேட்டி

வினீத் கரே  -     பிபிசி செய்தியாளர்  :  சுஹைல் ஷாஹீன், தாலிபன் செய்தித்தொடர்பாளர் :
ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று பிபிசியிடம் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.
தோஹாவில் உள்ள சுஹைல் ஷாஹீல் ஜூம் செயலி மூலம் பிபிசிக்கு அளித்த நேர்காணலின்போது, கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்காவுடன் தாலிபன் செய்து கொண்ட உடன்பாட்டு விதிகளில் கையெழுத்திட்டபோதே,
ஆப்கானிஸ்தான் மண்ணை வேறெந்த நாட்டுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் எந்த கொள்கையும் தங்களுக்கு இல்லை என பேசியதை நினைவுகூர்ந்தார்.
"முஸ்லிமாக இருப்பதால், காஷ்மீரிலோ இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்காகவோ குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு," என்றும் ஷாஹீன் தெரிவித்தார்... முஸ்லிம்கள் உங்களுடைய சொந்த மக்கள், உங்களுடைய குடிமக்கள், உங்களுடைய சட்டத்தின்கீழ் அவர்கள் சமமானவர்கள் என்று எங்களுடைய குரலை உரத்து ஒலிப்போம்," என்று அவர் கூறினார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

 மாலைமலர் : ‘சற்றே குறைப்போம்' திட்டத்தின் கீழ் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
சென்னை:  தமிழக சட்டசபையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன். துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு ஏற்படுத்தப்படும். ‘சற்றே குறைப்போம்' திட்டத்தின் கீழ் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். டெல்டா பிளஸ் குறித்து அறிய ரூ.4 கோடியில் சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்படும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் ரூ.258 கோடி செலவில் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். 25 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் இயக்கப்படும்.

நடிகர் ஆர்யா தான் A1.. அவரை கைது செய்ய வேண்டும்..' பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

  'Vigneshkumar -  Oneindia Tamil :   சென்னை: பண மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் கொடுத்த புகாரில் ஆர்யாவுக்குத் தொடர்பில்லை என போலீசார் கூறிய நிலையில், இன்று நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட நடிகர் ஆர்யாவையும் அவரது தாயார் ஜமீலாவையும் கைது செய்து விசாரிக்கும்படி ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் வித்ஜா. இவர் தற்போது ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன், இவர் நடிகர் ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், பண மோசடி செய்துவிட்டதாகவும் புகார் கொடுத்தார்.
மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆர்யாவிடம் விசாரணை ஆர்யாவிடம் விசாரணை இந்த வழக்கை தற்போது சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் இது குறித்து நடிகர் ஆர்யாவிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். ஆர்யா நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார்.

12 மணி நேரம் வேலை, 3 நாட்கள் விடுமுறை; குறையும் மாத சம்பளம் : அக்டோபரில் அமலுக்கு வருகிறது ஒன்றிய அரசு புதிய விதி!!

 தினகரன் : டெல்லி : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது.
இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஊதியக் குறியீடு சட்டம் 2019
*ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாள்களுக்கு 48 மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
புதிய மாற்றங்களில் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதி அப்படியே இருக்கும்.
மாறாக ஒரு நாளுக்கான வேலை நேரம் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மீதமிருக்கும் 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். ஏனெனில் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது.

இரண்டு மாடிக்கு மேலுள்ள கட்டடங்களில் லிஃப்ட் கட்டாயம்!

 மின்னம்பலம் : புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் இரண்டு அடுக்குகளுக்கு மேல் இருந்தால் லிஃப்ட் வசதி கட்டாயம் அமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(செப்டம்பர் 1) மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கேற்ப உட்கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் வரையறுக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இரண்டு அடுக்குகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் லிஃப்ட் (Lift) உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

சென்னை கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே.. மோதிக்கொண்ட மாணவர்கள்.. ரயில் நிலையங்களில் பரபரப்பு

  Vigneshkumar -  Oneindia Tamil :  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கொரட்டூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன.
முதல் அலை குறைந்த போது, சில காலம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இருப்பினும், 2ஆம் அலை ஏற்பட்டதால், உடனடியாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன
இந்நிலையில், தற்போது கொரோனா 2ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது.
இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு அறிவித்திருந்தது. அரசு உத்தரவின்படி இன்று (செப். 1) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

புதன், 1 செப்டம்பர், 2021

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் யாரை கொல்கிறார்கள்? அதிர வைக்கும் கள நிலவரம். தாலிபன்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட அவர்கள் கொலை செய்வதை நிறுத்தவில்லை"

யோகிதா லிமாயே -     பிபிசி நியூஸ், காபூலில் இருந்து...:   இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போது, தாங்கள் 1996-இல் இருந்ததை விட மிதவாதிகள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்க தாலிபன்கள் முயன்றார்கள்.
மேலை நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர், ஆப்கானிஸ்தானின் அரசுப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாக அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள். காபூலுக்குள் தாலிபன்கள் நுழைந்த பிறகு வியக்க வைக்கும் வகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்
தாலிபன்களின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித். அதிலும் மன்னிப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால் தாலிபன் தலைவர்களிடமிருந்தும், செய்தித் தொடர்பாளர்களிடமிருந்து வரும் அறிவிப்புகளுக்கு நேர் எதிராக உண்மை நிலவரம் இருக்கிறது. இதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

மேலும் ஒரு சைகோ பெண் கைது ... சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த கள்ள காதலி.

Also arrested is a psycho girl ... Illegal girlfriend who warmed the boy's penis.

tamil.asianetnews.com  0 Ezhilarasan Babu  : 8 வயது சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த தந்தையின் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். எதற்காக கொடூமை படுத்தானார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 வயது சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த தந்தையின் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். எதற்காக கொடூமை படுத்தானார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு  (35 ) அவரது மனைவி ஈஸ்வரி, இவர்களுக்கு  சித்தார்த் (10) நித்திஷ்( 8) ஆகிய இரு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் தாயை இழந்த குழந்தைகள் அவர்களுடைய தந்தையுடன் வசித்து வருகின்றனர்.
இதனிடையே அதே பகுதியை சேர்ந்த வேணி என்ற பெண்ணுடன் சேட்டுக்கு கள்ள தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது வேணி அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சேட்டு உடன் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.

வரதட்சிணை கொடுமை.. புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை.. கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை

வரதட்சிணை கொடுமை.. புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை.. கணவர், மாமியாருக்கு 10  ஆண்டு சிறை | Chennai Magila court delivers a verdict for 2 for torturing  newly married girl - Tamil Oneindia

  Vishnupriya R -  Oneindia Tamil News : சென்னை: வரதட்சணை கொடுமை காரணமாக புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கும், மாமியாருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கிண்டி சதானிபேட்டையைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்பவருக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த 3 மாதத்தில் இருந்து வரதட்சணை கேட்டு சுகன்யாவை, பார்த்திபனும், அவரது தாய் பத்மாவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த சுகன்யா 2012 பிப்ரவரி 20ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன், பத்மா ஆகியோரை கைது செய்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார்! – முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார்! - முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

விகடன் - பிரேம் குமார் எஸ்.கே. :  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்!
 மாரடைப்பு ஏற்பட்டதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாள்களாவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவரின் மறைவுக்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பெருங்குடி தனியார் மருத்துவமனைக்குச் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ் மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் ஓ.பி.எஸுக்கு ஆறுதலும் தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலினும் மருத்துவமனை வந்து ஓ.பி.எஸுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் அதிமுக எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.   உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஓ.பி.எஸ் மனைவி விஜயலெட்சுமியின் உடல், ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு இன்று மதியம் 2 மணிக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
விகடன் .com

வேலை வாங்கி தருவதாக ரூ. 76 லட்சம் மோசடி; முன்னாள் அமைச்சர் சரோஜா மீது உறவினர் குற்றச்சாட்டு

 நக்கீரன் - இளையராஜா  :  சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 76.50 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொண்டு மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது அவரது உறவினர் ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த சரோஜா (மருத்துவர்) அதிமுகவின் மகளிர் அணி இணை செயலாளராக இருக்கிறார். கடந்த 2016 & 2021 வரை  அதிமுக ஆட்சியின்போது ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று, தமிழக சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார்.
தேர்தலையொட்டி, சொந்த ஊரைவிட்டு ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினார். மீண்டும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார்.

குடிசை மாற்று வாரியம் என்பது 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

 கலைஞர் செய்திகள் : “இனி குடிசை மாற்று வாரியம் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
'தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
'தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய மானியக் கோரிக்கைகளில் குடிசை மாற்று வாரியமும் இணைந்திருக்கிற காரணத்தால், அது சம்பந்தமாக ஓர் அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்.

கே.டி. ராகவனிடம் வீடியோ காலில் பேசிய அந்த பெண் எனது மனைவி என்று ஒருவர் அளித்துள்ள பேட்டி வைரலாகியுள்ளது.

tamil.samayam.com   தமிழக பாஜக முன்னாள் பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதற்கிடையில் அண்ணாமலை, பாஜகவில் பெண்களுக்கு அநியாயம் நடக்கிறது அதனை நான் வெளிப்படுத்த தைரியம் இல்லை என்று பேசிய ஆடியோவும் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
முன்னதாக மதன் என்பவரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், கே.டி. ராகவன் பாலியல் செய்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்க அவருடன் முகம் ப்ளர் செய்யப்பட்ட பெண் வீடியோ காலில் இருக்கிறார்.
இருவரும் பாலியல் செய்கையில் ஈடுபடுவதும், கே.டி. ராகவன் பூஜை அறையில் இருந்துகொண்டே அந்த பெண்ணிடம் ஆடைகளை அகற்றுமாறு கூறும் செய்கைகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஒரே வீட்டுல தான் இருந்தோம்'... 'ஆனா தாம்பத்திய உறவு மட்டும் நடக்கல'... 'கோர்ட்டுக்கு போன தம்பதி'.

 tecno.dailyhunt.in : தங்கள் திருமணம் செல்லாது என்று அறிவிக்குமாறு கோரி தம்பதிகள் நீதிமன்றத்தை நாடினார்கள்.
சீக்கிய பெண் ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மேற்படிப்பிற்காகக் கனடா வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு சீக்கிய வாலிபருடன் அவருக்குக் காதல் மலர்ந்துள்ளது.
இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் வாழ விரும்பியுள்ளார்கள். ஆனால், திருமணத்துக்கு முன் ஒரே வீட்டில் வாழ அவர்களது மதம் அனுமதிக்காது என்பதால், அரசு அலுவலகம் ஒன்றில் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.
ஆனால் அவர்களால் தாம்பத்திய உறவை மேற்கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் மத வழக்கம்.
அதாவது அவர்கள் சீக்கிய முறைப்படி குருத்துவாரா ஒன்றில் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே அவர்கள் தாம்பத்திய உறவு கொள்ளமுடியும்.

கேரளாவில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் - கர்நாடக அரசு முடிவு

கேரளாவில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் - கர்நாடக அரசு முடிவு

  மாலைமலர் :பெங்களூரு,  கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 19,622 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவியவர்களில் 2,09,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் இதுவரை 20,673 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கேரளாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கேரளாவில் இருந்து கர்நாடகா வருபவர்கள் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கட்டாய தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கைகளில் சிக்கிய போர் விமானங்கள், ராட்சத ஹெலிகாப்டர்கள், இயந்திர துப்பாக்கிகள்

தாலிபன்களிடம் எத்தனை விமானங்கள் இருக்கின்றன

BBC : கந்தஹார் விமான நிலையத்தில் அமெரிக்காவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறப்பதை தாலிபன்கள் பார்த்துக்கொண்டிருப்பதை சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஒன்று காட்டுகிறது. அது நான்கு இறக்கைகளை உடைய ப்ளேக் ஹாக் ஹெலிகாப்டர்.
தாலிபன்கள் இனியும் வெறுமனே ஏகே ரக துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு டிரக்குகளில் வலம் வரும் ஒரு சாதாரண குழுவல்ல என்கிற செய்தியை, அது உலகுக்கு உணர்த்துகிறது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி காபூல் தாலிபன்களிடம் வீழ்ந்ததில் இருந்து தாலிபன்கள் அமெரிக்காவின் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை படமெடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சிலரை முழு கை உடைகளோடு சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. அவர்களையும், மற்ற உலக நாடுகளின் சிறப்பு ஆயுதப் படையினரையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.  அவர்களிடம் நீண்ட தாடியோ, பாரம்பரியமான சல்வார் கமீஸோ, துருப்பிடித்த ஆயுதங்களோ இல்லை. அவர்கள் தங்களின் பணிக்கும் பண்புகளுக்கும் ஏற்றார்போல் இருந்தனர்.

சட்டமன்றத்தை நோக்கி திடீர் விநாயகர் ஊர்வலம்!

சட்டமன்றத்தை நோக்கி திடீர் விநாயகர் ஊர்வலம்!
மின்னம்பலம்  : தமிழ்நாடு அரசு கொரோனா பரவலைக் காரணமாக வைத்து பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை நிறுவவும், அவற்றை கரைக்கவும் தடையையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
நேற்று இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்து முன்னணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடைகளை மீறி விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்டு 31) தமிழக சட்டமன்றத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்து கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே தர்ணா செய்தனர்.
அவர்களை கைது செய்து சாலையை க்ளியர் செய்த கொஞ்ச நேரத்தில் வாலாஜா சாலை மீண்டும் பரபரப்பானது. இன்று பகல் 12.30 மணியளவில் திடீரென வாலாஜா சாலையில் விநாயகர் சிலைகளைத் தூக்கிக் கொண்டு ஒரு குழுவினர் கூட்டமாக வர போலீசார் பதற்றம் அடைந்தனர்.

போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

 மாலைமலர் :சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் வறுமையின் காரணமாக இளைஞர்களை வைத்து போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சென்னை:   சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ‘தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-
இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து 29.8.2021 வரை தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 11,247 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களிடம் இருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கேரளாவில் அதிகரிக்கும் கரோனா- தமிழகம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுமா?

 hindutamil.in : கேரள மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அங்கிருந்து தமிழகத்துக்கு ரயில்மூலமாக வருபவர்களால் தமிழகத்தில் கரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக இயக்கப்படும் ரயில்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், கடந்த ஒருவாரமாக தினசரி கரோனா தொற்றுபாதிப்பு சுமார் 30 ஆயிரமாகஉள்ளது. அங்கு கரோனா பரிசோதனை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில், தொற்று உறுதியாகும் வீதம் 19.67 சதவீதமாக உள்ளது. கேரளாவில் நேற்றுமுன்தின நிலவரப்படி மொத்தம் 2.12 லட்சம் பேர் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் மட்டும் தலா 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக எல்லையோரத்தில் உள்ள மாவட்டமான பாலக்காட்டில் மட்டும் நேற்று முன்தின நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 15,680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வடிவேலு பேட்டி .. தமிழ் திரைவானின் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் வடிவேலு


May be an image of 1 person and text that says 'tamilsms.i Google இதத்தான் இவளவு நேரமா டைப் பண்ணினியா பக்கி...'

vadvie .hindutamil.in : ரெட் கார்ட் நீக்கம் குறித்து வடிவேறு கூறுகையில், இது தனக்கு மறுபிறவி என்று தெரிவித்துள்ளார்.
’இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின்போது ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் விதித்தது. இதனால் வேறு எந்தப் படத்திலும் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் பிரச்சினை தொடர்பாக ஷங்கர் - வடிவேலு இருவருக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
தற்போது இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிந்து, வடிவேலுவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை நீக்கியது தயாரிப்பாளர் சங்கம். இதனால் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயாராகிவிட்டார். இந்தத் தகவல் வடிவேலு ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

குழந்தை சித்ரவதை: தாய் போலீஸிடம் வெளியிட்ட அதிர்ச்சி காரணங்கள்

குழந்தை சித்ரவதை
BBC :விழுப்புரத்தில் பெற்ற தாயே தனது குழந்தையை அடித்து சித்ரவதை செய்யும் காணொளி வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், தந்தை கொடுத்த புகாரின்பேரில் அந்த தாய் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த குழந்தையை சித்ரவதை செய்த துளசி என்ற பெண் தனது கணவரையும் குழந்தைகளையும் கடந்த 40 நாட்களுக்கு முன்பே பிரிந்து தனது தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், குழந்தையை துளசி சித்ரவதை செய்யும் காணொளி வைரலான நிலையில், செஞ்சி அனைத்து மகளிர் நிலைய காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படையினர் துளசியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி அருகே உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
அங்கிருந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு துளசி அழைத்து வரப்பட்டார். அவரிடம் தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.   பெற்ற குழந்தையை சித்ரவதை செய்யும் அளவுக்கு துணிந்த துளசி, மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அரிய விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில், அவருக்கு மனநல கோளாறு இல்லை என்று மருத்துவர்கள் சான்று அளித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி.. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தடை.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு
By Vigneshkumar  - e Oneindia Tamil News  :  சென்னை: தமிழ்நாட்டில் வரும் செப் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
முதலில் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு முதல் இரண்டு வாரங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து வரும் செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதில் பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும் அதன் கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பேருந்துகளில் மாணவர்களுக்கு இலவசப்பயணம் ... செப்டம்பர் 1 முதல்

 மின்னம்பலம் : செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாணவர்கள் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.
எனவே கல்வி நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சீமான் பாஜகவின் பி.டீம் : கே.டி.ராகவன் விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

tamil.indianexpress.com : பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன் சர்சசை குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமானுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்
பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் குறித்து சர்ச்சை வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவியது. பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்த கே.டி.ராகவன், தமிழக பாஜகவில் தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் கட்சியிலும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும். இந்த வீடியோ முழுவதும் சித்தரிக்கப்பட்டவை. இந்த பிரச்சனையை சட்டப்படி சந்திப்பபேன் தர்மம் வெல்லும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ வெளியான யூடியூப் தளம் முடக்கப்பட்ட நிலையில், வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஆதிதிராவிட பெண்களுக்காக ரூ.10.04 கோடியில் விடுதி!

ஆதிதிராவிட பெண்களுக்காக ரூ.10.04 கோடியில் விடுதி!

மின்னம்பலம் :ஆதிதிராவிட மாணவ, மாணவியர் மற்றும் பணிபுரியும் மகளிருக்காக ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் இன்று (ஆகஸ்ட் 30) திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோயம்புத்தூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் நகரில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி,
மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் தலா 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி மாணவர் மற்றும் பள்ளி மாணவியர் விடுதிகள், மயிலாடுதுறையில் தலா 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி,
விருதுநகர் மாவட்டம், சோழபுரத்தில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதி,

சென்னை ஓஎம்ஆர் சாலையில் 4 டோல்கேட்களில் இன்று முதல் இலவச பயணம்.. வாகன ஓட்டிகள் ஹேப்பி!

போராட்டங்கள்
Veerakumar -tamil.oneindia.com  : சென்னை "ஓஎம்ஆர்" சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் கிளைகள் அமைத்துள்ளன. சென்னையின் ஐ.டி. ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது ஓஎம்ஆர் ரோடு.இந்த நிலையில்தான், மத்திய கைலாஷில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி கிராமம் வரை 20.1 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப் பாதைகள் அமைக்கப்பட்டன. 5 இடங்களில் டோல் வசூல்.. இந்த சாலை நவீன வசதிகளுடன் பளபளக்கிறது. இரவை பகலாக்கும்படியான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வசதி கொடுத்த பிறகு கட்டணம் வசூலிக்காமலா? ஓ.எம்.ஆர். சாலையில், பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை ஆகிய பகுதிகளில் 5 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தாலிபன்களை அலறவிடும் கோராசன் பயங்கரவாதிகள் யார்?!’ – அவர்களின் பின்னணி என்ன?

ஐ.எஸ்.ஐ.எஸ்.கே அமைப்பு

விகடன்  :  ஷரியத் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே ஒற்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த இரண்டு அமைப்புகளும் சித்தாந்த ரீதியாகப் பிணைக்கப்பட்டிருந்தாலும், போர்க்களத்தில் பகையாளிகளாகவே இருக்கின்றன.
மேற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் முழுமையாகத் தாலிபன்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டதை அடுத்து, உயிர் பயத்தில் அங்கிருந்து வெளியேற ஆப்கன் மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
`யாரையும் துன்புறுத்த மாட்டோம். பெண்கள் ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு சுதந்திரமாக இயங்கலாம். யாரையும் பழிவாங்க மாட்டோம்.
அனைவருடனும் நட்புடன் பழகவே விரும்புகிறோம்!’ என்று தாலிபன் தரப்பில் தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கும் போதிலும், அவர்களின் முந்தைய ஆட்சியில் நடந்த கோரச் சம்பவங்கள் ஆப்கன் மக்களின் மனதில் பதிந்துவிட்டதால், அப்கனிலிருந்து வெளியேறி பிற நாடுகளுக்குத் தஞ்சமடைய அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.
அதன் காரணமாக, தலைநகர் காபூல் விமானநிலையம் 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படுகிறது.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் …. அமரர் அமிர்தலிங்கம் 26 August 1927 – 13 July 1989

1981 மதுரை ஐந்தாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டை கலைஞர் புறக்கணித்தார். அம்மாட்டுக்கு தலைமை தாங்கிய முதல்வர் எம்ஜியார் திரு அமிர்தலிங்கம் கலைஞர் கருணாநிதிக்கு ஆதரவானவர் என்ற எண்ணத்திலோ என்னவோ, மாநாட்டு தொடக்கநாளில் சம்பந்தமேயில்லாமல், அமிர்தலிங்கம்மீது சற்று காட்டமாகவே பேசினார் மாநாடு நடந்த ஆறு தினங்களும் எம்ஜியார் அமிர்தலிங்கம் மீது கொட்டிய தரமற்ற சொற்களே மாநாட்டு நிகழ்வுகளுடன் இணைந்த ஒரு பேசுபொருளாகவே தமிழ்நாடு முழுவதும் இருந்தது.
May be a black-and-white image of 1 person, sitting and indoor
அன்னை இந்திரா காந்தி - அமரர்கள் திரு திருமதி அமிர்தலிங்கம்

Subramaniam Mahalingasivam  :  அமிர்தலிங்கம் என்ற அரசியல் சொத்து! மந்திர உரை செய்த மாயம்
இலங்கையில் வாழ்கின்ற இரண்டு தேசிய இனங்களுமே ஒரே நதிமூலத்தையே கொண்டிருந்தாலும் அதாவது, இலங்கையின் ஆதி குடிகளான இயக்கர், நாகர், வேடர் என்ற இவர்களைத் தவிர்ந்த, சிங்களவர், தமிழர் என்ற இரு இனத்தவருமே இந்தியாவிலிருந்தே குடியேறியிருந்தபோதிலும்,
இலங்கையின் சரித்திரம் சிங்கள மக்களின் சரித்திரமாகவே எழுதப்பட்டது. மகாவம்சம்தான் இலங்கையின் ‘பைபிள்’போலானது.  
சோல்பரி அரசியலமைப்பில் பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த வேளையில்தான் இலங்கையில் எழுதப்படாது போன இலங்கைத் தமிழர்களின் சரித்திரம்பற்றிய ஒரு விழிப்பு எழத் தொடங்கியது.
அத்தோடு, தங்களுடைய வாழ்வுக் காலத்தில் தமிழ் இனத்தின் மொழி, பிரதேசம், சமூகம், கலாசாரம். கல்வி, பொருளாதாரம் சார்ந்த ஓர் அரசியல் விழிப்புணர்வும் அப்போதுதான் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டது; ஏற்படுத்தப்பட்டது.

அதிமுக ஆட்சியின் பத்தாண்டுகளில் தமிழ்நாடு என்ன நிலைமையில்....

May be an image of text that says 'The price factor The cost of coal constituted 95.54% to 98.41% of the total cost of generation of Tangedco during 2014-19 Particulars Targeted thermal power generation (million units) 31,333 32,158 2014-15 2015-16 2016-17 2017-18 2018-19 31,064 29,892 32,144 Actual thermal power generation (million units) Cost of coal (in crores) 27,380 28,375 25,009 22,869 9,151 Cost of generation of power (in crores) 25,978 8,004 7,436 9,436 8,201 6,613 6,921 7,556 Percentage of coal cost to the total cost of generation 8,369 8,666 96.98 97.6 98.41 95.54 96.57'
May be an image of text that says 'Stock as on August 23, 2021 (In '000 tonnes) Indigenous coal 469.21 Thermal station North Chennai Mettur I Imported oal 13.22 92.71 Stock (in days) Mettur station Il 23 0 Status of stock* 99.86 Tuticorin 6 0 111.41 17 Critical 5 Critical *As per the Central Electricity Authority of India norms, coal stock is critical if it lasts for less than 7 days and supercritical is less than 4 days'

Muralidharan Pb :  நாடு நாசமாய் போனது இந்த பத்தாண்டுகளில் என்பது ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது.
மின்சார வாரியம் வாங்கிய நிலக்கரி லட்சக்கணக்கான டண் மாயமாய் காணாமல் போனது நாம் அண்மையில் அறிந்ததே.
கேடுகெட்ட மின்சாரத் துறை அமைச்சர் பி தங்கமணி அவர்கள், எதை வெட்டி முறித்தார் எனத் தெரியவில்லை, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒன்றிய அரசிடம் நிலக்கரி பற்றாக்குறையாக உள்ளது பற்றி முறையிட்டாராம். பிறகு துறையில் கவனம் செலுத்தவில்லையாம்!!. பெருந்தொற்று மற்றும் கட்சிப் பணிகள் அதிகமாக இருந்ததாம், அதனால் ஆய்வு செய்ய போகவில்லையாம். அதாவது ஏப்ரல் மாதம் தேர்தலுக்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே களப்பணியில் ஈடுபட்டாராம் கோல்ட்மணி. அதனால் விவரம் தெரியாதாம். 'அப்பாவி'
ஒருத்தர் என்னடான்னா ஒன்றரை டண் பால்கவோ தின்னாராம், இவர் நிலக்கரிக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். என்னங்கய்யா கலர் கலரா ரீல் விடறீங்க?

பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் அவலநிலை!

soodram L  பாகிஸ்தானின் சனத்தொகையில் 95 சதவீதமானவர்கள் முஸ்லிம்கள். ஏனைய 5 சதவீதமானவர்கள் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிஸ், அஹ்மதிஸ் மற்றும் சில பிரிவுகளாவர். அஹமதியர்கள், இஸ்லாத்தின் அடிப்படையிலிருந்து விலகும், மிர்ஸா குலாம் அஹமட்டின் போதனைகளைப் பின்பற்றுவதால் அவர்கள், முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அத்துடன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.
அண்மைய கணக்கெடுப்புகளின் அடிப்படையில், சிறுபான்மை சனத்தொகையில் 92 சதவீதமானவர்கள் இந்துக்களும் கிறிஸ்தவர்களுமாவர்.
பாகிஸ்தானின் மொத்த சனத்தொகையில் சுமார் 3.6 மில்லியன், இந்துக்கள் 1.7 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 1.3 சதவீதமும் அடங்குவர். ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களாவர்.
இந்துக்களும் கிறிஸ்தவர்களும் அவர்களின் மத நம்பிக்கை காரணமாக பாரபட்சமாகக் கவனிக்கப்படும் அவல நிலையில் உள்ளனர். முக்கிய பொது நிறுவனங்களில் இச்சமூகங்களின் குறைந்த அளவிலான அல்லது பூஜ்ய பிரதிநிதித்துவத்தால் சிறுபான்மை மதத்தவர்களின் கவலை அதிகரிக்கிறது.

பழங்குடி இளைஞரை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் - மருத்துவமனையில் இறந்தார்

வாகனத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட கண்ஹையா லால்

  சுரை நியாஜி -     பிபிசி இந்திக்காக  :  மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிறிய பிரச்சனைக்காக பழங்குடி இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு, வாகனத்தோடு கட்டி இழுத்துச் செல்லப்பட்டார்.
இதனால் ஏற்பட்ட பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காணொளி ஆகஸ்ட் 28ஆம் தேதி பரவத் தொடங்கியது.
இது தொடர்பாக எட்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்களில் இரண்டு முக்கிய நபர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்.
"கண்ஹையா லால் பில் என்கிற பழங்குடி இளைஞர், வேறு சிலரோடு தன் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது இருசக்கர வண்டி குஜ்ஜர் சாதியைச் சேர்ந்த ஒருவர் மீது மோதியது.

ஆப்கன் - காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்

  Vigneshkumar -   Oneindia Tamil News :  காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் அங்குப் பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆப்கனாஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்து அங்கு மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கனில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இதனால், காபூல் விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரணக்கணக்கன மக்கள் கூடியுள்ளனர்.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎஸ் பயங்கவாதிகள் அங்கு நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில் ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அங்குப் பல மடங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இது ராக்கெட் தாக்குதலாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் அருகே தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி -

BBC : ஒரு தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி – தாயை பிடிக்க தனிப்படைகுழந்தை துன்புறுத்தப்படும் காணொளி ஆறு மாதங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது
விழுப்புரத்தில் தாயே தனது குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்பாக விழுப்புரம் போலீசார் குழந்தையின் தாய் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பெண் தற்போது ஆந்திர மாநிலத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90s Kids ஏன் வலதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்படுகின்றனர்

Kandasamy Mariyappan  :  90s Kids ஏன் வலதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்படுகின்றனர்.
காரணம் நம்மிடம் இன உணர்வு (Ethnic pride), மொழி உணர்வு (Linguistic pride), கலாச்சார உணர்வு (cultural pride) குறைந்து விட்டது.
இந்திய ஒன்றியத்தில் விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தெற்கே குறிப்பாக தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய இன உணர்வு போராட்டம் நடைபெற்றது.
1. தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய மருத்துவராகவும் சென்னையில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனைக்கு உரிமையாளராகவும் உருவாகியிருக்க வேண்டிய டாக்டர். நடேசன் (முதலியார்) அவர்கள் இன உணர்வால் 1912ல் திராவிட மக்களுக்காக, உரிமைகள் சார்ந்த சொத்துதான் அவசியம் என்று தனது பயணத்தை, உரிமை போராட்டத்தை கையில் எடுக்கிறார்.
2. தென்னிந்தியாவின் பிரபல மருத்துவராகவும் சென்னையில் மற்றும் ஒரு மிகப்பெரிய மருத்துவமனைக்கு உரிமையாளராகவும் உருவாகியிருக்க வேண்டிய டாக்டர். மாதவன் (நாயர்) திராவிட இன உணர்வின் காரணமாக 1917ல் தனது வாழ்க்கையை இன உணர்வுக்காக அர்ப்பணிக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் திராவிட இன நிலைப்பாட்டை பிரிட்டிஷ் அரசிடம் எடுத்து கூறுவதற்காக இங்கிலாந்து சென்ற டாக்டர். மாதவன் (நாயர்) அங்கே இறந்து விடுகிறார்.

நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி – “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்”

வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி

  ச. ஆனந்தப்பிரியா  -     தமிழுக்கு பேட்டி  "  
படக்குறிப்பு,வைகைப் புயலுக்கு ஏற்பட்ட இம்சை முடிவுக்கு வந்தது.
நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட ‘ரெட் கார்ட்’ நீக்கப்பட்டு, தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் படங்களில் நடிக்க இருப்பது, மீம் கிரியேட்டர்கள், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ பிரச்னை என பலவற்றை குறித்து நடிகர் வடிவேலு பிபிசி தமிழிடம் பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை கொடுக்கப்பட்டது ஏன்?
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க ‘ரெட் கார்ட்’ கொடுக்கப்பட்டு இருந்தது.
சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006-ல் வெளியான படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. முதல் முறையாக நடிகர் வடிவேலு முழு நீள கதையில் நாயகனாக, இம்சை அரசன், உக்கிரபுத்திரன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இதன் இரண்டாம் பாகத்திற்குமான எதிர்ப்பார்ப்பும் இருந்தது. இந்த நிலையில்தான் இதன் இரண்டாம் பாகம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

தமிழ் சினிமா: நீண்ட காலம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகள் சந்திக்கும் சவால்கள் என்ன?

திரையரங்கு
BBC :“கொரோனா பொது முடக்கம் காரணமாக பல்வேறு துறைகளும் மிகுந்த பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதேபோல் திரைத்துறையும் திரையரங்கங்களும் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. திரையரங்க உரிமையாளர்களுக்கும், அதில் பணிபுரிபவர்களுக்கும் கோவிட் பரவல் கடினமான காலகட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலுள்ள திரையரங்கங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், தற்போது திரையரங்கங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
வரும் நாட்களில் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்போது, திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் பகிர்ந்தளித்த இலங்கையர்

இலங்கை ரூபாய்

BBC :  இலங்கையில் கோவிட் தொற்றின் தாக்கம் தற்போது வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் எதிர்வரும் 30ம் தேதி வரை நாட்டில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பெருமளவிலான மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வருமானத்தை இழந்து, வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரசாங்கம் தற்போது 2,000 ரூபா வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தனியொரு நபர், தனது சொந்த நிதியில் ஒருவருக்கு தலா 1,000 ரூபா வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
இதன்படி, இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, இரண்டரை கோடி ரூபாவை இதற்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறுகிறார் அவர்.
கொழும்பு புறநகர் பகுதியான களனி பகுதியைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா இந்த நிதிக் கொடையை வழங்குகிறார்.

மைசூர் மாணவி பலாத்காரம்: நால்வர் கைது

 தமிழ் முரசு  : அவிநாசி: கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த சேயூரைச் சேர்ந்த நான்கு பேர் கைதாகி உள்ளனர்.
மைசூரு நகரில் எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருந்த 23 வயது மாணவி ஒருவர், தன் ஆண் நண்பருடன் கடந்த 24ஆம் தேதி இரவில் சாமுண்டி மலையடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் அடங்கிய கும்பலால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். தடுக்க முயன்ற ஆண் நண்பரும் தாக்கப்பட்டார்.
இருவரும் மைசூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்று மாநிலம் முழுதும் மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.