புதன், 1 செப்டம்பர், 2021

கே.டி. ராகவனிடம் வீடியோ காலில் பேசிய அந்த பெண் எனது மனைவி என்று ஒருவர் அளித்துள்ள பேட்டி வைரலாகியுள்ளது.

tamil.samayam.com   தமிழக பாஜக முன்னாள் பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதற்கிடையில் அண்ணாமலை, பாஜகவில் பெண்களுக்கு அநியாயம் நடக்கிறது அதனை நான் வெளிப்படுத்த தைரியம் இல்லை என்று பேசிய ஆடியோவும் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
முன்னதாக மதன் என்பவரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், கே.டி. ராகவன் பாலியல் செய்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்க அவருடன் முகம் ப்ளர் செய்யப்பட்ட பெண் வீடியோ காலில் இருக்கிறார்.
இருவரும் பாலியல் செய்கையில் ஈடுபடுவதும், கே.டி. ராகவன் பூஜை அறையில் இருந்துகொண்டே அந்த பெண்ணிடம் ஆடைகளை அகற்றுமாறு கூறும் செய்கைகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் கே. டி. ராகவனுடன் வீடியோ கால் பேசிய அந்த பெண் தனது மனைவிதான் என்று செங்கல்பட்டைச் சேர்ந்த பிரியதர்ஷன் என்பவர் இணைய வழியில் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ப்ளர் செய்யப்பட்ட பெண்ணின் முகம் சரியாக தெரியாத போது அவர் உங்களுடைய மனைவி என்று எப்படி கூறுகிறீர்கள் என்று ப்ரியதர்ஷனிடம் பத்திரிகையாளர் கேட்டபோது அவர் அளித்த பதில்கள் அதிர்ச்சியை தந்தது.
​ப்ரியதர்ஷன் கூறியதாவது

வழங்கறிஞராக இருந்த எனது மனைவியை பாஜகவில் இணையுமாறு ஆசையை தூண்டினார்கள். அவரும் அதன்படி மோடியின் பிறந்தநாளன்று பாஜகவின் இணைந்தார் அப்போது அவருக்கு கலை, கலாச்சார பிரிவில் மாவட்ட செயலாளராக கே.டி. ராகவன் பொறுப்பு கொடுத்தார். அன்றைய தினமே கே. டி. ராகவன் எனது மனைவிக்கு அவரது செல்போன் எண்ணையும் கொடுத்தார். சில நாட்களாக இருவரும் மெசேஜ் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 17ம் தேதி எனது மனைவி அரை நிர்வாணத்துடன் கே.டி. ராகவனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்.
​சடாரென வந்த கார்

நான் திடீரென வீட்டுக்குள் வந்ததும் அதை பார்த்தவுடன் மனைவியை அடித்து கண்டித்தேன். அந்த விஷயத்தை என் மனைவி கே.டி. ராகவனுக்கு தெரியப்படுத்தினார். உடனே எனது வீட்டுக்கு ஒரு கார் வந்தது. அதில் ஏறி புறப்பட்ட எனது மனைவி மகளிர் காவல் நிலையத்தில் என் மீது வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துவிட்டார். இது எல்லாமே கே.டி. ராகவனின் அறிவுறுத்தலின் தான் நடக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். மறுநாள் எனது வீட்டிக்கு வந்த போலீசார் என்னை விசாரிக்க வேண்டும் என்றுகூறி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
​தலித் பெண்கள் சூறையாடல்

போலீசார் என்னை விசாரித்த போது, பாஜகவில் தலித் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதையும், எனது மனைவியும் அதில் சிக்கிக்கொண்டார் என்றும் கூறினேன். உடனே, என்னை சமாதானப்படுத்திய போலீசார் என்னை மனைவியுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தனர். ஆனால், எனது மனைவி என்னை வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். பாஜகவில் உள்ள உயர் சமூக நிர்வாகிகள் தலித் பெண்களுக்கு பணத்தாசையை தூண்டி அவர்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். இது ரொம்ப நாட்களாகவே நடந்து வருகிறது. என் மனைவியும் அதில் சிக்கிவிட்டார். என் மனைவியின் வீடியோக்களை காட்டி இப்போது கே.டி. ராகவன் மிரட்டி வருகிறார் என்று கூறிய பிரியதர்ஷன் நானும் என் மனைவியும் பட்டியிலனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் என் மனைவியை திட்டமிட்டு அவருக்கு பொறுப்பு கொடுத்து கே.டி. ராகவன் நினைத்ததை அடைந்து விட்டதாக அவர் கூறினார். மேலும் பாஜகவின் பெரிய நிர்வாகிகள் பலர் இப்படி கட்சியில் உள்ள தலித் பெண்களை இச்சைக்கு மட்டுமே பயன்படுத்தி அவர்கள் சீரழித்து வருவதாகவும், இதுகுறித்து நான் சட்டப்படி அணுகுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக