வெள்ளி, 3 செப்டம்பர், 2021

திமுக-வுக்கு இது நல்லதல்ல!' - கொதிக்கும் கல்வியாளர்கள்

May be an image of 1 person
May be an image of 1 person
May be an image of 1 person, sitting and indoor

vikatan  :  `திமுக-வுக்கு இது நல்லதல்ல!' - கொதிக்கும் கல்வியாளர்கள்:
 புதிய கல்விக்கொள்கைக்கு
 துணை போகும் அரசு?
எம்.புண்ணியமூர்த்தி
சாதி ஆணவக் கொலையும் புதிய கல்விக் கொள்கையும் சாதி ஆணவக் கொலையும் புதிய கல்விக் கொள்கையும்
கல்வி  ``எதிர்க்கட்சியாக இருந்தபோது புதிய தேசிய கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்த தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய கல்விக் கொள்கையின் கூறுகளை ஆதரிப்பது ஏமாற்றமளிக்கிறது. இது தி.மு.க-வுக்கு நல்லது கிடையாது" என்று வெடிக்கிறார் பேராசிரியர் கருணானந்தன்.
``அரசிடம் இல்லாத எந்த விஷயம் தொண்டு நிறுவனங்களிடம் இருக்கிறது? இந்தத் தொண்டு நிறுவனங்களை எதன் அடிப்படையில் அனுமதிக்கிறீர்கள்?" - என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
அகஸ்தியாவுக்கு அனுமதி!


``அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பு, தமிழகம் உட்பட 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்வதுதற்கான பணிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உட்பட 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த ஆண்டும் அதைத் தொடர்வதற்கு அனுமதி கேட்டுள்ளதுடன் திருவாரூர், ஈரோடு, கடலூர், திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் புதிதாக அறிவியல் ஆய்வு மையம் அமைக்கவும் அனுமதி கேட்டுள்ளது.
இது தவிர, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தை இணைய வழியில் கற்றுத் தரவும் அந்த அமைப்பு அனுமதி கேட்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளிகள் திறக்கப் படாததால், அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்குக் கற்பித்தல் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி தரப்படுகிறது. பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு பாதிக்காதவாறு அகஸ்தியா அறக்கட்டளைக்குத் தேவையான ஒத்துழைப்பை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
மேலும், அகஸ்தியா நிறுவனத்தின் அறிவியல் சார்ந்த கற்றல் செயல்பாடுகள், அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்" என்று பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கைதான் கல்வியாளர்களின் இந்தக் கொந்தளிப்புக்கு காரணம்.
ஏனெனில், கற்றல் கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு கூறு. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டபோதே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்த தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த நிறுவனத்துக்கு மீண்டும் அனுமதி தரப்படாது என்று எல்லோராலும் நம்பப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கியிருக்கிறது தி.மு.க அரசு.
கொள்கையிலிருந்து அரசு விலகாது!
இதுகுறித்து நாகப்பட்டினம் எம்.எல்.ஏ-வான முகம்மது ஷாநவாஸ் (வி.சி.க) சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ``இந்தத் தொண்டு நிறுவனம் 20 மாநிலங்களில் `corporate social responsibility' என்ற அடிப்படையில் சேவையாற்றுகிறது. இந்த அரசு எந்தவொரு காரணத்துக்காகவும் கொள்கையிலிருந்து விலகாது. எனவே, யாரும் கவலைப்படத் தேவையில்லை. நானும் இரண்டு பள்ளிகளுக்குச் சென்று பார்வையிட்டேன். இந்தத் தொண்டு நிறுவனம் லேப் ஸ்பான்ஸர் செய்திருக்கின்றனர். அந்த விதத்தில்தான் இந்த நிறுவனம் பயன்படுத்தப்படுமே தவிர, அவர்களுடைய கொள்கையை நுழைப்பதற்கு நாங்கள் எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம்" என்று பதிலளித்துள்ளார்.
`அரசுப் பள்ளி வறுமை அல்ல, பெருமை’ - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சும் எதிர்பார்ப்பும்!
இது தி.மு.க-வுக்கு நல்லதல்ல!
``இந்தப் பதில் ஏற்புடையது கிடையாது" என்று கொந்தளிக்கின்றனர் கல்வியாளர்கள்.
இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் கருணானந்தன், ``தி.மு.க அரசின் இந்த அறிவிப்பு எனக்குப் பெரிய ஏமாற்றமளிக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி என்பது வேறுசில ஊடுருவல்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவர்களுடைய கொள்கையை நுழைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்பது சரியான விஷயமாகத் தெரியவில்லை. ஏனெனில், ஓர் அமைப்புக்கென மறைக்கப்பட்ட நோக்கங்கள் உண்டு, வெளிப்படையான நோக்கங்களும் உண்டு. அகஸ்தியா தொண்டு நிறுவனம் எதற்காக இயங்குகிறது என்பது குறித்த முழு விவரம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், அது தனியார் அமைப்பு. அதில் வலதுசாரி தன்மை அல்லது மதவாத தன்மை உடையவர்கள் இருக்கின்றனர் என்று தகவல் வருகிறது.
அவர்களின் கொள்கைகளை ஊடுருவ விடமாட்டோம் என்கிறார்களே... 24 மணி நேரமும் அவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்களா? அது முடியாத காரியம். அவர்கள் உள்ளே ஊடுருவிவிடுவார்கள். அதன் பிறகு நடக்கப்போகிற விஷயங்கள் நமக்குத் தெரியாது. தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பல இடங்களில் இந்துத்துவ சக்திகள் இப்படித்தான் ஊடுருவியிருக்கின்றன. எனவே, கல்வி விஷயத்தில் நாம் எந்த விதமான ரிஸ்க்கும் எடுக்க முடியாது. ஓர் அரசு மதச் சார்பற்ற கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கல்வித்துறையில் தனியாரை நுழையவிடுவதே தவறு என்று நினைக்கிறேன்.
ஆகையால், இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது மதச்சார்பற்ற கல்விக்குப் பொருத்தமாக இருக்காது. எதிர்காலத்தில் பல ஆபத்துகளை விளைவிக்கும் வழிவகை செய்யும். அகஸ்தியாவோ, அதுபோன்ற அமைப்புகளோ அதனுடைய பின்புலம் என்ன என்பது பற்றி ஒரு தெளிவான அறிக்கை தேவை. அந்த அமைப்பு இதுவரையில் என்னென்ன செய்திருக்கிறது. அதில் இருப்பவர்கள் யார் யார்... அவர்கள் எங்கெங்கெல்லாம் தொடர்பு வைத்திருக்கின்றனர் என்பதெல்லாம் தெரியாமல், திடீரென்று ஓர் அமைப்பு வந்து கல்விச் செயல்பாட்டில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியுமா என்ன?
பேராசிரியர் கருணானந்தன்பேராசிரியர் கருணானந்தன்
`ஒரு தனியார் அமைப்பு வந்து நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்றதும் அதை அனுமதிப்பது புதிய கல்விக்கொள்கைக்கு ஒத்துப்போவது போன்று தோன்றுகிறது. இது தி.மு.க-வுக்கு நல்லதல்ல. தி.மு.க-வுக்கு வாக்களித்தவர்கள் திராவிட இயக்கத்தினுடைய அடிப்படையை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் ஆதரித்தனர். கொள்கை முடிவை அறிவிக்கிறோம் என்று சொல்லிவிட்டு அதை அறிவிக்காமல் இப்படி தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்துவிட்டு பிறகு, என்ன கொள்கை முடிவு எடுக்கப் போகிறீர்கள்? எதையுமே அவசர கோலத்தில் செய்யக் கூடாது. ஆழமான, தெளிவான விவாதங்களுக்குப் பிறகு, எதிர்கால கண்ணோட்டத்துடன் முடிவுகள் எடுக்க வேண்டும். முதலில் அகஸ்தியா வந்துவிட்டது என்று செய்திகள் வருகின்றன. அதற்குப் பிறகு சட்டப்பேரவையில் அனுமதி கொடுத்தோம் என்று சொல்கிறார்கள். பேரவையில் கொள்கை முடிவை அறிவிக்காமல் ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய விஷயத்தை ஏற்றுக்கொள்வதற்காகவா விவாதம் நடத்த வேண்டும். எனவே, இது பெருத்த ஏமாற்றமளிக்கும் விஷயம்" என்றார்.
மக்களுக்குச் செய்யும் துரோகம்
அடுத்ததாக பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம், ``என்.ஜி.ஓ-விடம் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்கின்றனர். இந்த விவகாரத்தில் எங்களுடைய அடிப்படை கேள்வி என்னவென்றால் பள்ளிக் கல்வித்துறையால் ஒரு சேனல் நடத்த முடிகிறது. மேலும், இரண்டு சேனல் நடத்துவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கின்றனர். இப்படியான சூழலில், தொழில்நுட்பத்துக்காக என்.ஜி.ஓ-வைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது? அந்தத் தொழில்நுட்பம் அரசிடம் இல்லையா... அல்லது தொழில்நுட்பம் அறிந்த வல்லுநர்கள் இல்லையா... எது அரசிடம் இல்லை?
பிரின்ஸ் கஜேந்திரபாபு
அரசிடம் இல்லாத ஒன்று தனியாரிடம் இருக்கிறது என்பது அரசுக்கு மிகப்பெரிய தோல்வி. பள்ளிக் கல்வித்துறையால் செய்ய முடியாத விஷயத்தைத் தொண்டு நிறுவனத்தால்தான் செய்ய முடியும் என்று சொன்னால் அதுதான் பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சியா? மக்களுக்கு கல்வி தருகிற பொறுப்பிலிருந்து அரசு கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது என்பதுதான் இதன் பொருள். கல்வி கொஞ்சம் கொஞ்சமாகத் தனியார் வசமாகிக்கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளியை வலுப்படுத்தாமல் தனியாரை வலுப்படுத்துவது மக்களுக்குச் செய்யும் துரோகம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக