சனி, 4 செப்டம்பர், 2021

ரஷ்யாவில் 5000 கி.மீ., பைக் டிராவல் செய்த நடிகர் அஜித்..

5000 கி.மீ.,

tamil.filmibeat.com -By Mari s : சென்னை: வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் முடித்த தல அஜித் அங்கே பைக் டிராவல் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஏற்கனவே ஹைதரபாத்தில் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர் அஜித் சைக்கிளில் ஊர் சுற்றிய புகைப்படங்கள் வைரலானது.இந்நிலையில், ஹெல்மெட் மற்றும் பைக் சூட் அணிந்து கொண்டு அஜித் இருக்கும் புகைப்படங்கள் தல ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளன. கடந்த ஆகஸ்ட்  மாதம் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக இயக்குநர் எச். வினோத், தல அஜித் உள்ளிட்ட வலிமை படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். இரண்டு ஆண்டுகளாக நீண்டு கொண்டே சென்ற வலிமை படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்து படக்குழுவினர் மீண்டும் சென்னைக்கு நேற்று திரும்பினர்.

டிராவல் ஃப்ரீக்கான தல அஜித் ரஷ்யாவையும் ஒரு ரவுண்டு அடித்து விடுவோமே என நினைத்து பைக்கிலேயே சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் ரஷ்யாவில் பைக் டிராவல் செய்துள்ள வேற மாறி தகவல் மற்றும் அதன் புகைப்படங்கள் வெளியாகி தல ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

தல தரிசனம்

தல தரிசனம்

தல அஜித்தின் தரிசனத்திற்காக ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கிடக்கும் நிலையில், ரஷ்யாவை சுற்றி 5 ஆயிரம் கி.மீ., பைக் டிராவல் செய்த நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றன. செம ஹேண்ட்ஸமாக சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலிலேயே நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

சைக்கிள் ஓட்டிய தல

சைக்கிள் ஓட்டிய தல

இந்தியாவில் படப்பிடிப்பில் இருக்கும் போது தல அஜித் சைக்கிள் ஓட்டிய புகைப்படங்கள் தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகின. பைக், கார், சைக்கிள், ட்ரோன் என அனைத்திலும் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் சமையல், போட்டோகிராஃபி மற்றும் தோட்டக் கலையிலும் வல்லவர்.

வலிமை திருவிழா ஆரம்பம்

வலிமை திருவிழா ஆரம்பம்

வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், தல அஜித்தின் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக கசியத் தொடங்கியதில் இருந்தே வலிமை திருவிழா ஆரம்பமாகி விட்டது உறுதியாகி உள்ளது. விரைவில் வலிமை பட டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த ஹாட் அப்டேட்கள் தல ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக