விகடன் - பிரேம் குமார் எஸ்.கே. : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்!
மாரடைப்பு ஏற்பட்டதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாள்களாவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அவரின் மறைவுக்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பெருங்குடி தனியார் மருத்துவமனைக்குச் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ் மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் ஓ.பி.எஸுக்கு ஆறுதலும் தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலினும் மருத்துவமனை வந்து ஓ.பி.எஸுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் அதிமுக எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஓ.பி.எஸ் மனைவி விஜயலெட்சுமியின் உடல், ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு இன்று மதியம் 2 மணிக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
விகடன் .com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக