புதன், 1 செப்டம்பர், 2021

மேலும் ஒரு சைகோ பெண் கைது ... சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த கள்ள காதலி.

Also arrested is a psycho girl ... Illegal girlfriend who warmed the boy's penis.

tamil.asianetnews.com  0 Ezhilarasan Babu  : 8 வயது சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த தந்தையின் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். எதற்காக கொடூமை படுத்தானார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 வயது சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்த தந்தையின் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். எதற்காக கொடூமை படுத்தானார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு  (35 ) அவரது மனைவி ஈஸ்வரி, இவர்களுக்கு  சித்தார்த் (10) நித்திஷ்( 8) ஆகிய இரு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் தாயை இழந்த குழந்தைகள் அவர்களுடைய தந்தையுடன் வசித்து வருகின்றனர்.
இதனிடையே அதே பகுதியை சேர்ந்த வேணி என்ற பெண்ணுடன் சேட்டுக்கு கள்ள தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது வேணி அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சேட்டு உடன் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.

இதனிடையே முதல் மனைவியின் குழந்தைகளான சித்தார்த் மற்றும் நித்திஷ் ஆகியோரை வேணி சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது.

குறிப்பாக நித்தீஷின் முதுகு, கை, கால்கள், பாதம், மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சூடு வைத்து சித்தரவதை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை நித்திஷ் அவருடைய வீட்டில் இருந்து தப்பித்து அருகில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு ஓடி வந்து நடந்ததை கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள், நித்திஷை  காவல் நிலையம் அழைத்து வந்து புகார் கொடுத்தனர். உறவினர் நிஷாந்தி கொடுத்த புகாரின்பேரில்  தந்தையின் கள்ளக்காதலி வேணியை குடியாத்தம் போலீசார் கைது செய்தனர். எதற்காக சூடு வைக்கப்பட்டது என மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நித்திஷின் தந்தை வெளியூரில் வேலை செய்வதால் அவரையும் போலீசார் காவல் நிலையம் வரவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயமடைந்த நித்திஷை மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவனின் உடல் முழுவதும் அவரது தந்தையின் கள்ளக்காதலி சூடு வைத்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விழுப்பரத்தில் கள்ளக் காதலனுக்காக பெற்ற தாயே குழந்தையை அடித்து கொடுமை செய்து கைதாகி உள்ள நிலையில், குடியாத்தத்தில் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக