ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

மைசூர் மாணவி பலாத்காரம்: நால்வர் கைது

 தமிழ் முரசு  : அவிநாசி: கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த சேயூரைச் சேர்ந்த நான்கு பேர் கைதாகி உள்ளனர்.
மைசூரு நகரில் எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருந்த 23 வயது மாணவி ஒருவர், தன் ஆண் நண்பருடன் கடந்த 24ஆம் தேதி இரவில் சாமுண்டி மலையடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் அடங்கிய கும்பலால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். தடுக்க முயன்ற ஆண் நண்பரும் தாக்கப்பட்டார்.
இருவரும் மைசூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்று மாநிலம் முழுதும் மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பலாத்காரம் நடைபெற்ற இடத்தில் செல்போன் டவர் மூலம் கர்நாடக போலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதி சூசைபுரம் கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமி என்பவரது மகன் பூபதி, 28 என்பவரை மைசூரி லிருந்து வந்த போலிசார் கைது செய்து உள்ளனர்.

இந்நிலையில் எஞ்சிய நான்கு பேரையும் கர்நாடகா போலிசார் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியை அடுத்த சேயூர் பகுதியில் கைது செய்துள்ளதாக தினமலர் நாளேடு தெரிவித்தது.

இதில் சேவூர் லூர்துபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை நேற்று முன்தினம் போலி சார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக