திங்கள், 30 ஆகஸ்ட், 2021

ஆதிதிராவிட பெண்களுக்காக ரூ.10.04 கோடியில் விடுதி!

ஆதிதிராவிட பெண்களுக்காக ரூ.10.04 கோடியில் விடுதி!

மின்னம்பலம் :ஆதிதிராவிட மாணவ, மாணவியர் மற்றும் பணிபுரியும் மகளிருக்காக ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் இன்று (ஆகஸ்ட் 30) திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோயம்புத்தூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் நகரில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி,
மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் தலா 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி மாணவர் மற்றும் பள்ளி மாணவியர் விடுதிகள், மயிலாடுதுறையில் தலா 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி,
விருதுநகர் மாவட்டம், சோழபுரத்தில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதி,

நபார்டு நிதியுதவியுடன் திருநெல்வேலியில் 1 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர் விடுதி,

கிருஷ்ணகிரியில் 1 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதி என மொத்தம் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதி, என 8 கட்டிடங்கள் கட்டப்பட்டது.

கிராமப்புறங்களிலிருந்து படிப்பதற்கு அல்லது வேலைக்காக வீட்டை விட்டு வெளி இடங்களில் தங்கும் பெண்களின் வசதிக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக