ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

ஆப்கன் - காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்

  Vigneshkumar -   Oneindia Tamil News :  காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் அங்குப் பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆப்கனாஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்து அங்கு மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கனில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இதனால், காபூல் விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரணக்கணக்கன மக்கள் கூடியுள்ளனர்.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎஸ் பயங்கவாதிகள் அங்கு நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில் ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அங்குப் பல மடங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இது ராக்கெட் தாக்குதலாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக காபூல் விமான நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நம்பகமான தகவல் வந்ததுள்ளதால் காபூல் விமான நிலையத்தில் இருந்தும் பொது இடங்களில் இருந்தும் அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பைடன் கேட்டுக் கொண்டிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக