செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கேரளாவில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் - கர்நாடக அரசு முடிவு

கேரளாவில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் - கர்நாடக அரசு முடிவு

  மாலைமலர் :பெங்களூரு,  கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 19,622 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவியவர்களில் 2,09,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் இதுவரை 20,673 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கேரளாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கேரளாவில் இருந்து கர்நாடகா வருபவர்கள் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கட்டாய தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

கட்டாய தனிமைப்படுத்தலின் 6-வது நாளில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும், அந்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்த பின்னரே 7-வது நாளில் அவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக