சனி, 21 மார்ச், 2020

துறைவாரியாக பேக்கேஜ் அறிவிக்க வேண்டும்.. ஈ.எம்.ஐ.களை தள்ளிப்போட வேண்டும்: சோனியா காந்தி

Veerakumar /tamil.oneindia.com : டெல்லி: கொரோனா வைரஸ் பரவலைக் கண்டு பீதியடைய வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களை வலியுறுத்தினார்,
மேலும் இந்த வேதனையான நெருக்கடிக்கு நாடு தலைவணங்காது என்று அவர் சூளுரைத்தார். கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை அவர் பரிந்துரைத்தார், மேலும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க அரசால், ஒரு விரிவான, துறை வாரியான நிவாரணப் பேக்கேஜை அறிவிக்க வேண்டும் என்றார்.
தனது அறிக்கையில், சோனியா காந்தி காந்தி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியையும் அரசையுயம், நாடு முழுவதும் வைரஸ் சோதனை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை பிரத்யேக போர்ட்டல் மூலம் வெளிப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் வலியுறுத்தினார்

கனிகா கபூர் பார்டியில் 96. எம்பிக்கள் குடியரசு தலைவர் , ராஜ்நாத் சிங் ஆதித்யநாத் .. கனிகா கபூர் பார்டி விபரங்கள் . பின்னணி!

tamil.oneindia.com/ :டெல்லி: கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பாலிவுட் பாடகி கனிகா கபூர் பல்வேறு லோக்சபா எம்பிக்கள், பிரபலங்கள் உடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டது இந்தியாவை உலுக்கி உள்ளது. இதற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளது. லண்டனில் இருந்து இந்தியா வந்த கனிகா கபூருக்கு கடந்த 16ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன் கனிகா கபூர் கலந்து கொண்ட பல்வேறு பார்ட்டிகளில் மத்திய பாஜக தலைவர்கள், லோக்சபா எம்பிக்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது
கனிகா கபூர் - கொரோனா சர்ச்சையை பின் வரும் வகையில் சுருக்கமாக விளக்கலாம். மார்ச் 9 கனிகா கபூர் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். அப்போதே இவருக்கு கொரோனா இருந்துள்ளது. மார்ச் 11ல் கனிகா கபூர் லக்னோ சென்றுள்ளார். மார்ச் 13,14,15 தேதிகளில் இவர் லக்னோவில் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் 14ம் தேதியில் கலந்து கொண்ட பார்டியில்தான் பாஜக எம்பிக்கள் பலர் உடன் இருந்துள்ளனர். மார்ச் 16 கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

BBC   : மதுரைக்கு அருகில் உள்ள கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளிலும் நடந்துவரும் அகழாய்வில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கொந்தகை கிராமத்தில் இந்த எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது. கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. இந்த நிலையில், கொந்தகை பகுதியில்
நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவை கிடைத்து வந்தன.
கொந்தகை பகுதியில் இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டுள்ளன. முதல் குழியில் 2 முதுமக்கள் தாழிகளும், 2வது குழியில் 8 முதுமக்கள் தாழிகளும், மூன்றாவது குழியில் 2 தாழிகளும் கிடைத்தன.
இந்த நிலையில், கொந்தகையில் இன்று நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்தப் பகுதியில் வசித்தவர்கள் இருவிதங்களில் உடல்களைப் புதைத்துள்ளனர். ஒன்று தாழியில் வைத்து புதைத்தல். மற்றொன்று குழியைத் தோண்டி புதைப்பது.

கொரொனோ பற்றிய தவறான தகவலை கூறும் ரஜினிகாந்த்.. வீடியோவை நீக்கி டுவிட்டர் அதிரடி


tamil.oneindia.com ; சென்னை: தப்பான தகவலை பரப்பியதாக, நடிகர் ரஜினிகாந்த்
வெளியிட வீடியோவை ட்விட்டர் இணையதளம் அதிரடியாக நீக்கியுள்ளது. நாளை மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மதியம் ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார்.
அதில் மோடியின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தால் கூட பரவாயில்லை.. 14 மணி நேரம் வைரஸ் பரவுவதைத் தடுத்து விட்டால் அதற்கு பிறகு அது பரவாது என்ற ஒரு கருத்தை தெரிவித்தார்.
இது வழக்கமாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஒரு பொய்யான தகவல். இதை ரஜினிகாந்த் எப்படி சொல்லலாம்? அப்படிப்பார்த்தால் சீனா போன்ற நாடுகளில் நீண்ட காலமாக வீடுகளுக்குள்ளேயே மக்கள் இருந்தனரே எதற்காக என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பினர்.
இதுதொடர்பாக ட்விட்டர் இணைய தளத்திற்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இது உலகளாவிய, முக்கிய, பிரச்சினை என்பதால் தவறான தகவல் பரப்புவதை தடுப்பதற்காக ரஜினிகாந்த் வீடியோவை டுவிட்டர் இணையதளம் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. அதில், இந்த வீடியோ ட்விட்டர் தளத்தில் விதிமுறைகளை மீறியதால் நீக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கைத்தட்டல்கள் உதவாது, நிதியுதவி வேண்டும்: ராகுல்

கைத்தட்டல்கள் உதவாது, நிதியுதவி வேண்டும்: ராகுல் மின்னம்பலம் :  கொரோனா வைரஸ் பாதிப்பால் வருமானத்தை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் பல வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருந்த தினசரி தொழிலாளர்களின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும், சலுகைகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (மார்ச் 21) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கொரோனா வைரஸ் நம் பலவீனமான பொருளாதாரத்தின் மீதான நடத்தப்பட்ட தாக்குதல். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் இது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 11,000ஐ கடந்தது!

ns7.tv/ta : உலகின் 185 நாடுகளில் சுமார் 2.76 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11,400ஐ கடந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதிவாக்கில் கண்டறியப்பட்ட Covid19 எனப்படும் கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளை தனது பிடியில் வைத்து ஆட்டிப்படைக்கிறது.
பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளன, பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கிக்கிடக்கின்றன.
கொரோனாவிற்கு தற்போதைய நேரப்படி, ( மார்ச் 21 - மதியம் 2.25 மணி) உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 11,423ஆக உயர்ந்துள்ள நிலையில் 91,986 பேர் குணமடைந்துள்ளனர்.
இத்தாலியில் தீவிரம்:
கொடிய வைரஸாக உருவெடுத்துள்ள கொரோனாவிற்கு இத்தாலி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 627 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 4,000ஐ கடந்துள்ளது. மேலும் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,000ஐ கடந்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு சீனாவில் 3,255, இத்தாலியில் 4,032, ஸ்பெயினில் 1,093, ஈரானில் 1,433 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 275 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை 271ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் 30 கோடி பேருக்கு பரவக்கூடும்" - எச்சரிக்கும் மருத்துவர் Coronavirus in India Explained

BBC : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை.
மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இது உண்மையா? கொரோனா தொற்று பரவாமல் இந்தியாவில் தடுக்கப்படுமா? ஒருவேளை நிலைமை மோசமானால் இந்தியாவின் நிலை என்னவாக ஆகும்? – இப்படிப் பல கேள்விகளை நோய் இயக்குவியல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ரமணன் லக்ஷ்மி நாராயணனிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில்களைத் தொகுத்து வழங்குகிறோம்.
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா எந்த அளவுக்கு பாதிக்கப்படும்?
உலகின் மற்ற பகுதிகளை விட இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்று தற்போதைய நிலையில் சொல்ல முடியாது. கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களை அதிகளவில் பரிசோதிக்க தொடங்கினால்தான் நிலைமை தெரிய வரும். கொரோனா தொற்று தீவிரமாவதைப் பொறுத்தவரை நாம் சில வாரங்கள் பின் தங்கியிருக்கிறோம். அவ்வளவு தான். ஆனால் ஸ்பெயினில் சமீபத்தில் நாம் பார்த்ததை போல இன்னும் சில வாரங்களில் இந்த தொற்று சுனாமி போன்று உருவெடுக்கலாம்.

கொரோணா வைரஸ் எந்த பொருட்களின் மீது எவ்வளவு மணி நேரம் உயிர்வாழும்?

Muthu Krishnan : · மார்ச் 22 ஆம் தேதி மொத்த தேசமும் ஊரடங்கில் இருக்கும் அந்த 12-14 மணி நேரத்தில் கோரோணா கிருமி அழிந்துவிடும் என்கிற
நகைச்சுவை ஒன்றை காலையில் இருந்து பல வாட்சப்/முகநூல் பக்கங்களில் பார்த்து வருகிறேன்...
கொரோணாவால் எந்த எந்த பொருளின் மீது எத்தனை மணி நேரம் உயிர் வாழ முடியும் என்பதை விளக்கும் படம் இங்கே.....

லல்லு பிரசாத் யாதவ் .. சமுக நீதியையும் மத நல்லிணக்கத்தையும் உறுதியாக முன்னெடுத்ததால் சிறையில் ....

சுமதி விஜயகுமார் : வருடம் சரியாக நினைவில் இல்லை. 2004 ஆம்
ஆண்டாக இருக்கலாம். குமுதம் இதழில் ஒரு படம். லாலு பிரசாத் தன் மனைவி குழந்தைகளுடன் வரிசையாக நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த படத்தின் கீழே , இந்திய ரயில்துறை அமைச்சர் ரயில் பெட்டிகளை போல குழந்தைகளை பெற்று போட்டிருக்கிறார் என்று கேலி செய்தி வெளியிட்டு இருந்தது. ரயில்துறை ஊழல் , மாட்டு தீவன ஊழல் இவற்றை தாண்டி லாலு பிரசாதிற்கு ஒரு முகம் இருக்கிறது. அது என்ன ?
1977ல் முதல் இளம் மக்களவை உறுப்பினராக தேர்வான பொழுது லாலுவிற்கு வயது 29. இந்திரா காந்தியின் அவசரநிலைக்கு பிறகு நடந்த தேர்தல் அது. காங்கிரெஸ்ஸை தோற்கடித்து மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி வெற்றிபெற்றது. அதன் பின் 13 ஆண்டுகள் கழித்து பீகாரின் முதலமைச்சர் ஆனார் லாலு . உட்கட்சி பூசல்களுக்கு பிறகு லாலு ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து ராஷ்ட்ரிய ஜனதா தல் என்ற கட்சியை நிறுவினார். 2015ல் தன் நண்பரும் எதிரியுமான நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற, நிதிஷ் குமார் முதலமைச்சராகவும் லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள். இரண்டாண்டுகளில் நிதிஷ் குமார் மோடியின் ஆட்சியை புகழ துவங்க லாலு நிதிஷ் உறவில் விரிசல் ஏற்படுகிறது. பிறகு ஊழல் வழக்கில் லாலு சிறை செல்ல, நிதிஷ் குமார் பதவி விலகி , பிஜேபியுடன் இணைந்து மீண்டும் பதியேற்றார்.

கொரோனா பாதிப்பு குறையவில்லை.. பொய் சொல்கிறது சீனா.. உள்ளூர் மீடியாவில் வெளியான பகீர் தகவல்

/tamil.oneindia.com/n : பீஜிங்: கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு, மற்றும் முதலில் பாதிப்பை எதிர்கொண்ட நாடு சீனா. ஆனால் தற்போது அங்கு சில பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும், மக்கள் வழக்கம் போல பணிகளுக்கு செல்வதாகவும், சீன அரசு தரப்பு தெரிவிக்கிறது.  ஆனால், இதில் மோசடி இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வூஹான் மாகாணத்தில், கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியபோதே, அதுகுறித்த வெளிப்படைத் தன்மையை சீனா பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வைரஸின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை கட்டுப்படுத்த எந்த மாதிரி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றி எல்லாம் சீன அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
 இதன் காரணமாகத்தான், உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் விஷயத்தில் மிகவும் தாமதமாக உலகநாடுகளுக்கு எச்சரிக்கை பிறப்பித்தது. அதற்குள்ளாக அது, இத்தாலி, ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது

தமிழக எல்லைகள் மூடல் - நாளை பேருந்துகள் இயங்காது: தமிழக அரசு!

தமிழக எல்லைகள் மூடல் - நாளை பேருந்துகள் இயங்காது: தமிழக அரசு!மின்னம்பலம் : தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை எல்லைப் பகுதிகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுபோன்று, பிரதமர் மோடி அறிவித்தபடி, சுய ஊரடங்கைப் பின்பற்றும் வகையில் நாளை ஒரு நாள் தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயங்காது என்றும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் மற்ற மாநிலங்களிலிருந்து வரும் ரயில் மற்றும் பேருந்து பயணிகளும் தீவிர மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து: பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு - 9 பேர் படுகாயம் சாத்தூர் அருகே

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பெண்கள் உள்பட 8 பேர் பலி - 9 பேர் படுகாயம்தினத்தந்தி : சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- தாயில்பட்டி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிப்பிப்பாறையில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று காலை வழக்கம் போல் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வெள்ளி, 20 மார்ச், 2020

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ராஜினாமா- நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே விலகல்

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ராஜினாமா- நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே விலகல்மாலைமலர் : மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், தனது அரசாங்கம் மெஜாரிட்டியை இழந்துள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கு முன்பாகவே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் முதலில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார். மற்றவர்களின் ராஜினாமா கடிதங்களை நேற்று நள்ளிரவில் ஏற்றதாக அறிவித்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது.
சட்டசபையில் இன்று மாலை 5 மணிக்குள் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால் நிச்சயம் அரசு தோல்வியடையும் நிலை உள்ளது.

சீனா உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுக்கிறது - டொனால்ட் டிரம்ப்

 உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுக்கிறது - சீனா மீது சாடிய டிரம்ப் மாலைமலர் : கொரோனா குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுத்துவருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். வாஷிங்டன்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர்
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 88 ஆயிரத்து 465 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

எலீட் பார்ட்டிகளில் கலந்து கொண்ட அரசியல் சினிமா பிரபலங்கள் கொரோனா அச்சத்தில்


ஒரே ஒரு பார்ட்டி: கொரோனா அச்சத்தில் அரசியல் பிரபலங்கள்!மின்னம்பலம் : லண்டன் சென்றுவிட்டு இந்தியா திரும்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது லக்னோவில் உள்ள ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டனிலிருந்து அவர் லக்னோ விமான நிலையம் வந்து இறங்கியதும், அவருக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட் எடுக்கப்பட்டதில் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவில்லை. அதையடுத்து 4 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் சளி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவர் இன்று (மார்ச் 20) தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லோருக்கும் வணக்கம். கடந்த 4 நாட்களாக எனக்குக் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன, பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது நானும் எனது குடும்பமும் முழுமையான தனிமைப்படுத்தலில் இருக்கிறோம். லண்டனிலிருந்து வந்ததிலிருந்து நான் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து ஆராயும் பணிகள் தொடங்கியுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு நான் வந்தபோது விமான நிலையத்தில் டெஸ்ட் எடுத்ததில் எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதன் பிறகுதான் தெரியவந்தது. தற்போது லேசான காய்ச்சலுடன் நலமாக இருக்கிறேன். உங்களுக்கும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹீலர் பாஸ்கர் கைது .. கொரோனா பற்றி தவறான வதந்தியை பரப்பினார் .. வீடியோக்கள்

கரோனா வைரஸ் பாதிப்புக்கு மாற்றுமுறை சிகிச்சை அளிப்பதாகக் கூறி வந்த ஹீலர் பாஸ்கர், வதந்தி பரப்பியதாகக் கூறி கோவையில் கைது செய்யப்பட்டார். இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கரோனா பாதிப்புக்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 206 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், மாற்றுமுறை சிகிச்சை அளித்து கரோனாவைக் குணப்படுத்த முடியும் என்று சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஹீலர் பாஸ்கர் கூறிவந்தார். இதையடுத்து, கரோனா பாதிப்பு குறித்து வீண் வதந்திகளைப் பரப்பியதாகக் கூறி, ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா உயிரிழப்பில் இத்தாலி முதலிடம் .. சீனாவை மிஞ்சியது .. வீடியோ


தினமலர் : ரோம்: கொரோனா உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் நிலையில் அதனால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. சீனாவில் இதுவரை 80,928 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 3,245 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் இதுவரை 41,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3,405 ஆனது. இதன் மூலம் கொரோனா பலி எண்ணிக்கை இத்தாலியில் சீனாவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இறப்பு விகிதமும் அங்கு அதிக அளவில் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் மட்டும், 475 பேர், இந்த வைரசால் உயிரிழந்து உள்ளனர் கொரோனா வைரஸ் சீனாவில் குறைந்துள்ள நிலையில், இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில், மிக வேகமாக பரவி வருகிறது. ஆறு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இத்தாலியில், மார்ச், 12 முதல், முழு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை உள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ''வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், இந்தத் தடை உத்தரவு, மேலும் நீட்டிக்கப்படும்,'' என, பிரதமர், குயுசிபே கான்டே கூறியுள்ளார்.

65000 மரக்கன்றுகளை அகற்றிவிட்டு மகனின் பள்ளிக்கு சாலை போடும் .. எம்பி . வைத்தியலிங்கம்

 ஜூனியர் விகடன் :  65000 மரக்கன்றுகளை அகற்றிவிட்டு சாலை...
வைத்தியலிங்கத்தின் தில்லாலங்கடி.
“ராஜ்யசபா எம்.பி வைத்திலிங்கத்தின் மகன் தொடங்கியிருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் பாதை அமைப்பதற்காக கிராமப் பொது நிலத்திலிருந்த 65,000 மரக்கன்றுகளை அகற்றிவிட்டனர்” என்று குற்றம்சாட்டுகின்றனர் செங்கல்பட்டு மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி மக்கள்.
சுமார் இருபது வருடத்துக்கு முன்பு அஞ்சூர் ஊராட்சிப் பகுதியில் ‘மஹிந்திரா வேர்ல்டு சிட்டி’ என்ற தொழில் பூங்கா தொடங்கப்பட்டபோது 76 ஏக்கர் நிலம் அஞ்சூர் ஊராட்சிக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது. அதில் 51 ஏக்கர் திறந்தவெளிப் பகுதியாகவும் மீதம் 25 ஏக்கர் நிலம் சாலைகள் அமைத்தும் வழங்கப்பட்டது. இந்தப் பகுதியில் தான், ராஜ்யசபா எம்.பி-யான வைத்திலிங்கத்தின் மகன் பிரபு 3.45 ஏக்கர் நிலம் வாங்கி, பள்ளிக்கூடம் கட்டியிருக்கிறார். இந்தப் பள்ளிக்காகத்தான் அரசு நிலத்தில் விதிகளைமீறி சாலை அமைக்கப் படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

77 மருந்துகள்.. உலகின் அதி வேகமான கணினி உருவாக்கிய கெமிக்கல்.. கொரோனா ஆராய்ச்சியில் திருப்பம்!

அமெரிக்கா /tamil.oneindia.com : நியூயார்க்: அமெரிக்காவின் சம்மிட் சூப்பர் கணினி மூலம் கொரோனாவிற்கு எளிதாக மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. தற்போது கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான 77 வேதி பொருட்களை இந்த கணினி கண்டுபிடித்து இருக்கிறது.
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க பல நாடுகள் கடுமையாக முயன்று வருகிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகிறது.
இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டுவிட்டது. தாங்கள் கண்டுபிடித்த மருந்தை அமெரிக்கா சோதனை செய்து, முடிவிற்காக காத்து இருக்கிறது. அதேபோல் ஜெர்மனியையே சேர்ந்த க்யூர்வேக் என்ற நிறுவனமும் இதற்காக மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது.

சீனாவில் ஒரு புதிய கொரோனா நோயாளி கூட இல்லை

latest tamil news
latest tamil news தினமலர் :  பீஜிங்: கொரோனா வைரஸ், தற்போது, மொத்த உலகையும் உலுக்கி எடுத்து வருகிறது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 2.04 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்; 83 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் மட்டும் 80,894 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு 3,237 பேர் உயிரிழந்துள்ளனர்.
>சீனாவில் தற்போது இந்த வைரசின் வீரியம் வெகுவாகக் குறைந்துள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அங்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளும் மூடப்பட்டுவிட்டன.
கொரோனா பரவிய நாளில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட, 80 நாட்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து, 24 மணி நேரமும் பணியாற்றி மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் வீடு திரும்பி வருகின்றனர்.

22ம் தேதி ஞாயிறு அன்று யாரும் வெளியே வரவேண்டாம்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

மாலைமலர் : கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் 22ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
கொரோனா வைரவை பொதுமக்கள் விழிப்புணர்வோடு எதிர்கொள்ள வேண்டும். பொதுமக்கள் முடிந்த வரை
தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் 22 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம். 22-ந்தேதி கொரோனா வைரஸ்க்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.

அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? – விரிவான தகவல்கள்


BBC : உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் தற்போது
அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன. மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு துவங்கியுள்ளன. சியாட்டில் நகரில் செயல்படும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
இந்த தடுப்பு மருந்தும், இதே போல உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வரும் மற்ற தடுப்பு மருந்துகளும், கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சியாட்டில் நகரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 43 வயது பெண்மணியிடம், இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1: தமிழகத்திலும் மத்திய அரசின் ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்.. தமிழகத்தில் வடஇந்தியர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்

ஏப்ரல் 1: தமிழகத்தில் ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்!மின்னம்பலம் : ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்தத் திட்டத்தை 2020 ஜூன் 30ஆம் தேதிக்குள் அமல்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் காலக்கெடுவும் விதித்தது.
இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதன் முன்னோட்டமாகத் தமிழகத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் திட்டம் பிப்ரவரியில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது.

நிர்பயா வழக்கு - 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேறியது!

நிர்பயா வழக்கு - குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் தினத்தந்தி :  டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. புதுடெல்லி, நிர்பயா வழக்கில் கைதான குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு குற்றவாளி பவன் குப்தா சார்பாக அளிக்கப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை பவன் ஜல்லாத் நிறைவேற்றினார்

India : Economic Stimulus Packages "Janata Curfew" & Clapping hands in the Balcony

Jose Kissinger : Economic Stimulus Packages in response to Corona.
🇬🇧 UK : $39 billion
🇺🇲 US : $1.2 trillion
🇫🇷 France : $45 billion
🇳🇿 NZ : $8 billion
🇮🇹 Italy : $28 billion
🇨🇦 Canada : $56 billion
🇰🇷 South Korea : $10 billion

🇮🇳 India : Just One day "Janata Curfew" & Clapping hands in the Balcony on Sunday under Deendayal Upadhyaya Thali Bajao Yojna

ம.பி. 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்பு- நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை- கமல்நாத் ராஜினாமா?

MP CM Kamal Nath to resign without facing floor test? tamil.oneindia.com - Mathivanan Maran : போபால்: மத்திய பிரதேசத்தில் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய பிரதேச சட்டசபையில் வெள்ளிக்கிழமையன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாகவே முதல்வர் கமல்நாத் பதவியை ராஜினாமா செய்வார் எனவும் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.'
இதனையடுத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால் கொரோனா வைரஸ் உத்தரவை காரணம் காட்டி சட்டசபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

வியாழன், 19 மார்ச், 2020

துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்!

துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்!மின்னம்பலம் : 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,525 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 64 ஆயிரத்து 583 துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இது தவிர, பல்வேறு துறைகளிலும் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணியை செய்து வருகிறார்கள். தமிழகம் தூய்மையாக இருப்பதில் இவர்களது பங்கு மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் இவர்களுக்கு புதிய பெயரை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (மார்ச் 19) நடைபெற்றது.
110 விதியின் கீழ் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “துப்புரவு பணியாளர்கள் பொது இடங்களில் தூய்மையை பேணிக்காப்பது, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுவது மற்றும் பேருந்து நிலையம், சந்தைகள், ஆலயங்கள் மற்றும் வணிக வளாகப் பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி இவர்கள் மேற்கொண்டு வரும் துப்புரவுப் பணி, மக்களின் நலனையும், பொது சுகாதாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்தார்.

திமுகவுக்காக என்ன செய்கிறார் பிரசாந்த் கிஷோர்?

திமுகவுக்காக  என்ன செய்கிறார் பிரசாந்த் கிஷோர்?மின்னம்பலம் : திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், என்னென்ன செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் திமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் தற்போது விவாதத்துக்குரிய கேள்வியாக இருக்கிறது.
தமிழகத்தில் திமுக எந்தெந்த பகுதிகளில் பலமாக இருக்கிறது, எங்கே பலவீனமாக இருக்கிறது என்ற ஆய்வை முதலில் மேற்கொண்ட பிகே டீம், அதன் அடுத்த கட்டமாக பலவீனமான பகுதிகளில் ஏன் பலவீனம் ஏற்பட்டது, அதை சரிசெய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றிய தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது.

வெள்ளாடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர்


digital-madras.tamilheritage.org- சிங்கநெஞ்சன் ;
சென்னை என்றதும் நம்மில் பலருக்கு, குறிப்பாக நம் பெண்மணிகளுக்கு நினைவிற்கு வருவது, ‘டீ நகர்’ தான். “இந்த டீ நகரில் உள்ள ‘டீ’ யாரை அல்லது எதைக் குறிக்கிறது என்று பலரைக் கேட்டுப் பார்த்தேன். படித்தவர்களுக்குக்கூட, சரியான விடை தெரியவில்லை. ‘தியாகராய நகர்’ என்று சரியாக சொன்னவர்களிடம், “யார் இந்த தியாகராயர்” எனக் கேட்டபோது பெரும்பாலானோர் ‘நடிகர் தியாகராஜ பாகவதராயிருக்கலாம்’ என்றார்கள். சரியான விடையை சொன்னவர்கள் மிகச் சிலரே.
சென்னையின் வெள்ளை மாளிகையான ரிப்பன் கட்டிடத்தின் (மாநகராட்சி வளாகம்) முன்னே, சிலை வடிவில் நிற்கும் வெள்ளாடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர்தான், டீ. நகருக்குப் பெயர் தந்த பெருமான். இந்த சிலை 1937ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3 ஆம் நாள் அப்போதைய சென்னை மாகாண ஆளுனர் ஸ்டான்லி அவர்களால் திறக்கப்பட்டது. இந்தச் சிலையின் அடியில் பீடத்தை சுற்றி, பள்ளிச் சிறுவர்கள் கையில் புத்தகங்களோடு இருப்பதை போல் சிறு சிறு சிலைகள் உள்ளன. சென்னை கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் சிலையில் கூட அவருக்கு இருபுறமும் பள்ளிச் சிறுவர்கள் சிலைகளைக் காணலாம். தமிழகத்தில் ஏழைச் சிறார்களுக்கு கல்விக் கண்ணைத் திறந்து வைத்த பெருமை. இந்த பெருமக்களையே சாரும்.

கொரோனா ...கடவுளை வைத்து வித்தை காட்டி பிழைத்தவர்கள் காணாமற் போகிறார்கள்.

Dhinakaran Chelliah ; மத நூல்கள் எதுவும் சுய சிந்தனையை ஊட்டுவதாக வர்களை வந்தடையும்.
இல்லை. அந்த நூல்களைத் தாண்டி நாம் ஏதும் சிந்திக்கத் தேவையில்லை என்பதையே அவை வலியுறுத்துகின்றன. அதனால்தான் மத பற்றாளர்கள் தங்களது குறுகிய வட்டத்தைத் தாண்டி சிந்திக்க முடிவதில்லை. மத நூல்களுக்குள் தங்களது எல்லையை சுருக்கிக் கொள்வதின் விளைவுதான் மற்ற மதங்களின் மேல் துவேஷம் உருவாவதற்குக் காரணம்.இதை போக்கிக் கொள்வது எளிதான காரியமல்ல.மதம் என்கிற குறுகிய வட்டத்தை விட்டு வெளிவர வேண்டும்.
அதை விட்டு வெளிவந்தவர்கள் பாக்கியவான்கள்!
 சுய சிந்தனை
சுயமாக சிந்திப்போர் முதன் முதலாக உணர்வது, அவர்கள் படிக்கும் மத நூல்கள் மீது தோன்றும் விமர்ச்சனமாகத்தான் இருக்கும். அடுத்து,மதங்களின் மீது அளவற்ற நம்பிக்கையும் பற்றும் கொண்டிருக்கும் சக மனிதர்கள் மீது பரிதாபம் மேலிடும். அவர்கள் மீது இன்னும் அக்கறை கூடும், இது இயல்பானது. அவர்களுக்காக ஏதாவது செய்து அவர்களது அறியாமையை போக்கும் நடவடிக்கையில் பலர் ஈடுபடுவர். அதில் ஆர்வம் அதிகமாகும் போது விமர்ச்சனங்களை தவிர்த்தல் இயலாது போகும். சிலர் இந்த அளவிற்கு கடுமையான விமர்ச்சனங்கள் தேவையா என என்னிடம் முறையிடுகின்றனர். சிலர் மற்ற மதங்களைப் பற்றியோ, குருமார்களைப் பற்றியோ, கடவுளர்களைப் பற்றியோ விமர்சிக்க முடியுமா என சவால் விடுக்கின்றனர். உங்களுக்கு என்ன தெரியும்?

9 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரழப்பு எண்ணிக்கை .. வீடியோ


தினமலர் :  175 பேர் பாதிப்பு கொரோனா வைரசுக்கு இந்தியாவில், இதுவரை 175 பேர் பாதிக்கப்பட்டள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
7:37 PM IST
ஈரானில் இந்தியர் ஒருவர் கொரோனா வைரசால் பலி
ஈரான் நாட்டில் இந்தியர் ஒருவர் கொரோனா வைரசால் பலியாகி உள்ளார்.
7:30 PM IST
பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4:58 PM IST
இந்தியாவில் 4வது பலி
அயர்லாந்தில் இருந்து இத்தாலி வழியாக பஞ்சாப் வந்த 72 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 19) உயிரிழந்தார். இதனால் வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
4:42 PM IST

மார்ச் 29-ம் தேதி வரை விமானங்கள் இந்தியாவுக்குள் வரத் தடை: குழந்தைகளை வெளியே விடாதீர் -மத்திய அரசு

hindutamil.in  : கரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமடைந்துள்ளதையடுத்து அதைத் தடுக்கும் வைகையில் அதிரடியாகக் களமிறங்கியுள்ள மத்திய அரசு வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அனைத்து சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்குள் வரத் தடை விதித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் என்ற ஒற்றை வார்த்தைக்கு இந்தியாவும் தப்பவில்லை. உலக அளவில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைக் காவு வாங்கியுள்ளது.
இந்தியாவில் மெல்ல ஊடுருவிய கரோனா வைரஸுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துக் கடந்த 24 மணிநேரத்துக்குள் 20 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் லாவ் அகர்வால் இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
  • வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இந்தியாவுக்குள் அனைத்துவிதமான சர்வதேச விமானங்கள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை தற்காலிகமானதுதான்.
  • ரயில்வே, விமானம் போன்றவற்றில் மக்களின் நெருக்கத்தைக் குறைக்கும் வகையில் இந்த இரு போக்குவரத்திலும் மாணவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தவிர மற்ற பிரிவினருக்குச் சலுகைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
  • கொரோனா வைரஸ்: அமெரிக்க மக்களுக்கு விரைவில் நற்செய்தி - டிரம்ப் அதிரடி டுவீட்


    மாலைமலர் : வாஷிங்டன்: கொரோனா வைரசின் ஊற்றுக்கண் சீனாவின் உகான் மாகாணம் என உலகமே கூறி வரும் நிலையில், அது அமெரிக்காவில் தோன்றியது
    என்றும் அமெரிக்க ராணுவம் அதை உகானுக்கு பரவச் செய்தது என்றும் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் கடந்த வாரம் டுவிட்டரில் பதிவு செய்தார்.
    இதையடுத்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரை அழைத்தும் அமெரிக்கா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவை " சீன வைரஸ் " என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்டின் தலைவர்கள் டிரம்ப்புக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத டிரம்ப் இன்றும் தனது டுவிட்டர் பதிவில் " சீன வைரஸ் "என்றே குறிப்பிட்டுள்ளார்.
    இன்று அவர் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள மூன்று பதிவுகளில், ‘மிக முக்கியமான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் ஓட்டல்கள், உணவகங்கள், மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் வேலையின்றி இருப்பவர்களுக்கு விரைவில் பணம் வந்து சேரும். சீன வைரசின் கடுமையான தாக்குதல் உங்கள் பிழையல்ல; முன்பிருந்ததை விட பலமாக இருப்போம்.

    கரோனா வைரஸிலிருந்து தப்பிப் பிழைத்த 103 வயது மூதாட்டி .. ஈரான்

    .hindutamil.in  : உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு முதியோர்கள் 103 வயது மூதாட்டி கரோனா வைரஸிலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளார்.
    அதிகமானோர் பலியாகிறார்கள் என்ற தகவல் வரும் நிலையில்,
    ஈரான் நாட்டில் நடந்த அதிசய நிகழ்வை அங்குள்ள ஊடகங்கள் உறுதி செய்துள்ளதாக ஐஆர்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இதுவரை 195 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதுவரை 8 ஆயிரம் பேர் உலக அளவில் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தலைமை ஆசிரியர் மீதான் பாலியல் வழக்கில் மாணவிகளை மிரட்டிய அரசு வழக்கறிஞர் கைது! சிவகங்கை

    மின்னம்பலம் : மாணவிகளை மிரட்டிப் பொய் சாட்சி கூறவைத்த குற்றச்சாட்டில் அரசு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சிவகங்கை மாவட்டம் காளையர்கோவில், பெரியநரிக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த முருகன் 2015 ஏப்ரல் மாதம் நான்கு மாணவிகளைப் பள்ளியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 6/2015இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏஎஸ்பி வந்திதர் பாண்டே நேரடி பார்வையில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிவகங்கை போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது.
    வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய நீதிபதியாக ப.உ.செம்மல் பொறுப்பேற்று வழக்கின் முழு விவரங்களையும் தீரப் படித்துவிட்டு சாட்சிகள் பிறழ் சாட்சியானதைப் பார்த்து, மீண்டும் சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    பரூக் அப்துல்லா உண்மையில் விடுவிக்கப்பட்டாரா? மக்களவையில் சந்தேகம்!

     பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டாரா? மக்களவையில் சந்தேகம்! மின்னம்பலம் :  ஜம்மு காஷ்மீரை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என மக்களவையில் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எழும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தடைச் சட்டங்களின் கீழ் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர்
    இதனிடையே பரூக் அப்துல்லா மீதான பொதுப் பாதுகாப்புச் சட்டம் மார்ச் 13ஆம் தேதி ரத்துசெய்யப்பட்டது. ஏழு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பரூக் அப்துல்லா, “இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன். தற்போது நான் எதுவும் சொல்லப்போவதில்லை. நான் டெல்லி சென்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளேன். காஷ்மீர் மக்கள் அனைவருக்காகவும் பேசுவேன்” என்று குறிப்பிட்டார். ஆனால், பரூக் அப்துல்லா இதுவரை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவில்லை.

    2G இழப்பு என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, 1 லட்சம் கோடியை இழக்கத் துணிந்தது ஏன்?” - ஆ.ராசா ஆவேசம்! வீடியோ

    Vignesh Selvaraj : 2ஜி விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி இழப்பு என பொய்யான குற்றச்சாட்டு மூலம் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, இப்போது 1 லட்சம் கோடியை இழக்கத் துணிந்தது ஏன்?” என மக்களவையில் ஆவேசமாகப் பேசியுள்ளார் மக்களவை தி.மு.க கொறடா ஆ.ராசா எம்.பி.
    மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, “1 லட்சம் கோடிக்கும் மேல் நிலுவைத்தொகை பெற உச்சநீதிமன்றம் அனுமதியளித்தும் ஏர்டெல், வோடஃபொன் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய ஏறத்தாழ 1 லட்சம் கோடி ரூபாயை 20 ஆண்டுகாலத்திற்கு தள்ளிவைப்பதாக மத்திய பா.ஜ.க அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
    2ஜி விவகாரத்தில் கற்பனையான மதிப்பான 1,76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு எனக் குற்றம்சாட்டப்பட்டு, பின்னர் அது குற்றமில்லை என நிரூபணமானது. அந்தப் பொய்க் குற்றச்சாட்டால் ஆட்சியையே நாங்கள் காவுகொடுக்க நேரிட்டது. அதைப் பூதாகரமாக்கித்தான் ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க.
    ஆனால், இன்றைக்கு உண்மையிலேயே அரசுக்கு வரவேண்டிய வருவாய் 1 லட்சம் கோடியை இழக்க இந்த அரசு எப்படித் துணிந்தது? தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகாலம் சலுகை அளித்தது யார்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

    கடனை வசூலிக்க வங்கிகளுக்கு 6 மாத தடை: இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா

    latest tamil newslatest tamil news  தினமலர் :கொழும்பு: 'கொரோனா வைரஸ் தொற்றால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆறு மாதத்துக்கு, கடன், வட்டியை வங்கிகள் வசூலிக்கக் கூடாது' என, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். பரவிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகையே உலுக்கி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
    இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 60ஐ எட்டியுள்ளது. கொரோனா தாக்கத்தால் இலங்கையில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

    கத்தியால் தானே கிழிப்பு- மத கலவரத்தை தூண்ட நாடகமாடி வசமாக சிக்கிய அர்ஜூன் சம்பத் கட்சி பிரமுகர்


    Tiruppur Hindu Makkal Katchi functionary stages drama by self inflicting wounds tamil.oneindia.com - mathivanan-maran : திருப்பூர்: திருப்பூரில் கட்சியில் செல்வாக்கு பெறுவதற்காக தம்மை தாமே கத்தியால் கிழித்துக் கொண்டு இந்து மக்கள் கட்சி பிரமுகர் நந்து நாடகமாடியதை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
    திருப்பூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நந்து, எஸ்.ஆர். எலக்ட்ரிக்கல்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது தம்மை பிற மதத்தினர், காவி வேட்டி கட்டியவர்கள் கத்தியால் தாக்கியதாக போலீசில் புகார் தெரிவித்தனர்.
    இதனால் திருப்பூரில் பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிக்கிய நந்துவின் ஓட்டுநர் ராமமூர்த்தி போலீசில் உண்மைகளை கக்கியுள்ளார்.
    அதில், கட்சியில் செல்வாக்கு பெறுவதற்காக தம்மை நந்து கத்தியால் கிழிக்க கூறியதாகவும் நந்துவும் தம்மை கத்தியால் கீறிக் கொண்டு போலீசில் புகார் செய்ததாகவும் தெரிவித்தார். இதனை திருப்பூர் போலீசார் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளனர்.

    வெயிலுக்கும் கொரோனவுக்கும் இடையே உள்ள தொடர்பு .. ஒரு ஆய்வு

    DailyhuntReport  : வெயில் வெளுத்து வாங்கும் ஈரானில் எப்படி கொரோனா பரவியது என்று கேட்பவரா? கண்டிப்பா இதை படிங்க
    ஆமா.. அதிகமா வெயிலு, வெப்பம் இருக்கிற நாடுகள்ல கொரோனா வைரஸ் வேகமாக பரவாது அப்படின்னு சொல்றாங்க.. ஆனா, பாலைவனப் பிரதேசம் ஈரான், சவுதி அரேபியா, இந்த மாதிரி நாடுகளிலும் கொரோனா பரவியிருக்கே, எப்படி..? என்ற கேள்வி பலருக்கும் வருவது சகஜமான ஒன்று.
    முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுகிறோம். இதுவரை அதிகாரபூர்வமாக ஆய்வுகள் எதுவும் வெயில் அதிகம் உள்ள பிரதேசங்களில் கொரோனா வராது என்று நிரூபிக்க வில்லை. ஒரு சில ஆரம்ப கட்ட ஆய்வு முடிவுகள் அவ்வாறு வெளிவந்துள்ளன.
    இருப்பினும் இது மிகப்பெரிய தொற்று நோய் என்பதால், நாம் உரிய அதிகாரப் பூர்வ ஆய்வு முடிவுகள் வெளியே வராமல் இதை நம்புவது ரிஸ்க்.
    அடுத்ததாக.. உண்மையிலேயே பலரும் நினைத்துக் கொள்வதை போல, ஈரான் அல்லது வளைகுடா நாடுகள் வெப்பத் தால் தகித்துக்கொண்டு இல்லை. இந்த சீசன் அப்படி. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் பல நகரங்களை விடவும் அங்கே இதமான தட்பவெப்பம் தான் நிலவுகிறது.
     குளிர் வுஹான்நிலவரம்
    ஒருவேளை குளிர் அல்லது அதிக
    வெப்பம் இல்லாத கால சூழ்நிலையில் வைரஸ் எளிதாக பரவும் என்பது உண்மையாக இருந்தால், இந்த நாடு களில் அவை பரவியதில் பெரிய ஆச்சரியம் இருக்க முடியாது.

    புதன், 18 மார்ச், 2020

    விதவை' பெயர் வேண்டாம்; விவாகரத்துக் கொடுங்கள்!' -நீதிமன்ற படியேறிய நிர்பயா குற்றவாளியின் மனைவி

    நிர்பயா வழக்கின் குற்றவாளிகள்
    vikatan.com - ராம் சங்கர் : டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்திடம் பேசும்போது, ``பெண் தன் கணவர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் விவாகரத்து பெறலாம்" என்று தெரிவித்துள்ளார். இந்தியாவை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோர் தற்போது திகார் சிறையில் உள்ளனர். குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவால் ஏற்கெனவே இரண்டு முறை தூக்குத் தண்டனைகள் ஒத்திவைக்கப்பட்டன. மனுக்களின் மீதான விசாரணைகளுக்குப் பின்னர் மார்ச் 20-ம் தேதி குற்றவாளிகள் தூக்கிலிடப்பட உள்ளனர். இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நீதிமன்றத்தில் குமார் சிங்கின் மனைவி அளித்துள்ள மனுவில், ``விதவை என்ற பெயருடன் வாழ விரும்பவில்லை. என் கணவர் நிரபராதி. அவரை தூக்கிலிடுவதற்கு முன்பு சட்டபூர்வமாக விவாகரத்துப் பெற விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற மார்ச் 19-ம் தேதி விசாரணை நடத்த உள்ளது

    டி.ஆர்.பாலு பொருளாளர் . துரைமுருகன் பொதுச்செயலாளர் .. திமுகவில் ..

    trbaalu
    mksnakkheeran.in - இரா. இளையசெல்வன் : திமுக பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் மறைவைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறது திமுக தலைமை!
    பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழுவை வருகிற 29-ந்தேதி தனது தலைமையில் கூட்டியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
    இந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட பலரும் பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில் தன்னுடைய அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து காய்களை நகர்த்தியபடி இருந்தார் துரைமுருகன். இவரிடம் பொதுச்செயலாளர் பதவி தஞ்சமடைந்து விடக்கூடாது என அவருக்கு எதிராக மூத்த தலைவர்கள் சிலர் பல்வேறு லாபிகள் மூலம் கச்சைக்கட்டியதும் நடந்தது. மு.க.ஸ்டாலினிடமே லாபிகள் தங்களது அஸ்திரங்களைச் சுழற்ற, அவர்களிடம் கடுமையாக கோபித்துக்கொண்டார் ஸ்டாலின்.

    வெறிச்சோடிய தேசங்கள் .. ஜெர்மனியில் இருந்து ... வீடியோ


    Subashini Thf : ஜெர்மனியில் CoV-19 வைரஸ் பாதிப்பின் காரணமாக அரசு வெளியிட்டு இருக்கின்ற கட்டுப்பாடுகள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கடைகள் காலையில் சில மணி நேரங்கள் மட்டுமே திறக்கும் வகையில் செயல்படுகின்றன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் என்பது வெளியில் மிகக்குறைவாக தென்படுகிறது.
    தொலைக்காட்சியில் பெரிய நகரங்களின் மையப் பகுதிகள் எப்படி காட்சி அளிக்கின்றன என்பது பற்றிய படக்காட்சிகளை செய்தியின் போது காட்டினார்கள். காவல்துறையினர் ஒவ்வொரு கடைகளாக சென்று மாலை ஆறு மணிக்கு மேல் திறந்திருக்கும் உணவகங்களை சட்டத்திற்கு மீறியதாக குறிப்பிட்டு மூடச் சொல்கின்றார்கள். ஒரு சில பொதுமக்கள் ஆங்காங்கே சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். தெருக்களில் பாடல் பாடியோ அல்லது வித்தை காண்பித்தோ பணம் சம்பாதிக்கும் ஒரு சிலர் ஏன் மக்கள் வரவில்லை என்பது புரியாமல் இருக்கின்றார்கள். அவர்களிடம் அரசாங்க ஊழியர்கள் நேரில் சென்று நிலைமையை விளக்கி பேசி அவர்களையும் திரும்பிப் போகச் சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.

    ஏ' பிரிவு இரத்தம் உடையவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படக்கூடும்- சீனா ஆய்வு அறிக்கை எச்சரிக்கை

    தினத்தந்தி : சீனாவில் கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்குதல் என்று பல வி‌ஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.
     பெய்ஜிங், உகான், ஷாங்காய் மற்றும் ஷென்சென் உள்ளிட்ட சீனா முழுவதும் உள்ள நகரங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
    இது சக ஆய்வுகளூடன் மதிப்பாய்வு செய்யப்படவில்லை, மேலும் தற்போதைய மருத்துவ நடைமுறைக்கு வழிகாட்ட இந்த ஆய்வைப் பயன்படுத்துவதில் ஆபத்துகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
    இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. உகானில் கொரோனா வைரஸ் பாதிப்பால்  இறந்த 206 நோயாளிகளில், 85 பேருக்கு ‘ஏ’ வகை ரத்தம் இருந்தது.  ‘ஓ’  ரத்த வகை குறைவாக இருந்து உள்ளது.
    இது வெவ்வேறு வயது மற்றும் பாலினக் குழுக்களில் கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட் டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய ரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதாக தாக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ‘ஓ’ பாசிட்டிவ், ‘ஓபி’ பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் ‘ஓ’ நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக தாக்கியுள்ளது.

    ஸ்பெயினில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேசிய மயமாக்கம்... கொரோனா .. வீடியோ


    மின்னம்பலம் : கொரோனா வைரஸ் எதிரொலியாக ஸ்பெயினில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேசிய மயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு மீண்டும் மருத்துவமனைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் முதன் முறையாக இதுபோன்ற ஒரு முக்கிய நடவடிக்கைகள் ஸ்பெயினில் எடுக்கப்பட்டுள்ளது.
    ஸ்பெயின் பிரதமரான பெட்ரோ சன்செஸின் அறிவுறுத்தலின்படி, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பின் காரணமாக ஸ்பெயின் நாட்டின் மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசின் கட்டுப்பாட்டுக்குள் ,கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த தகவலை நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் சல்வடார் இல்லா, வெளியிட்டுள்ளதாக தி கார்டியன் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
    மருத்துவர்கள் மட்டுமல்லாமல், மருத்துவம் படித்து வரும் நான்காம் ஆண்டு மாணவர்களும் உதவிக்காக அழைக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ள சல்வடார் இல்லா, மருத்துவம் சார்பான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுடன் அரசு தொடர்பில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மூன்றே மாதங்களில் 2 லட்சம் பேரை பாதித்து 8 ஆயிரம் உயிர்களை பறித்த கொரோனா

    சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைமூன்றே மாதங்களில் 2 லட்சம் பேரை பாதித்து 8 ஆயிரம் உயிர்களை பறித்த கொரோனாமாலைமலர் : உலகில் உள்ள 165 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. பாரிஸ்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகின் 165 நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறதுஆசிய நாடுகளை காட்டிலும் ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளத
    குறிப்பாக, ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது.
    உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று மாலை நிலவரப்படி 8 ஆயிரத்து 272 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 5 ஆயிரத்து 598 பேரை இந்த கொடிய வைரஸ் தாக்கியுள்ளது >

    Contagion திரைப்படம் அரசியல், மருந்து கம்பெனிகளின் குற்றங்ளை படம் பிடித்து காட்டுகிறது.. இன்று Corona Virus

    Karthikeyan Fastura : Corona Virus இன்று உலக மக்கள் அனைவரின் வாழ்விலும்
    மிகப்பெரிய சமூக-பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது. 2011 இல் வெளிவந்த Contagion என்ற திரைப்படம் இன்று நம்மை ஆட்டி வரும் கரோனா வைரஸ், அதன் பாதிப்புகள், அதன் பின்னுள்ள பிரச்சனைகள், அரசியல், மருந்து கம்பெனிகளின் குற்றங்கள் அப்படியே படம் பிடித்து காட்டுகிறது.
    Beth என்ற பெண்மணி, தனது பிசினஸ் tripஐ முடித்துவிட்டு ஹாங்காங்கிலிருந்து சிகாகோவிற்கு திரும்பி வருகிறாள். திரும்பி வந்த இரண்டே நாளில் நோய் முற்றி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறக்கிறார். அவருடன் இருந்த மகனும் பாதிக்கப்பட்டு அடுத்த இரு தினங்களில் இறக்கிறான். கணவருக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை.
    இந்த இடைப்பட்ட பயணத்தில் அவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள், ரெஸ்டாரண்டில் உடன் விருந்து உண்டவர்கள், படகில் பயணித்தவர்கள், வீட்டில் இறக்கி விட்ட டேக்சி டிரைவர் என்று ஒருவர் விடாமல் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
    பேத்தின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும்போது தான் அந்த வைரஸின் தன்மை புரியும். அட்டவணையில் இல்லாத ஒரு புது வைரஸ் ஆக இருக்கும். அதன் பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும். உடனே அது எபிடிமிக் இன்டலிஜன்ஸ் மையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கேட் வின்ஸ்லெட் இதை விசாரிக்க ஆரம்பித்து பேத்தின் பயணத்தில் உடன் இருந்த அத்தனைபேரையும் தனிமைப்படுத்த தனியே ஒரு பேஸ்கட்பால் மைதானத்தை ஆஸ்பத்திரி ஆக மாற்றி சிகிச்சைகள் வழங்குவார்.

    ரஞ்சன் கோகோய் – நீதியின் இனவெறி

    savukkuonline.com : இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், அஸ்ஸாம் சில பிரத்யேகமான பிரச்சினைகளை கொண்ட ஒரு மாநிலம். அஸ்ஸாமில்தான், பிற மாநில மக்களும், வங்கதேச இஸ்லாமியர்களும் அதிக அளவில் குடியேறி, பூர்வகுடிகளான அஸ்ஸாமியர்களை நெருக்கடிக்கு  உள்ளாக்கினார்கள்.   வங்காள மொழி அலுவல் மொழியாக்கப்பட்டது.
      அஸ்ஸாமியர்களின் கலாச்சாரம் பின்னுக்கு தள்ளப்பட்டது.   இந்த இன அடையாள சிக்கல், அஸ்ஸாமில் 19ம் நூற்றாண்டு முதல் இருந்து வருகிறது.  இது தொடர்பாக அங்கே இனக் கலவரங்களும் நடந்துள்ளன.
    அதற்கான தீர்வு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுப்பதல்ல.   80 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கே புலம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்களை ஒரே நாளில் அத்தனை எளிதாக வெளியேற்றி விட முடியாது.  ஆனால், அப்படி வெளியேற்ற வேண்டும், என்றுதான் ரஞ்சன் கோகோய் விரும்பினார்.  அதை நிறைவேற்ற தனது உச்சநீதிமன்ற நீதிபதி என்ற பதவியை பயன்படுத்திக் கொண்டார்.

    அவருக்கு இந்த வழக்கில் தனிப்பட்ட விருப்பம் நலன்கள் (Personal interest) இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியபோதும், இவ்வழக்கிலிருந்து விலக மறுத்தார்.
    அவர் என்.ஆர்.சி பற்றி அளித்த தீர்ப்பு, பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்புகளுக்கு வாராது வந்த மாமணியாக அமைந்தது.  இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறியை தூண்ட சங் பரிவார அமைப்புகளுக்கு பேருதவியாக இருந்தது, பாப்ரி மசூதி மற்றும் ராமர் கோவில்.  அந்த பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் முடிவுக்கு வந்ததும், அடுத்து பிரிவினையை தூண்ட, இவ்வமைப்புகளுக்கு தரவுகள் இல்லாமல் தவித்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்தது.

    தமிழ் முற்போக்கு கூட்டணி ,, இலங்கை மலையக மக்களின் அரசியல் எழுச்சி

    Mano Ganesan -
    தமிழ் முற்போக்கு கூட்டணியின் மாவட்டவாரி மற்றும் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் - பொதுதேர்தல்-2020
    மாவட்டவாரி பட்டியல் வேட்பாளர்கள்
    01 பதுளை - ஏ. அரவிந்தகுமார் - (மலையக மக்கள் முன்னணி)
    02 நுவரெலியா - வி. ராதாகிருஷ்ணன் - (மலையக மக்கள் முன்னணி)
    03 நுவரெலியா- பி. திகாம்பரம் - (தொழிலாளர் தேசிய முன்னணி)
    04 நுவரெலியா - எம். உதயகுமார் - (தொழிலாளர் தேசிய முன்னணி)
    05 கண்டி - எம். வேலுகுமார்- (ஜனநாயக மக்கள் முன்னணி)
    06 இரத்தினபுரி - எம். சந்திரகுமார் - (ஜனநாயக மக்கள் முன்னணி)
    07 கம்பஹா - எஸ். சசிகுமார் - (ஜனநாயக மக்கள் முன்னணி)
    08 கேகாலை - எம். பரணிதரன் - (ஜனநாயக மக்கள் முன்னணி)
    09 கொழும்பு - வி. ஜனகன் - (ஜனநாயக மக்கள் முன்னணி)
    10 கொழும்பு - மனோ கணேசன் - (ஜனநாயக மக்கள் முன்னணி)

    தேசிய பட்டியல் வேட்பாளர்கள்;
    01 எம். திலகராஜ்
    02 கே.ரி. குருசாமி
    03 ஏ. லோரன்ஸ்
    (தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நியமிக்கப்படும் தேசிய பட்டியல் எம்பிக்கள், கூட்டணிக்கு உள்வரும் கட்சி அடையாளத்தை கைவிட்டு த.மு.கூ. உறுப்பினராக கருதப்படுவர்)

    மதுரை சௌராஷ்டிரா மக்கள் ..பழமைவாதம், பெண்ணடிமைத்தனம், மதவெறி ... பாகம் 2

    Elangovan Muthiah : மதுரையிலுள்ள சௌராஷ்ட்ரா சமூகத்தினரில்
    பெரும்பாலோர் பாஜக ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்குப் பரவலாக ஆதரவுக் கருத்துகளும் எதிர்ப்புக் கருத்துகளும் வந்து சேர்ந்தன.
    அந்தப் பதிவைப் படித்த பிறகு நிறைய சௌராஷ்ட்ர சமூக நண்பர்கள் தனிப்பட்ட முறையில் என்னை அழைத்துப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள், நான் ஒரு பெரிய சமூகச் சிக்கலின் ஒரு நுனியை மட்டுமே தொட்டிருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தின.
    நானே, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பலர் சங்கிகளாக மாறியிருக்கிறார்கள் என்று நேரடியாக எழுதச் சங்கடப்பட்டுத்தான் பாஜக ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறேன் (இரண்டும் ஒரு வகையில் ஒன்றுதானோ?)
    பாஜகவை ஆதரிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட தேர்வு. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேல் பழமைவாத, இந்துத்துவ, சங்கி சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தும்போது, அது என்ன மாதிரியான பிற்போக்குத் தனமான விளைவுகளை அவர்களிடத்தில் குறிப்பாக புதிய தலைமுறை இளைஞர்களிடத்தில் ஏற்படுத்தும் என்பது சமூக ஆய்வுகளுக்குரியது.
    இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் பதிவு, சௌராஷ்ட்ர சமூகத்தினரின் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் சௌராஷ்ட்ர மொழியில் இடப்பட்டிருக்கிறது. என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பித் தந்தார். அதன் சுமாரான தமிழாக்கம் இதுதான்....

    செவ்வாய், 17 மார்ச், 2020

    95 நாடுகளுக்கு இதுவரை 2 இலட்சம் மருத்துவர்களைக் கியூபா அனுப்பியுள்ளது.

    https://cuba-solidarity.org.uk/news/article/3956/cuba-gives-permission-for-cruise-ship-carrying-corona-patients-to-dock-citing-solidarity-and-health-as-a-human-right?fbclid=IwAR2lRnYoPuKtOyxxUJH3ekOQFs6_txP6txVB3gRQsfbs_cH9LzsW3WQdqWY

    வி.சி. வில்வம் : கியூபாவில் பெரும் இயற்கைப் பேரிடர் வந்து மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்!
    "உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்", எனப் பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்!
    அமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை.
    பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப்பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன!
    அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், அய்ரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் பிடல் உருவாக்கினார்.
    உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள்.
    இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்!
    உலக நாடுகளே!