வெள்ளி, 20 மார்ச், 2020

நிர்பயா வழக்கு - 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேறியது!

நிர்பயா வழக்கு - குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் தினத்தந்தி :  டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. புதுடெல்லி, நிர்பயா வழக்கில் கைதான குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு குற்றவாளி பவன் குப்தா சார்பாக அளிக்கப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை பவன் ஜல்லாத் நிறைவேற்றினார்


tamil.oneindia.com/n  : டெல்லி: கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாளை நால்வரும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுகிறார்கள். வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் முகேஷ் சிங், அக்‌ஷய் தாக்கூர், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய நான்கு பேரும்ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுவார்கள் என்று திஹார் சிறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. சிறை அதிகாரிகள் புதன்கிழமை மரண தண்டனையை டம்மியாக டிரையல் செய்து பார்த்தனர். தூக்கு மேடையில் கட்டப்பட்ட கயிறு பீகார், பக்சர் சிறைச்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 10 கயிறுகள் பக்சர் சிறையிலிருந்து டெல்லி திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மீரட்டில் வசிக்கும் பவன் ஜல்லத் உத்தரபிரதேச சிறைச்சாலைத் துறை பணியாளர். மரணதண்டனை நிறைவேற்ற, திகார் சிறை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டுள்ளார். பவனுக்கு ஒரு தூக்குக்கு ரூ .15 ஆயிரம் ஊதியமாக, வழங்கப்படுகிறது. திகார் உள்ளே ஒரே நேரத்தில் நான்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம், பவன் ஜல்லத், ரூ.60,000 ஊதியம் பெற உள்ளார். பவனுடன், சிறை கண்காணிப்பாளர் மற்றும் சிறை மருத்துவர் போன்ற ஒரு சில அதிகாரிகள் மட்டுமே வெள்ளிக்கிழமை காலை சம்பவ இடத்தில் இருப்பார்கள்.

சிறை கண்காணிப்பாளர்கள் குற்றவாளிகளுடன் இன்று மாலையில் பேசுவார்கள், அவர்கள் கடிதம் ஏதேனும் எழுத விரும்புகிறீர்களா அல்லது இறுதி ஆசை இருக்கிறதா என்று கேட்பார்கள். அவர்களுக்கு இதுபோன்ற கேள்விகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது, "என்று பெயர் குறிப்பிட விரும்பாத சிறை அதிகாரி ஒருவர் கூறினார். அதிகபட்சம், காலை 6.30 மணிக்கு முன்னர் மரணதண்டனை பணிகள் அனைத்தும், நிறைவு செய்யப்படும் என்று அந்த அதிகாரி கூறினார். குற்றவாளிகள் அனைவரும், குறைந்தது 2-3 சிறை வார்டன்களால் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்கள் குற்றவாளிகளின் நகர்வுகளை அணு அணுவாக கண்காணிக்கிறார்கள


இதனிடையே, ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத சிறைத்துறை அதிகாரி ஒருவர், இந்த தகவலை, ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். புதன்கிழமைவரை குற்றவாளிகள் முகத்தில் பதற்றத்தின் அறிகுறி தெரியவில்லை. ஆனால் வியாழக்கிழமை அவர்கள் முகத்தில் பயம் தெரிந்தது. பேசவே இல்லை. மவுனமாக எதையோ யோசித்தபடியே இருக்கிறார்கள்


பேச்சு கிடையாது சில நாட்களுக்கு முன்பு வரை அவர்கள் மரண தண்டனை கைதிகளை போலவே தெரியவில்லை. தூக்கு தண்டனை ஏற்கனவே மூன்றுமுறை ஒத்திவைக்கப்பட்டது. எனவே அவர்கள் தெனாவெட்டாக காணப்பட்டனர். அவர்கள் தங்கள் கடைசி விருப்பமாக எந்த குறிப்பிட்ட கோரிக்கைகளையும் கூட முன்வைக்கவில்லை. மனச்சோர்வு அல்லது பயத்தின் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் புதன்கிழமை இரவு முதல், அவர்களின் நடத்தை மாறிவிட்டது. சிறைக் காவலர்களுடன் அவர்கள் அதிகம் பேசவில்லை, என்று இரண்டாவது அதிகாரி கூறியுள்ளார்.
கடைசியாக திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டவர் அப்சல் குரு. 2013ம் ஆண்டு, பிப்ரவரி 9ம் தேதி அன்று திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். 2001 நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குரு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இந்த தூக்கு தண்டனை நிறைவேறியிருந்தது. அதற்கு பிறகு நிர்பயா பலாத்கார குற்றவாளிகள் மூவரும்தான் நாளை தூக்கிலிடப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக