வெள்ளி, 20 மார்ச், 2020

22ம் தேதி ஞாயிறு அன்று யாரும் வெளியே வரவேண்டாம்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

மாலைமலர் : கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் 22ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
கொரோனா வைரவை பொதுமக்கள் விழிப்புணர்வோடு எதிர்கொள்ள வேண்டும். பொதுமக்கள் முடிந்த வரை
தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் 22 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம். 22-ந்தேதி கொரோனா வைரஸ்க்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.

மருத்துவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினர் போன்றவர்களுக்கு மற்றவர்கள் தொந்தரவு தர வேண்டாம். 22ந்தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிரூபிப்போம்.

வேலை இல்லாததால், ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. அச்சத்தினால் அத்தியாவசியப் பொருட்களை யாரும் வாங்கிக் குவிக்க வேண்டாம். பொருளாதார மந்தநிலையை போக்குவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இது மக்களுக்காக மக்களாகவே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்கு உத்தரவு ஆகும். ஒவ்வொரு குடிமகனும் குறைந்தபட்சம் பத்து சக குடிமக்களிடம் ஊரடங்கு என்றால் என்ன என்பது குறித்து விள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக