வெள்ளி, 20 மார்ச், 2020

கொரோனா உயிரிழப்பில் இத்தாலி முதலிடம் .. சீனாவை மிஞ்சியது .. வீடியோ


தினமலர் : ரோம்: கொரோனா உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் நிலையில் அதனால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. சீனாவில் இதுவரை 80,928 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 3,245 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் இதுவரை 41,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3,405 ஆனது. இதன் மூலம் கொரோனா பலி எண்ணிக்கை இத்தாலியில் சீனாவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இறப்பு விகிதமும் அங்கு அதிக அளவில் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் மட்டும், 475 பேர், இந்த வைரசால் உயிரிழந்து உள்ளனர் கொரோனா வைரஸ் சீனாவில் குறைந்துள்ள நிலையில், இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில், மிக வேகமாக பரவி வருகிறது. ஆறு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இத்தாலியில், மார்ச், 12 முதல், முழு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை உள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ''வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், இந்தத் தடை உத்தரவு, மேலும் நீட்டிக்கப்படும்,'' என, பிரதமர், குயுசிபே கான்டே கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக