சனி, 21 மார்ச், 2020

கொரோனா பாதிப்பு குறையவில்லை.. பொய் சொல்கிறது சீனா.. உள்ளூர் மீடியாவில் வெளியான பகீர் தகவல்

/tamil.oneindia.com/n : பீஜிங்: கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு, மற்றும் முதலில் பாதிப்பை எதிர்கொண்ட நாடு சீனா. ஆனால் தற்போது அங்கு சில பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும், மக்கள் வழக்கம் போல பணிகளுக்கு செல்வதாகவும், சீன அரசு தரப்பு தெரிவிக்கிறது.  ஆனால், இதில் மோசடி இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வூஹான் மாகாணத்தில், கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியபோதே, அதுகுறித்த வெளிப்படைத் தன்மையை சீனா பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வைரஸின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை கட்டுப்படுத்த எந்த மாதிரி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றி எல்லாம் சீன அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
 இதன் காரணமாகத்தான், உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் விஷயத்தில் மிகவும் தாமதமாக உலகநாடுகளுக்கு எச்சரிக்கை பிறப்பித்தது. அதற்குள்ளாக அது, இத்தாலி, ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது
< இயல்பு நிலை இந்த நிலையில்தான், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக வுஹான் மாகாணத்தை வெளி தொடர்புகள் இன்றி துண்டித்து வைத்திருந்தது அந்த நாட்டு அரசு. தற்போது, புதிய வைரஸ் பாதிப்புகள் எதுவும் உள்நாட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியிருப்போரிடம் சொற்ப அளவில் புதிதாக நோய் தாக்கம் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் சீனா தெரிவித்துள்ளது
ஆனால் அரசு ஊழியர்கள், 'கெய்சானிடம்' உண்மையில் இந்த தரவுகள் போலியானவை என்று கூறுகின்றன. பெய்ஜிங், ஜெஜியாங் நகரங்களின் மின்சார நுகர்வு அளவை சரிபார்க்கத் தொடங்கினோம். அங்கெல்லாம் மாவட்ட அதிகாரிகள் சும்மாவே மின்சார மீட்டர்களை ஓட விட மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்களாம். விளக்குகள், இயந்திரங்களை சும்மா ஓட விடுவதாகவும் தெரிகிறது. ஆலைகளில் மிஷின் ஓடுகிறது, ஆனால் ஊழியர்கள் வரவில்லை. ஊழியர்களின் வருகை பதிவுகளையும் பொய்யாக உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது
இப்படித்தான் போலியான அறிக்கையை, சீனாவின் மத்திய அரசுக்கு மாகாணங்கள் கொடுத்து வருகின்றன. இதை மத்திய அரசே சொல்லி செய்கிறார்களோ அதுவும் தெரியவில்லை. வூகானில் கூட இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக காண்பிக்க முயற்சிகள் நடந்தன. உணவு சப்ளை எப்படி நடக்கிறது என்பதை பற்றி ஆய்வு செய்ய 'மத்திய தலைவர்கள்' சென்றனர். இதன் மூலம் அங்கு இயல்பு நிலை திரும்பிவிட்டதாக காண்பிக்க முயற்சி நடைபெற்றது. அப்போது சில குடியிருப்பு வாசிகள், "போலி, போலி, எல்லாமே போலி" என கூச்சல் போடுகிறார்கள். இந்த வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. இவ்வாறு, CAIXIN ஊடகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக