வெள்ளி, 20 மார்ச், 2020

ஹீலர் பாஸ்கர் கைது .. கொரோனா பற்றி தவறான வதந்தியை பரப்பினார் .. வீடியோக்கள்

கரோனா வைரஸ் பாதிப்புக்கு மாற்றுமுறை சிகிச்சை அளிப்பதாகக் கூறி வந்த ஹீலர் பாஸ்கர், வதந்தி பரப்பியதாகக் கூறி கோவையில் கைது செய்யப்பட்டார். இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கரோனா பாதிப்புக்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 206 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், மாற்றுமுறை சிகிச்சை அளித்து கரோனாவைக் குணப்படுத்த முடியும் என்று சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஹீலர் பாஸ்கர் கூறிவந்தார். இதையடுத்து, கரோனா பாதிப்பு குறித்து வீண் வதந்திகளைப் பரப்பியதாகக் கூறி, ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக