சனி, 23 ஜூன், 2018

மன்சூர் அலிகான் சிறையில் உண்ணாவிரதம் .... எட்டுவழிசாலைக்கு தொடர் எதிர்ப்பு ...

tamilthehindu :சேலம் அருகே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர்
அலிகான் சென்னை - சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து இன்று முதல் சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது: ’’தமிழக அரசு கொண்டுவந்துள்ள சென்னை -சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்துப் பேசிய மன்சூர் அலிகான், இத்திட்டம் மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறினார்.
தமிழக அரசு இந்த எட்டுவழிச்சாலை திடடத்திற்கு ரூ .10 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக, ''[அரசு இத்திட்டத்தை கொண்டுவந்தால் எட்டு பேரை வெட்டுவேன்'' என்று மிரட்டல் விடுத்தார். கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதால் கடந்த 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று, சேலம் மாவட்ட நீதிமன்றம், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

லாலுவுக்கு பிணை விடுப்பு நீடிப்பு ...

லாலுவுக்கு ஜாமீன் நீட்டிப்பு!மின்னம்பலம்: மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கொன்றில் தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மருத்துவ சிகிச்சைக்காக ஆறு வார காலம் ஜாமீன் பெற்றிருந்தார். இவரது ஜாமீனை நீட்டித்து, நேற்று (ஜூன் 22) உத்தரவு பிறப்பித்தது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்.
1991-96 காலகட்டத்தில் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் ஒருங்கிணைந்திருந்தபோது, மாட்டுத் தீவன ஊழல் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது, அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உட்படச் சிலர் மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ. மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில், லாலு குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது ராஞ்சி சிபிஐ நீதிமன்றம். தும்கா மாவட்டக் கருவூல மோசடி வழக்கில் தண்டனை பெற்று, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதல் ராஞ்சி சிறையில் இருந்து வந்தார் லாலு. அவரது மூத்த மகன் தேஜ்பிரதாப் திருமணத்தை முன்னிட்டு, கடந்த மே மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். பாஜகவின் பாபர் மசூதி இடிப்பு ஊர்வலத்தை  பிகாரில் தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்த புரட்சியாளன் லாலுவுக்கு  எதிரான பழிவாங்கல் தொடர்கிறது

தமிழிசை : ஸ்டாலின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறார்! சேலம் எட்டு வழிசாலை ...

வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக ஸ்டாலின்: தமிழிசைமின்னம்பலம்: பசுமைப் பாதைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் திமுக, தனது எதிர்மறை அரசியலைக் கைவிட வேண்டுமென்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்று (ஜூன் 23) கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மத்திய அரசானது பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், மத்திய அரசையும் மோடியையும் எதிர்த்து வருபவர்கள் தலைகுனிய வேண்டுமென்றும் கூறினார்.
கர்நாடக முதலமைச்சராக குமாரசாமிக்குப் பதிலாக பாஜகவின் எடியூரப்பா இருந்திருந்தால், அங்கிருந்து ஆணைய உறுப்பினர்கள் யாரும் வரவில்லை என்றால், தமிழகத்தின் நிலையை எப்படி இருந்திருக்கும் என்று கேள்வியெழுப்பினார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் : எட்டுவழி சாலையை கைவிடும் வரை போராட்டம் ஓயாது!

“மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் சேலம் சென்னை பசுமை எட்டு வழிச் சாலையை அமைய விடமாட்டோம். இந்தத் திட்டம் ரத்தாகும் வரை தொடர்ந்து திமுக போராடும்’’ என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியிருக்கிறார்.
எட்டு வழிச் சாலை அமைக்கும் பணிக்காக மக்களை துன்புறுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இன்று சேலத்தில் சேலம் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டார்கள்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி நடந்த இந்த ஆர்பாட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்,

ஆளுநர் இங்கே ! நிர்மலா எங்கே? என்ற கோஷத்தால் கோபம் ... திமுகவினர் சரமாரியாக கைது

ஆளுநரைக் கோபப்படுத்திய வார்த்தை!மின்னம்பலம்: பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டியவர்கள் கூட ரிமாண்ட் செய்து சிறையில் அடைக்கப்படாத நிலையில் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்குக் கறுப்புக் கொடி காட்டிய திமுகவினரை ஏன் ரிமாண்ட் செய்தீர்கள் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி, அதற்காக இன்று சென்னையில் ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தூய்மை இந்தியா திட்டம் பணிகள் குறித்து ஆய்வு நடந்த வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக நாமக்கல் மாவட்ட திமுகவினர் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 192 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூலை 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தமயந்தி உத்தரவிட்டதையடுத்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீனாவில் 10000 நாய்களை கொன்று தின்று திருவிழா .. உலக நாடுகளின் எதிர்ப்புக்களை மீறி சீனர்கள் ...

tamil.oneindia.com- Mathi ;சீனா : சர்வதேச அமைப்புகள் பல கண்டனங்களும்
எதிர்ப்புகளும் தெரிவித்த போதும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கனஜோராக சீனாவின் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா நடைபெற்று வருகிறது.
சீனாவின் யூலினில் ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா நடைபெறும். நாளொன்றுக்கு சுமார் 1,000 நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படும். இத்திருவிழா காலத்தில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்படுகின்றன. இத்திருவிழாவையொட்டி 'நாய் கடத்தல்'களும் நடந்தேறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந் நாய்கறி திருவிழாவுக்கு சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இதை பொருட்படுத்தாமல் கடந்த 19-ந் தேதி முதல் இத்திருவிழா நடைபெற்று வருகிறது.

எட்டு வழிச்சாலை: ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுகவினர் , ஸ்டாலின் கைது.. ஆர்ப்பாட்டம் செய்த திராவிட முன்னேற்ற கழக ..

ஆளுநர் மாளிகை முற்றுகை - தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைதுBBC :எட்டு வழிசாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி,மு,க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.
சேலம்-சென்னை இடையில் பசுமை வழிசாலை அமைக்கும் திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்க திட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம் எதிரில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. தி.மு.க. துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏர் கலப்பை பூட்டிய மாடுகள் மற்றும் விளைபொருட்களுடன் விவசாயிகள் சிலர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தின் போது பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழகத்தில் மதுரவாயல் துறைமுக சாலை திட்டம் உள்பட கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசு முன்வராதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

2017: பாஜக ஆட்சியில் இந்தியாவின் 1% பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 73% பெற்றுவிட்டனர் ..

Swathi K : மோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா? -
வெங்கடேஷ் ஆத்ரேயா
உழைக்கும் மக்கள் மீது வரி விதி. கார்ப்பரேட்டுகளையும், பணக்காரர்களையும் குஷிப்படுத்து என்பதே மோடி ஆட்சியின் பொருளாதார மந்திரமாகும்.
ஐமுகூ-ஆட்சிக் காலத்தில் 2013-14இல் மத்திய அரசின் கலால் வரிகள் 169,455 கோடி ரூபாய்களாகும். இது 2014-15இல் 188,128 கோடி ரூபாய்களாகவும், 2015-16இல் 288,073 கோடி ரூபாய்களாகவும், 2016-17இல் 381,756 கோடி ரூபாய்களாகவும் உயர்ந்தன. 2017-18இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் அரசின் வருவாய் பல்கிப் பெருகியது.
2017-18ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் கலால் வரிகளின் பங்கு மிகவும் அதிகமாகும். இதே காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகளின் லாபமும் பல்கிப் பெருகியுள்ளதைக் காண முடியும். 2013-14இல் 394,678 கோடி ரூபாயாக இருந்தது 2014-15இல் 428,925 கோடி ரூபாயாகவும், 2015-16இல் 453,228 கோடி ரூபாயாகவும், 2016-17இல் 484,924 கோடி ரூபாயாகவும் உயர்ந்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மோடி அரசாங்கமானது, இரக்கமற்ற முறையில் உழைக்கும் மக்களின் மீது மறைமுக வரிகள் மூலமாக அநியாயமாக வரி விதித்துள்ள அதே சமயத்தில், கார்ப்பரேட்டுகளின் வருமானங்களின் மீதான வரிகள் பெயரளவில் மட்டுமே விதித்திருக்கிறது.

வானத்தையோ நிலத்தையோ எவ்விதம் நீங்கள் விற்கவோ வாங்கவோ முடியும்?

Prasanna Ramaswamy : செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல்
எழுதியது. ஆங்கிலத்திலிருந்து என் மொழிபெயர்ப்பு.
"வாஷிங்டனிலிருந்து ஜனாதிபதி எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக செய்தி அனுப்பியிருக்கிறார்.
வானத்தையோ நிலத்தையோ எவ்விதம் நீங்கள் விற்கவோ வாங்கவோ முடியும்? இது நாங்கள் கேட்டறியாதது. காற்றின் சுத்தத்தையும் நீரின் மினுக்கலையும் எவ்விதம் விற்க இயலும்? இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்கு புனிதமானது. பளபளக்கும் ஊசிக்காட்டின் ஒவ்வொரு சுள்ளியும், ஓசையிடும் சிள்வண்டுகளும். இவையெல்லாமே எங்கள் மக்களின் அனுபவங்களிலும் நினைவுகளிலும் மிகவும் புனிதம் வாய்ந்தவை.

மரங்களினுள்ளே ஓடும் உயிர்த்தன்மையை எங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தத்தை அறிவது போலவே அறிவோம். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். பூமி எங்களின் ஒரு பகுதி. நறுமணமுள்ள மலர்கள் எங்கள் சகோதரியர். கரடி, மான், வலிய பருந்து முதலியவை எங்கள் சகோதரர்கள். மலை முகடுகள், புல்வெளிகளில் உள்ளுறை அமிழ்து, குதிரைக் குட்டியின் கதகதப்பு, மனிதன், எல்லாம் எங்கள் குடும்பம்.

ஆளுநர் மீது கறுப்பு கொடி வீசிய 192 திமுகவினர் கைது

DMK workers 192 have been detained in Salem Central jail tamiloneindia :சேலம்: ஆளுநர் கார் மீது கறுப்புக்கொடி வீசிய திமுகவினர் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேலம்- சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 277 கி.மீ., தொலைவிற்கு 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனக்கூறி என்று கிராம மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் பஸ்நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார்.

நாம் தமிழர் இயக்கம் பார்ப்பனர்களின் சிலீப்பர் செல் கட்சி ...?

Kanimozhi MV : நாதக தொடங்கப்பட்டதே பெரியாரிய இயக்கங்கள் உருவாக்கிய
அடையாளங்களை அழிக்கத்தான்
அவர்கள் அணியும் கருப்புடை, பெரியாரிய இயக்கங்களின் தனி உடை, ஆனால் பெரியாரை , பெரியார் இயக்கங்களை குறை சொல்லும் இவர்கள் ஏன் அந்த கருப்பு நிறத்தை தேர்ந்தெடுத்தனர் ? முற்றிலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த தான் ; அதே போன்று அண்ணா- தம்பி என விளிப்பது , பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய போக்கு , திமுகவை குறை சொல்பவர்கள், அறிஞர் அண்ணாவே தமிழர் இல்லை எனச் சொல்பவர்கள் ஏன் பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய அந்த தனன்மையை திட்டமிட்டே பயன்படுத்துகின்றனர் .மையை திட்டமிட்டே பயன்படுத்துகின்றனர் . திராவிடர் இயக்கத்திற்கு திரைத் துறையில் ஒரு பட்டாளமே உண்டு ; அந்த பட்டாளம் கொள்கை அடிப்படையில் அண்ணாவின் - கலைஞரின் தமிழுக்காகவும் உருவானது, ஆனால் இவர்கள் வலிந்து அந்த பட்டாளத்தை ஜாதியின் அடிப்படையில்
உருவாக்க முனைகின்றனர்

காஷ்மீரில் குறிபார்த்து சுடுபவர்கள் - ஸ்னைப்பர் - வீரர்கள் குவிப்பு

ஸ்னைப்பர் வீரர்
Chinniah Kasi : ஸ்ரீநகர், ஜூன் 22- ஆளுநர் ஆட்சி அமலாக்கப்பட்டுள்ள ஜம்மு - செல்லும் ரேடார் கருவிகள் உட்பட, நவீன போர் கருவிகள் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜயகுமார் ஐ பி எஸ்
காஷ்மீரில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என்ற பெயரில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தசிறப்பு கமாண்டோ படையினர், அதிக அளவில்குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஸ்ரீநகர் அருகே உள்ள எல்லைபாதுகாப்பு படையின் முகாமில், கடத்தல் மீட்புஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம், தொலைவில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் அதிநவீன துப்பாக்கிகள், கட்டடங்களை ஊடுருவிச்
குடியிருப்புப் பகுதியிலும்  ஊடுருவி துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன்பெற்ற ஹெச்ஐடி கமாண்டோபடையைச் சேர்ந்த சுமார்12 ஸ்னிப்பர் வீரர்கள் கடந்த 2 வாரங்களாக அங்கு பயிற்சியில் இருக்கின்றனர். தேவையேற்படும் சூழலில் அந்த எல்லைப் பாதுகாப்புப்படையினர் முகாமில் சுமார் 100 என்எஸ்ஜிகமாண்டோ படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் ஸ்ரீ ரங்கம் வருகை... என்னதான் நடந்தது?

Devi Somasundaram : ஸ்ரீ ரங்கத்தில தன் கட்சி உறுப்பினர் விழாவுக்கு சென்ற ஸ்டாலின்,  கட்சி தலைவரா அதை ஏற்க வேண்டியது ஸ்டாலின் கடமை ..
அதை சுக்ர ப்ரித்தீ யாகம் செய்தார்ன்னு சில அதி மேதாவிள் எல்லாம்  எழுதிறார்கள் ..
அப்படி ஒரு யாகம் இருக்கான்னு கேட்டு" என்னடி புதுசா சொல்ற.
.நேக்கு தெரியாததுலாம் உனக்கு தெரியுதா அசடு"ன்னு பக்கதாத்து மாமா கிட்ட போன்ல திட்டு வாஙகினது தான் மிச்சம்...
ஸ்டாலின வழி மறிச்சு காரை நிறுத்தி பூர்ண கும்ப மரியாதைன்னு அடாவடி தனம் செய்தது பார்ப்பான் கும்பல்..
சரி இதை எல்லாம் பக்தாஸ் கூட்டம் பேசுதான்னு பாத்தா இல்ல. .அவாளுக்கு பதிலா அவா பி டீம் கம்பினிஸ்ட் கும்பல் பேசிட்டு இருக்கு. ..அம்பி பொலிட் பீரோ ல தான் யாகம் நடந்துச்சாம். .போய் சேவிச்சுக்கறது.
.இதே மாதிரி வீரமணி பேரன் இணையேற்பு பெரியார் திடல்ல அழைப்பிதழ் கூட அடிக்காம எளிமையா நடந்துச்சு. ..அதை நேரம் காலம் பாத்து நடந்துச்சுன்னு இதே கும்பல் பேசிட்டு அலைது.
நானும் கருத்தா எதும் பேசும்ன்னு பாக்றேன்..எங்க, எல்லாம் மாட்டு மூத்திர கும்பலாவே இருக்கு.

தோழர் வே.ஆனைமுத்து.. சமரசமில்லாத சமூகப் போராளிக்கு 94 ஆம் பிறந்தநாள்.

Kathiravan Mumbai : கொண்டாடுவோம். பெரியாரிய பெருத்தொண்டன்,சமூகநீதி
காப்பாளர்,சிந்தனையாளன் இதழ் ஆசிரியர்,
வாழும் பெரியாரியம். தமிழகத்தின் முதல் பகுத்தறிவாளர் "வெங்கடாச்சலப்ப நாயகர் "அவர்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் .
அய்யா ஆனைமுத்து அவர்களின் 94 வது பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். தமிழர் நட்புக் கழகம்
மும்பை. < ஆனைமுத்து - 94- பெரியாரைப் படிப்பது என்பது வேறு; புரிந்து உள்வாங்கிக் கொள்வது என்பது வேறு. கொள்கைகளை வெறும் தகவல்களாக மட்டும் தெரிந்துவைத்துக்கொள்வது என்பது இருவேறு இயற்கைகளுள் ஒன்று. அது பலபேருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் அதில் தெள்ளியராக இருக்கும் தோழர் வே.ஆனைமுத்து என்பவர் நான் வாழுங்காலத்தில் பார்த்த பழகிய பேரதிசயம்.
மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் இணைத்து வெற்றி கண்டவர். இந்தியா முழுவதும் அலைந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்புக்காக மண்டல் கமிஷன் உருவாகக் காரணமானவர். 'பெரியார் சிந்தனைகள்' என்னும் 20 நூல் தொகுதிகளை உருவாக்கியவர். "ஆனைமுத்துக் கருத்துக் கருவூலம்' என்னும் 22 நூல் தொகுதிகளை எழுதியவர்.

2019 தேர்தல் - யுத்தம் மட்டுமே பாஜகவின் ஒரே ஒரு தேர்தல் ஆயுதம்? காஷ்மீர் - பாகிஸ்தான் : ஹமாரா தேஷ் ஹோ..

சிவசங்கர் எஸ்.எஸ் : ஜம்மு கஷ்மீர் மாநில அரசில் பங்கேற்றிருந்த பாரதிய
ஜனதா கட்சி, அந்த அரசில் இருந்து விலகியிருக்கிறது.
அந்த விலகலுக்கு, அவர்கள் சொன்ன காரணம் தான் அபாரமானது.
அரசில் இருந்து விலகியதற்கான காரணத்தை இப்படி சொன்னார்கள், "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. மூத்தப் பத்திரிக்கையாளர் ஷுஜத் புஹாரி, ஸ்ரீநகரில் பட்டப்பகல் நேரத்தில் கொல்லப்பட்டது மிக கொடூரம். சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனதற்கு இந்த கொலையே சாட்சி. ஜம்மு, லடாக் பகுதிகள் வளர்ச்சிப் பணிகளில் புறக்கணிக்கப்பட்டன".
இவர்கள் சொன்ன இந்தக் காரணம் தீவிரமானது தான். அக்கறை செலுத்த வேண்டியது தான். அவசரமாக முடிவெடுக்க வேண்டிய பிரச்சினை தான். ஆனால், இது அத்தனையும் கஷ்மீரைத் தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தான் பொருந்தும்.
ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்பது, மறைந்த கஷ்மீரத்து சிங்கம் 'ஷேக் அப்துல்லா' காலத்திற்கு பின் கெட்டு போனது, போனது தான். இது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகால வரலாறு கொண்டது. ஏதோ இந்த மூன்று ஆண்டு ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டு போனது போல பா.ஜ.க அரற்றுவது, கொடுமை.

வெள்ளி, 22 ஜூன், 2018

என்ன செய்து விடுவீர்கள் எடப்பாடி ? Salem 8 Lane project is your waterloo.

Savukku : சேலம் 8 வழிச் சாலை அமைப்பதை எதிர்த்து, தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.  இத்திட்டத்தை எதிர்த்து பேசுபவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.  இரு நாட்களுக்கு முன், நடிகர் மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டார்.  நேற்று சுற்றுச் சூழலியல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார். இன்று மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதும், சட்டப்பேரவையில் இத்திட்டத்துக்கு ஆதரவாக முட்டுக் கொடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இவ்வாறு பேசினார். சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் , வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் .. இன்னும் 200 டன் கந்தக அமிலத்தை அகற்ற வேண்டும்!

THE HINDU TAMIL : ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இன்னும் 200 டன் கந்தக அமிலத்தை அகற்ற வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையில் ரசாயனம் சேமித்து வைக்கப்பட்டுள்ள டேங்கில் கசிவு ஏற்பட்டதாக கடந்த 16-ம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில், தூத்துக்குடி சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நிபுணர் குழுவினர் சோதனை நடத்தினர்.
ஆலையில், அதிகமாக கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதும், அதில், லேசான கசிவு ஏற்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. கந்தக அமிலத்தை அகற்றும் பணி 18-ம் தேதி மதியம் தொடங்கியது.

கணவருக்கு வி‌ஷம் கொடுத்த கேரள பெண்ணுக்கு 22 ஆண்டு சிறை . காதலனுடன் சிறையில் அடைப்பு

கணவருக்கு வி‌ஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு 22 ஆண்டு ஜெயில்: காதலனுடன் சிறையில் அடைப்புமாலைமலர் :கள்ளக்காதல் தகராறில் கணவரை கொன்ற கேரள பெண்ணுக்கு 22 ஆண்டு ஜெயில் தண்டனையும், கள்ளக்காதலனுக்கு 27 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் புனலூர் பகுதியை சேர்ந்தவர் சாம் ஆபிரகாம் (வயது 34). இவரது மனைவி ஷோபியா (32). இந்த தம்பதிக்கு 9 வயதில் மகன் உள்ளான்.
சாம் ஆபிரகாம் தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போன் நகரில் வசித்து வந்தார். மேலும் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியிலும் அவர் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டில் சாம் ஆபிரகாம் இறந்துகிடந்தார். அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மனைவி ஷோபியா தெரிவித்தார். மேலும் சாம் ஆபிரகாம் உடல் ஆஸ்திரேலியாவில் இருந்து புனலூருக்கு அனுப்பப்பட்டு அங்கு அடக்கமும் செய்யப்பட்டது.

9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு

9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசுமாலைமலர் :காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒன்பது பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

எடப்பாடி அவமரியாதை, விஜய் கோபம்!

டிஜிட்டல் திண்ணை:   எடப்பாடி அவமரியாதை, விஜய் கோபம்!m “ மின்னம்பலம்: இன்று நடிகர் விஜய் பிறந்தநாள். நேற்று மாலை அவரது புதிய படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. இன்று அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கும் டிராபிக் ராமசாமி படமும் ரிலீஸ் ஆகியிருக்கிறது.எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் விஜய் அப்செட்டில் இருப்பதாகவே சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதற்கு காரணம் அவரது அப்பாவை நேற்று தலைமைச் செயலகத்தில் அவமரியாதையாக நடத்தியதுதான்.
‘டிராபிக் ராமசாமி படத்தில் சந்திரசேகர் நடிப்பதாகச் சொன்னபோதே அதை வேண்டாம் என தடுத்தார் விஜய். ‘இந்தப் படத்துல நீங்க நடிச்சா அரசாங்கத்தை பகைச்சுக்க வேண்டியிருக்கும். அதனால நமக்கு சிக்கல் வரும்..’ என்று சொன்னாராம்.

ஸ்டாலின் : சேலம் சாலை ... அரசபயங்கரவாதம் மூலம் நிறைவேற்ற முயலவேண்டாம்!


மின்னம்பலம் : பசுமைவழிச் சாலை திட்டத்தை எப்படியும் நிறைவேற்றிய தீர வேண்டும் என்று முதல்வர் துடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், “சென்னை- சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி சாலை பசுமைவழிச் சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் இயற்கை வளங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திட்டத்தை எதிர்ப்பவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் விருப்பத்தோடு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் அல்லது மாற்று வழியில் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 22) விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை- சேலம் எட்டு வழி பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

5 பெண் NGO செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் கூட்டு வன்புணர்வு

BBC :ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆள் கடத்தலுக்கு எதிராக தெருவோர நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து பெண் செயற்பாட்டாளர்கள், கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.அந்தப் பெண்கள் வலுக்கட்டாயமாக கார்களில் ஏற்றிச் செல்லப்பட்டு யாருமற்ற ஓர் இடத்தில் வன்புணர்வு செய்யப்பட்டதாக போலீசார், பிபிசியிடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக போலீசார் கூறுகின்றனர், ஆனால் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
குந்தி மாவட்டத்தில் ஆள் கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றும் பெண்கள் சென்றனர்.
"தெருவோர நாடகம் நடத்தி முடித்தபிறகு அவர்கள் ஒரு மிஷனரி பள்ளிக்குச் சென்றனர். அப்போது பள்ளிக்கு சென்ற ஆயுதம் ஏந்திய சிலர், குழுவில் இருந்த ஐந்து பெண்களை கடத்தி, காட்டுக்கு கொண்டு சென்று வன்புணர்வு செய்தனர்" என்று மூத்த போலிஸ் அதிகாரி ஏ.வி.ஹொம்கர், பிபிசி செய்தியாளர் நிராஜ் சின்ஹாவிடம் கூறினார்.

எடப்பாடியும் பன்னீரும் சிறைக்கு செல்வார்கள் .. திமுக ஆட்சி அமைந்தது அதிமுக ஆட்சியின் ஊழல்கள்

எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சிறைக்குச் செல்வர்!மின்னமபலம்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அப்போது எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சிறைக்குச் செல்வர் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று (ஜூன் 21) நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஸ்டாலின், “நிர்வாகிகளுடன் நடந்த கள ஆய்வுக்குப் பிறகு ஓரிரு மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட உள்ளன. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... சிறுபான்மையினருக்கு உரிய மரியாதையை, அங்கீகாரத்தை திமுக தலைவர் கருணாநிதி வழங்கியுள்ளார். காதர் மொய்தீன் அவர்கள் மனைவியை நலம் விசாரிக்கச் சென்றிருந்தபோது, ‘அடுத்த முறை நீ இங்கு வரும்போது முதல்வராக வர வேண்டும்’ என்று அவர் கூறினார். அது அவருடைய உணர்வு மட்டுமல்ல; நாட்டிலுள்ள அனைத்து மக்களின் உணர்வாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

அமித் ஷா 5 நாட்களில் ரூ. 745.59 கோடி ரூபாய் டெபாசிட் ... பணமதிப்பு இழப்பில் ..

அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் அதிக பணம் டெபாசிட்!மின்னம்பலம்: பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் பணமதிப்பழிப்பு நேரத்தில் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் இந்த பணமதிப்பழிப்பு அறிவிப்பை வெளியிடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர், மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் மூலம் கறுப்புப் பணம் பரிமாற்றம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாகக் கருதி ஐந்து நாட்கள் கழித்து நவம்பர் 14, 2016 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டது.

ஆசிரியரின் பணிமாறுதலை கண்ணீரால் மாற்றிய மாணவர்கள் ... திருவள்ளூர் அரசினர் உயர்நிலை ...

Natarajan Rajakumar Rajkamal : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே
வெளியகரம் அரசினர் உயர்நிலை பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பகவான், சுகுணா ஆகியோருக்கு நேற்று முன்தினம் பணி மாறுதல் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து மாணவ–மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்தனர். இவர்களில் பகவான் திருத்தணி அருகே அருங்குளத்திற்கும், சுகுணா வேலஞ்சேரிக்கும் பணி மாறுதலானார்கள்.
இந்த நிலையில் பணிவிடுவிப்பு கடிதம் பெற ஆசிரியர் பகவான் நேற்று பள்ளிக்கு வந்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்திடம் அவர் பணிவிடுவிப்பு கடிதம் பெற்றுக்கொண்டு அவர் பள்ளியை விட்டு வெளியே வந்தார்.
அப்போது ஆசிரியர் வந்த தகவலறிந்து ஏராளமான மாணவ–மாணவிகள் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை செல்ல விடாமல் தடுத்தனர். ‘‘நீங்கள் வேறு பள்ளிக்கு சென்றால் நாங்கள் பள்ளிக் கூடத்துக்கே வரமாட்டோம்’’ என்று மாணவ–மாணவிகள் உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதை கண்டு ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டார்.

வியாழன், 21 ஜூன், 2018

சேலம் .... ராணுவ எட்டுவழி ஆக்கிரமிப்பு சாலை ! வயல்களை தோட்டங்களை அழித்து ராணுவ கட்டமைப்பு?

மின்னம்பலம் - ஆரா: சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலைக்கான ஏற்பாடுகள் இதுவரை தமிழகத்தில் எந்த சாலைத் திட்டத்துக்கும் பயன்படுத்தப்படாத தொழில்நுட்பக் கருவிகளோடும், அதிகார கெடுபிடிகளோடும் நடத்தப்பட்டு வருகின்றன.
பசுமைச் சாலை என்கிற  ராணுவச்  சாலை!நிலத்தை அளக்க வரும்போதே அரசு அதிகாரிகளும், அவர்களுக்குப் பாதுகாப்பாக போலீஸாரும் குவிக்கப்படுகின்றனர். அங்கே எதிர்ப்புக்காக ஒரு சிறு குரல் எழுந்தால்கூட உடனடியாக அந்தக் குரலின் குரல்வளை நெரிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பரம்பரை பரம்பரையாகத் தங்கள் விவசாய பூமியை அனுபவித்து வரும் மக்கள் ஒரே பகலில் தூக்கித் தூர வீசப்படுகிறார்கள். கேட்டால் கைது, போலீஸ் நிலையம் என்று துன்புறுத்தப்படுகிறார்கள்.
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இப்போது இந்தக் கொடுமைகள் ஆரம்பித்துள்ளன. அடுத்து இந்தப் பசுமை எட்டு வழிச் சாலை அமையும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் போராட்டங்களும் கடுமையான ஒடுக்குமுறைகளும் அரங்கேறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரிப்பதை அமேரிக்கா கைவிட்டது ! கடும் அழுத்தம் காரணமாக ட்ரம்ப்

BBC : குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை
பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் இருதரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவொன்றை தொடர் அழுத்தத்தின் காரணமாக பிறப்பித்துள்ளார்.
ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் கைதுசெய்யப்படும்போது பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியாக இடத்தில் வைக்கப்படுவது குறித்து டிரம்பின் கொள்கைக்கு முன்னதாக சர்வதேச ரீதியாக பலத்த எதிர்ப்பு எழுந்தது.
டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய ஆணை எப்போதிலிருந்து அமலுக்கு வரும் எனபது தெளிவாக தெரியவில்லை.
ஆனால், ஏற்கனவே அமலில் இருந்த உத்தரவின்படி பிரிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து டிரம்ப் பிறப்பித்த இந்த புதிய உத்தரவில் எதுவும் குறிப்பிடவில்லை. e>கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை பெற்றோரிடம் பிரிக்கப்பட்டு சுமார் 2342 குழந்தைகள் தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி

சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சிமாலைமலர் : சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ChennaiSalemGreenExpressWay #FarmersProtest சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40 ஆயிரம் வீடுகள், 8 மலைகளும் உடைக்கப்பட உள்ளது. சாலை அமைப்பதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள். சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று சேலத்தை அடுத்த காரிப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி பகுதிகளில் நில அளவீடு பணி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு தூண்டியவர்கள் கைது செய்யப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து நில அளவீடு பணிகள் துரிதமாக நடக்கிறது.

தூத்துக்குடி.. எதிர்ப்பு தெரிவித்த நடிகை நிலானி நீதிமன்றத்தில் ...


நக்கீரன் :தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி நிலா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். படப்பிடிப்பில் இருந்தபோது போலீஸ் உடையிலேயே அவர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து பேசியதோடு, காக்கிச் சட்டையை அணியவே வெட்கப்படுவதாகவும் கூறியிருந்தார். இந்த வீடியோ வாட்ஸ்அப்புகளில் வைரலாக பரவியது. அவர் மீது சென்னை வடபழனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இன்று அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், நிலானி நிலாவுக்கு ஜூலை 5 வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டது.

சேலம் எட்டுவழிசாலைக்கு அளவீட்டு பணிகள் தொடங்கியது .. மக்கள் கண்ணீர் கதறல் youtube


தினத்தந்தி :சேலம் அருகே 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கான நில அளவீடு செய்யும் பணி 3-வது நாளாக நேற்று நடந்தது. அயோத்தியாப்பட்டணம், சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
 இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு பணியை அரசு தொடங்கி உள்ளது. இந்த சாலை திட்டத்தில், ஆயிரக்கணக்கான வீடுகள், 8 மலைகள் உடைக்கப்பட உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான மஞ்சவாடியில் இருந்து சேலம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி வரை இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த விவசாய நிலங்களில் எல்லைக்கல் ஊன்றி அளவீடு செய்யும் பணியில் கடந்த 18-ந் தேதி முதல் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு பயங்கரவாதிகள்!-விபத்து என்று வழக்கு பதிந்த உ.பி. போலீஸ்


Chinniah Kasi : உ.பி. மாநிலத்தில் பசுவதை செய்ததாகக் கூறி வெறியாட்டம்
இஸ்லாமியரை அடித்துக் கொன்ற குண்டர்கள்!-விபத்து என்று வழக்கு பதிந்த உ.பி. போலீஸ்
இதனிடையே, வீடியோ பதிவுகள் மிகக் தெளிவாக இருந்தும், காசிம் மற்றும் அவரது நண்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாகவும், அதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையிலேயே, இ.பி.கோ. 307 (கொலை முயற்சி), 302 (கொலை) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 25 பேர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
க்னோ, ஜூன் 20 -
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில், மேலும் ஒரு இஸ்லாமியர் பசு குண்டர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொல்லப்பட்ட இஸ்லாமியர், பசுவை வதைத்தார் என்று நடக்காத ஒரு சம்பவத்தை கூறி இந்த படுகொலையை பசு குண்டர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

கோவை மாநகர குடிநீர் விநியோகிக்கம் பிரெஞ்சு கம்பெனிக்கு விற்பனை ... 26 வருடங்களுக்கு உரிமம் ... எடப்படியும் மோடியும் எத்தனை கோடிகள் ....?

Suez bags 400 Million euro contract to improve water distribution in Coimbatore : Coimbatore City Municipal Corporation has chosen SUEZ to manage and operate the water distribution system within the entire city to ensure continuous drinking water access to its 1.6 million inhabitants. The 26-year project, worth near €400 million, is the largest water services contract won by SUEZ in India.
Chinniah Kasi : கோவை மக்கள் அதிர்ச்சி
குடிநீர் விநியோகிக்க பிரெஞ்சு கம்பெனிக்கு உரிமம்
கோயம்புத்தூர், ஜுன் 20-கோவை மாநகரின் குடிநீர் விநியோகிக்கும் உரிமம் பிரான்ஸ்நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்குரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு 26வருடங்களுக்கு வழங்கப்பட்டிருக் கிறது. இது கோவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. கோவை நகருக்கு சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோவை மாநகராட்சியில் 2018-19ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை இந்தாண்டு துவக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பற்றாக்குறை ஏதுமின்றி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் 24 மணிநேரமும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அம்ரூட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படிபில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 125 எம்.எல்.டி, சிறுவாணி குடிநீர் திட்டத்தின்படி நாளொன்றுக்கு 75எம்.எல்.டி என மொத்தம் 200 எம்.எல்.டி குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதற்காக பொது மக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் ரூ. 556.57 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை மேற்கொள்ள 2015லேயே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவில் ஆர்டர்லி முறை ஒழிகிறது: பினராயி விஜயன் அதிரடி ... டவாலி சேவகனையும் ஒழிசிடுங்க


tamilthehindu : ஆங்கிலேயர் காலத்தில் இருந்து காவல் துறையில் பின்பற்றப்பட்டுவரும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும். மனித உரிமைகள் மீறப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் இன்று உறுதியளித்தார் திருவனந்தபுரத்தில் ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக இருப்பவர் சுதேஷ் குமார். இவரது அலுவலக கார் டிரைவரான கவாஸ்கர் காரை தாமதமாக எடுத்து வந்தார் என்பதற்காக ஏடிஜிபி மகள் ஸ்னிகிதா குமார் அவரை கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் கவாஸ்கர் ‘காரை எடுக்க முடியாது’ என்று கூறவே, அவரின் கழுத்திலும், முகத்திலும் தனது செல்போனால் தாக்கியுள்ளார்.இடமாற்றம் தாக்குதலுக்கு ஆளான காவலர் கவாஸ்கர், போலீஸ் ஏடிஜிபி சுதேஸ் குமார் இது குறித்து கவாஸ்கர் போலீஸில் புகார் செய்ய முயற்சிக்கவே உயரதிகாரிகள் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், அந்த மிரட்டலுக்குப் பணியாததால், ஏடிஜிபி மகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல, ஸ்னிகிதாவும் பதிலுக்கு கவாஸ்கர் மீது புகார் அளித்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் விஸ்வரூபம் எடுக்கவே, போலீஸ் ஏடிஜிபி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

புதன், 20 ஜூன், 2018

வேல்முருகன் கைது மோடியின் ஆலோசனை...?

பிரதமர் உத்தரவின் பேரில் கைது: வேல்முருகன்மின்னம்பலம்: பிரதமர் மோடி உத்தரவின் பேரில்தான் தமிழக அரசு தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்ததாக, புழல் சிறையிலிருந்து வெளிவந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களைச் சந்திக்க சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல்நலம் பாதித்து ஸ்டான்லி மருத்துவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்ற வேல்முருகனை, நெய்வேலி முற்றுகை தொடர்பாக தேசத் துரோக வழக்கில் நெய்வேலி காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஷ்மீரில் ராணுவ ஆட்சி..? ஓராண்டுக்கு தேர்தல் கிடையாது ... உமர் அப்துல்லா கடும் கண்டனம்

THE HINDU TAMIL : காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சில வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம், உடனடியாக புதிய அரசு அமைய வாய்ப்பில்லை’ என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் தலைவர் கவிந்தர் குப்தா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சட்டசபையை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துக் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி நடத்தின. கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பால் அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக கட்சி வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்து, கடிதத்தை ஆளுநர் என்.வோராவிடம் அளித்தார்.
மேலும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக்கட்சியும் முன்வரவில்லை இதனால், மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காத சூழலில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் விலகல்

THE HINDU TAMIL: நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா ராஜினாமா செய்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
சொந்த அலுவல்கள்காரணமாக, பதவியை ராஜினமா செய்துவிட்டு அமெரிக்கா செல்ல அரவிந்த் சுப்பிரமணியன் விருப்பம் தெரிவித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியம் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டே இவரின் பதவி முடிந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதத்துடன் பதவிக்காலம் முடியும் நிலையில் எப்போது அரவிந்த் சுப்பிரமணியன் விலகுவார் எனக் குறிப்பிடவில்லை.

ஸ்டெர்லைட் மின் இணைப்பு வழங்க வேண்டுமா? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் ..

tamilthehindu : ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா,
வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் அரசாணையின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மேலும், ஆலைக்கான மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உருக்குப் பிரிவு அருகேயுள்ள கந்தக அமிலம் சேமிப்பு டேங்கில் கசிவு இருப்பது போலீஸ் ரோந்துப் பணியின்போது கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ஏதேனும் விபத்து ஏற்படாமல் தடுக்க, கந்தக அமிலம் கசிவைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க எங்களை அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

எஸ் வி சேகருக்கு ஜாமீன் கிடைத்தது .. எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில்


மாலைமலர்: பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர்
எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சென்னை: பா.ஜனதா கட்சி பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எஸ்.வி. சேகர் மீது சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.