சனி, 23 ஜூன், 2018

தோழர் வே.ஆனைமுத்து.. சமரசமில்லாத சமூகப் போராளிக்கு 94 ஆம் பிறந்தநாள்.

Kathiravan Mumbai : கொண்டாடுவோம். பெரியாரிய பெருத்தொண்டன்,சமூகநீதி
காப்பாளர்,சிந்தனையாளன் இதழ் ஆசிரியர்,
வாழும் பெரியாரியம். தமிழகத்தின் முதல் பகுத்தறிவாளர் "வெங்கடாச்சலப்ப நாயகர் "அவர்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் .
அய்யா ஆனைமுத்து அவர்களின் 94 வது பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். தமிழர் நட்புக் கழகம்
மும்பை. < ஆனைமுத்து - 94- பெரியாரைப் படிப்பது என்பது வேறு; புரிந்து உள்வாங்கிக் கொள்வது என்பது வேறு. கொள்கைகளை வெறும் தகவல்களாக மட்டும் தெரிந்துவைத்துக்கொள்வது என்பது இருவேறு இயற்கைகளுள் ஒன்று. அது பலபேருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் அதில் தெள்ளியராக இருக்கும் தோழர் வே.ஆனைமுத்து என்பவர் நான் வாழுங்காலத்தில் பார்த்த பழகிய பேரதிசயம்.
மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் இணைத்து வெற்றி கண்டவர். இந்தியா முழுவதும் அலைந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்புக்காக மண்டல் கமிஷன் உருவாகக் காரணமானவர். 'பெரியார் சிந்தனைகள்' என்னும் 20 நூல் தொகுதிகளை உருவாக்கியவர். "ஆனைமுத்துக் கருத்துக் கருவூலம்' என்னும் 22 நூல் தொகுதிகளை எழுதியவர்.

பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் தூய்மையானவர். வாக்குவங்கி அரசியலின் தோலுரித்துத் தொங்கவிடும் சமரசமில்லாத சமூகப் போராளிக்கு 94 ஆம் பிறந்தநாள்.
வாழ்த்துவோம் தோழர் வே.ஆனைமுத்துவை!
......
இன்று 94 வது பிறந்த நாள் ஆனைமுத்து அய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்த விரும்புவோர்.
வே.ஆனைமுத்து
8/2 இராசரத்தினம் தெரு 2 வது மாடி
ஏஜி மருத்துவமனை எதிரில், வித்தியா திரையரங்கம் அருகில்.
மேற்குத் தாம்பரம்
சென்னை 45
அலைப் பேசி: 9444804980.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக