சனி, 23 ஜூன், 2018

நாம் தமிழர் இயக்கம் பார்ப்பனர்களின் சிலீப்பர் செல் கட்சி ...?

Kanimozhi MV : நாதக தொடங்கப்பட்டதே பெரியாரிய இயக்கங்கள் உருவாக்கிய
அடையாளங்களை அழிக்கத்தான்
அவர்கள் அணியும் கருப்புடை, பெரியாரிய இயக்கங்களின் தனி உடை, ஆனால் பெரியாரை , பெரியார் இயக்கங்களை குறை சொல்லும் இவர்கள் ஏன் அந்த கருப்பு நிறத்தை தேர்ந்தெடுத்தனர் ? முற்றிலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த தான் ; அதே போன்று அண்ணா- தம்பி என விளிப்பது , பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய போக்கு , திமுகவை குறை சொல்பவர்கள், அறிஞர் அண்ணாவே தமிழர் இல்லை எனச் சொல்பவர்கள் ஏன் பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய அந்த தனன்மையை திட்டமிட்டே பயன்படுத்துகின்றனர் .மையை திட்டமிட்டே பயன்படுத்துகின்றனர் . திராவிடர் இயக்கத்திற்கு திரைத் துறையில் ஒரு பட்டாளமே உண்டு ; அந்த பட்டாளம் கொள்கை அடிப்படையில் அண்ணாவின் - கலைஞரின் தமிழுக்காகவும் உருவானது, ஆனால் இவர்கள் வலிந்து அந்த பட்டாளத்தை ஜாதியின் அடிப்படையில்
உருவாக்க முனைகின்றனர்

சீமான் முதலில் திராவிடர் இயக்கத்தில் இருந்ததற்கு காரணமும் கூட அங்கு இருக்கும் திமுக எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டி அவர்களை தன் பக்கம் இழுக்கவே!
சே குவேராவை முதலில் அவர்கள் பிடித்துக்கொண்டு அலைந்ததற்கும் காரணம் , பெரியாரின் தாக்கத்தை தமிழ்நாட்டில் இளைஞர்கள் நடுவில் குறைக்கவே;
சீமான் மட்டுமல்ல தமிழ்த்தேசியம் பேசும் அனைவருக்கும் திராவிடர் இயக்க கட்டமைப்பை அழிப்பதில் அவ்வளவு ஆர்வம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக