வியாழன், 21 ஜூன், 2018

இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு பயங்கரவாதிகள்!-விபத்து என்று வழக்கு பதிந்த உ.பி. போலீஸ்


Chinniah Kasi : உ.பி. மாநிலத்தில் பசுவதை செய்ததாகக் கூறி வெறியாட்டம்
இஸ்லாமியரை அடித்துக் கொன்ற குண்டர்கள்!-விபத்து என்று வழக்கு பதிந்த உ.பி. போலீஸ்
இதனிடையே, வீடியோ பதிவுகள் மிகக் தெளிவாக இருந்தும், காசிம் மற்றும் அவரது நண்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாகவும், அதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையிலேயே, இ.பி.கோ. 307 (கொலை முயற்சி), 302 (கொலை) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 25 பேர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
க்னோ, ஜூன் 20 -
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில், மேலும் ஒரு இஸ்லாமியர் பசு குண்டர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொல்லப்பட்ட இஸ்லாமியர், பசுவை வதைத்தார் என்று நடக்காத ஒரு சம்பவத்தை கூறி இந்த படுகொலையை பசு குண்டர்கள் அரங்கேற்றியுள்ளனர்.


உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டிற்கு அருகில் பஜீரா குர்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காசிம் (45) மற்றும் அவரது நண்பர் சமயதீன் (55). இவர்கள் தங்களின் வயலில் புகுந்த ஒரு பசுவை விரட்டியுள்ளனர். ஆனால், இவர்கள் பசுவைக் கடத்த முயற்சிப்பதாக, வதந்தி பரப்பிய பசு குண்டர்கள், சுமார் 30-க்கும்மேற்பட்டோருடன் சென்று, வயலில்நின்று கொண்டிருந்த காசிம், அவரது நண்பர் சமயதீன் ஆகியோர் மீது உருட்டுக் கட்டைகளால் மிகக்கொடூரமாக கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் காசிம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்ட நிலையில்,அவரது நண்பர் சமயதீன் ஆபத்தானநிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நீண்டநேரமாக நடந்த இத்தாக்குதலைப் பற்றி தகவலறிந்து, உறவினர்களும், காவல்துறையினரும் வந்தே, பசு குண்டர்களிடமிருந்து காசிமின் உடலையும், சமயதீனையும் மீட்டுள்ளனர்.காசிம் படுகொலைச் சம்பவம்,வீடியோ பதிவாகவும் வெளியானதால், உத்தரப்பிரதேசத்தில் அதுதற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரு கும்பல் காசிமையும் அவரதுநண்பரையும் தாக்குவது, தாக்கப் பட்டவர்கள் கீழே விழுந்து கிடப்பதுஆகிய காட்சிகளுடன், தாக்குதலின்போது, அந்த வெறிக்கும்பல், ‘பசுவதைக்கு இது சரியான தண்டனை’ என்று கூச்சலிடுவது வீடியோ காட்சியாக பதிவாகியுள் ளது. சாகும் நிலையில், காசிம் தண்ணீர் கேட்கிறார்; ஆனால், தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று சிலர் கூறுவதும் அந்த காட்சியில் இடம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக