இது உங்களுக்காக மட்டுமல்ல. உங்களை நம்பியுள்ள உங்கள் குடும்பத்தாருக்காக,
உங்கள் மனைவிக்காக அல்லது கணவனுக்காக; உங்கள் பிள்ளைகளுக்காக. இக்காலத்தில்
30 வயதிலே மாரரடைப்பால் இறப்பது நிகழும்போது இதில் எச்சரிக்கை கட்டாயம் வேண்டும்.
காலையில்
ஒரு துண்டு இஞ்சி. தோல் நீக்கி, தண்ணீருடன் வாயில் போட்டு மென்று
விழுங்குங்கள். இது உங்கள் இடுப்பில் விழும் மடிப்புச் சதையைப் போக்கும்.
பித்தம், மயக்கம் வராமல் காக்கும். உடலினுள்ள கொலஸ்ட்டரால் அளவைக்
கட்டுக்குள் வைக்கும்.
பிற்பகல் உணவுக்குப்பின் இரண்டு பச்சைப் பூண்டுப் பல்லை தண்ணீருடன் சேர்த்து மென்று விழுங்குங்கள்.